ரத்தன் டாடா மறைந்து 1 வருடம் முழுசா முடியல.. அதுக்குள்ள டாடா உயர்மட்ட நிர்வாகத்தில் பிரச்சனை..!

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியமான டாடா குழுமம் ரத்தன் டாடா மறைவிற்கு பின்பு அதன் உயர்மட்ட நிர்வாகத்தில் சைரஸ் மிஸ்திரி விவகாரத்திற்கு பின்பு ஒரு பதற்றம் உருவாகியுள்ளது.

டாடா டிரஸ்ட்ஸ் உறுப்பினர்களிடையே ஏற்பட்ட மோதலால் தற்போது மத்திய அரசு தலையிட்டு பிரச்சனையை சரி செய்யும் அளவுக்கு சூழ்நிலை உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரத்தன் டாடா மறைந்து 1 வருடம் முழுசா முடியல.. அதுக்குள்ள டாடா உயர்மட்ட நிர்வாகத்தில் பிரச்சனை..!

டாடா குழுமம், ஆட்டோமொபைல், தகவல் தொழில்நுட்பம், ஹோட்டல்கள் உள்ளிட்ட பல துறைகளில் செயல்படும் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியம் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த 27.85 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சாம்ராஜ்ஜியத்தின் தலையாய நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனத்தில் டாடா டிரஸ்ட் சார்பாக யாரை உட்கார வைப்பது என்பதில் தான் தற்போதைய முக்கிய பிரச்சனையாக உள்ளது.

டாடா டிரஸ்ட்ஸ் என்பது டாடா குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு அமைப்பு, இந்த அமைப்பு டாடா சன்ஸ் நிறுவனத்தில் சுமார் 66 சதவீத பங்குகளை வைத்துள்ளன, இதன் மூலம் டாடா சன்ஸ் வாயிலாக டாடா குழுமத்தின் முடிவுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது டாடா டிரஸ்ட்.

இந்த நிலையில் டாடா சன்ஸ் நிர்வாகத்தில், டாடா டிரஸ்ட் சார்பாக உட்கார வைக்கப்படும் நபர் தொடர்பாக சக உறுப்பினர்களிடையே மோதல் தீவிரமடைந்தது, குறிப்பாக செப்டம்பர் மாதத்தில் நடந்த கூட்டத்தில் முன்னாள் பாதுகாப்பு செயலர் விஜய் சிங்கின் மறுநியமனத்தை எதிர்த்து, புதிய நியமன இயக்குநர்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இந்த மோதல் டாடா டிரஸ்ட் நிர்வாக குழுவில் இருக்கும் நீண்டகால உறுப்பினர்கள் மத்தியில் பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது. மேலும் இந்த நியணம் டாடா சன்ஸ் நிறுவனத்தில் டாடா டிரஸ்ட்-க்கு பின் அதிக பங்குகளை வைத்திருக்கும் ஷாப்பூர்ஜி பல்லோன்ஜி குழுமம் போன்ற பிற உரிமையாளர்களின் நலன்களையும் பாதிக்கலாம் என்ற வாதம் எழுத்துள்ளது.

ரத்தன் டாடா மறைந்து 1 வருடம் முழுசா முடியல.. அதுக்குள்ள டாடா உயர்மட்ட நிர்வாகத்தில் பிரச்சனை..!

இது நாள் வரையில் ரத்தன் டாடா தான் டாடா டிரஸ்ட் அமைப்பின் தலைவராக இருந்தார், அவரது மறைவுக்கு வரையில் டாடா டிரஸ்ட் மற்றும் டாடா சன்ஸ் மத்தியிலான உறவு சிறப்பாக இருந்தது. இரு அமைப்புகளிலும் ரத்தன் டாடா தேர்வு செய்யும் நபர் தான் இயக்குனர்களாக நியமிக்கப்படுவார்கள்.

ரத்தன் டாடா-வின் ஆதிக்கம் அவருடைய காலக்கட்டத்தில் அதிகமாக இருந்தது, ஆனால் அவரின் மறைவிற்கு பின் நோயல் டாடா, டாடா டிர்ஸ்ட் அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டார். டாடா குடும்ப உறுப்பினராக இருந்தாலும், ரத்தன் டாடா அளவிற்கான ஆதிக்கம் இன்னும் டாடா உயர்மட்ட நிர்வாகத்தில் வரவில்லை.

ரத்தன் டாடா மறைந்து 1 வருடம் முழுசா முடியல.. அதுக்குள்ள டாடா உயர்மட்ட நிர்வாகத்தில் பிரச்சனை..!

தற்போது டாடா டிரஸ்ட்ஸ் உள்ள உறுப்பினர்கள் இரு குழுக்களாகப் பிரிந்துள்ளனர். ஒரு பக்கம், நோயல் டாடா தலைமையிலான குழு, இதில் வேணு ஸ்ரீனிவாசன் மற்றும் விஜய் சிங் ஆகியோர் அடங்குவர். இதில் விஜய் சிங் தான் டாடா சன்ஸ் நிறுவனத்தில் மீண்டும் நியமிக்கப்பட்ட இயக்குனர் ஆவார். இவருடைய நியமனத்தை எதிர்த்து தான் மற்றொரு அணி உருவாகியுள்ளது.

மெஹ்லி மிஸ்ட்ரி, பிரமித் ஜாவேரி, ஜஹாங்கிர் ஜஹாங்கிர் மற்றும் டாரியஸ் கம்பாட்டா ஆகியோரின் குழு உள்ளது. இக்குழு விஜய் சிங்கின் மறுநியமனத்தை எதிர்த்து வருகின்றனர். இந்த குழு மெஹ்லி மிஸ்ட்ரி-யை டாடா சன்ஸ் இயக்குனராக நியமிக்க வலியுறுத்தி வருகிறது.

டாடா சன்ஸ் நிறுவனத்தில் ஷாப்பூர்ஜி பல்லோன்ஜி குழுமம் சுமார் 18.37 சதவீத பங்குகளை வைத்திருக்கிறது. டாடா சன்ஸ் நிர்வாகத்தில் எடுக்கப்படும் பல முடிவுகள் வெளிப்படையாக அனைத்து உறுப்பினர்களுக்கும் பகிரப்படுவது இல்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ரத்தன் டாடா மறைந்து 1 வருடம் முழுசா முடியல.. அதுக்குள்ள டாடா உயர்மட்ட நிர்வாகத்தில் பிரச்சனை..!

இதுவும் புதிய நியமனத்தை எதிர்க்க முக்கியமான பிரச்சனையாக இருந்து வருகிறது. அதேபோல் டாடா சன்ஸ் நிறுவனத்தில் எடுக்கப்படும் அனைத்து முடிவுகளுக்கும் அனைத்து டிரஸ்டிகளுக்கு கிடைக்க மெஹ்லி மிஸ்ட்ரி நியமனம் செய்வது சரியானதாக இருக்கும் என்ற கருத்தும் நிலவுகிறது.

இந்த பிரச்சனை டாடா சன்ஸ் நிறுவனத்தின் செயல்பாடுகளை பாதிக்கலாம் என்பதால் இந்திய அரசு தலையிட்டு இதற்கு தீர்வு காண முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக இரு மத்திய அமைச்சர்கள் மூலம் டாடா குழுமத் தலைவர்களுடன் சந்திப்பு நடத்தப்பட உள்ளது.

ரத்தன் டாடா மறைந்து 1 வருடம் முழுசா முடியல.. அதுக்குள்ள டாடா உயர்மட்ட நிர்வாகத்தில் பிரச்சனை..!

இந்த சந்திப்பு, டாடா டிரஸ்ட்ஸ் தலைவர் நோயல் டாடா, துணைத் தலைவர் வேணு ஸ்ரீனிவாசன், டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரன் மற்றும் டிரஸ்ட் உறுப்பினர் டாரியஸ் கம்பாட்டா ஆகியோருடன் இந்த வாரம் டெல்லியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக ரத்தன் டாடாவின் முதல் ஆண்டு நினைவு நாளுக்கு (அக்டோபர் 9, 2024) முன்பாக டாடா குழுமத்தின் உயர்மட்ட உறுப்பினர்கள் மத்தியில் பிரச்சனை வெடித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+