இந்திய விமானப் போக்குவரத்தில் புதிய மாற்றத்தையும் புதிய போட்டியை உருவாக்கக் காத்திருக்கும் டாடா குழுமம் ஏர் இந்தியா-வை வாங்கிய நிலையில் ஒவ்வொரு நாளும் டாடா குழுமத்தின் அடுத்த அறிவிப்பு என்ன என்பதை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
ஏர் இந்தியா தாமதம்
மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் இருக்கும் ஏர் இந்தியாவை டாடா நிர்வாகத்திடம் ஒப்படைப்பதில் தொடர்ந்து கால தாமதமாகி வரும் நிலையில், டாடா சில முக்கியமான மாற்றங்களைத் தனது விமானச் சேவை நிறுவனத்தில் செய்து வருகிறது.
விஸ்தாரா, ஏர் ஏசியா
டாடா குழுமத்திடம் ஏற்கனவே விஸ்தாரா, ஏர் ஏசியா இந்திய என இரு விமானச் சேவை நிறுவனங்கள் உள்ளது. இதில் விஸ்தாரா நிறுவனம் டாடா குழுமம் மற்றும் சிங்கப்பூர் ஏர்லையன்ஸ் நிறுவனம் இணைந்து உருவாக்கிய கூட்டணி நிறுவனமாகவும்.
விஸ்தாரா சிஇஓ
விஸ்தாரா நிறுவனத்தின் தலைவராக இருந்த லெஸ்லி திங் டிசம்பர் 31ஆம் தேதி உடன் இந்நிறுவனத்தை விட்டு விலகிய நிலையில் புதிய சிஇஓ-வாக வினோத் கண்ணன் நியமிக்கப்பட்டு உள்ளார். லெஸ்லி திங் விஸ்தாராவின் சிஇஓ-வாக ஜூலை 16, 2017 முதல் டிசம்பர் 31, 2021 வரையில் பணியாற்றினார்.
தலைமை வர்த்தக அதிகாரி
வினோத் கண்ணன் நியமனத்துடன் தீபக் ராஜ்வத் என்பவரை விஸ்தாராவின் தலைமை வர்த்தக அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டு உள்ளார்.
வினோத் கண்ணன்
வினோத் கண்ணன் விஸ்தாரா நிறுவனத்தில் 2019 முதல் பணியாற்றி வருகிறார், ஜூன் 2019ல் தலைமை வியூக அதிகாரி பணியில் சேர்ந்த வினோத், ஜனவரி 2020ல் தலைமை வர்த்தக அதிகாரியாகப் பதவி உயர்வு பெற்றுத் தற்போது சிஇஓ-வாக உயர்ந்துள்ளார்.
சிங்கப்பூர் ஏர்லையன்ஸ்
வினோத் கண்ணன் சிங்கப்பூர் ஏர்லையன்ஸ் நிறுவனத்தில் சுமார் 20 வருடங்கள் பல்வேறு முக்கியப் பதவிகளில் பணியாற்றி வந்த நிலையில் 2019 முதல் விஸ்தாரா நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
இந்திய விமானத் துறை
இந்திய விமானத் துறையின் வர்த்தகம் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில் மத்திய அரசு விமான எரிபொருள் விலையை 2.75 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் மூலம் ஒரு கிலோ லிட்டர் விமான எரிபொருள் விலை 2,039.63 ரூபாய் அதிகரித்து 76,062.04 ரூபாய்க்கு அதிகரித்து உள்ளது.
இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட்
இதன் வாயிலாக இன்று நாட்டின் முன்னணி விமான நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்துள்ளது. இண்டிகோ விமானச் சேவை நிறுவனத்தின் பங்குகள் 2005 ரூபாயில் இருந்து 1936.10 ரூபாய் வரையில் சரிந்துள்ளது. இதேபோல் ஸ்பைஸ்ஜெட் பங்குகள் 0.44 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!



Click it and Unblock the Notifications