பல போராட்டங்களுக்கு மத்தியில் இந்தியாவின் விமான நிறுவனமான ஏர் இந்தியாவை, டாடாவுக்கு விற்பனை செய்துள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து மோசமான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வந்த ஏர் இந்தியா நிறுவனத்தினை, அரசு தனியார்மயமாக்கும் முயற்சியில் சில ஆண்டுகளாக பல முயற்சிகளை எடுத்து வந்தது.
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினையும் ஏர் இந்தியாவினை விற்பதற்கான ஏலத்தில் டாடாவின் ஏல விருப்பம் ஏற்கப்பட்டுள்ளதாக இந்திய அரசின் முதலீடு மற்றும் பொது சொத்து நிர்வாகத்துறை செயலாளர் அறிவித்துள்ளார்.
ஏர் இந்தியா ஏலம்
ஏர் இந்தியாவினை வாங்க டாடா குழுமம் 18,000 கோடி ரூபாய்க்கு விருப்பம் தெரிவித்திருப்பதாக அறிவித்துள்ளார். இது அரசு அறிவித்துள்ள ரிசர்வ் தொகையான 12,906 கோடி ரூபாயினை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் டாடா - ஏர் இந்தியா விற்பனை ஒப்பந்தப்படி, ஏர் இந்தியாவினை வாங்கி முதல் ஆண்டில் எந்த ஊழியரையும் டாடா பணி நீக்கம் செய்ய முடியாது.
அரசுக்கு எவ்வளவு தொகை கிடைக்கும்?
எனினும் இரண்டாவது ஆண்டில் இருந்து விருப்ப ஓய்வூதிய திட்டத்தினை செயல்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஏர் இந்தியாவின் 100% பங்கினை டாடாவுக்கு விற்பனை செய்வதன் மூலம் 2,700 கோடி ரூபாய் கிடைக்கும் என்றும் முதலீடு மற்றும் பொது சொத்து நிர்வாகத் துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
Array
ஏர் இந்தியாவின் இந்த பரிவர்த்தனையில் நிலம் மற்றும் கட்டிடம் உள்ளிட்ட முக்கிய சொத்துகள் இல்லை. இதன் மதிப்பு 14,718 கோடி ரூபாயாகும். இந்த சொத்துக்கள் அரசாங்கத்தின் ஹோல்டிங் நிறுவனமான ஏர் இந்தியா அசெட்ஸ் ஹோல்டிங் லிமிடெட் நிறுவனத்திற்கு மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏர் இந்தியாவின் கடன்
ஏர் இந்தியா நிறுவனத்தின் மொத்த கடன் தொகையானது 61,562 கோடி ரூபாய் என அரசு தெரிவித்துள்ளது. இந்த தொகையில் டாடா 15,300 கோடி ரூபாயினை கொடுக்கும். மீதமுள்ள தொகையான 46,262 கோடி ரூபாயினை விட்டு விடும். இதன் மூலம் 68 ஆண்டுகளுக்கு பிறகு விமான நிறுவனத்தின் கட்டுப்பாடு மீண்டும் டாடாவுக்கே செல்கின்றது.
விற்பனை தொடக்கம்
கடந்த 2017ம் ஆண்டு தொடங்கிய ஏர் இந்தியா நிறுவனத்தின் விற்பனையானது, ஒரு வழியாக இன்று தான் முடிவு பெற்றுள்ளது. ஆரம்பத்தில் டாடா குழுமத்தால் தொடங்கப்பட்ட விமான நிறுவனம் அரசுடமையாக்கப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் டாடா சன்ஸ் நிறுவனத்திடம் வசமே ஏர் இந்தியா விமான நிறுவனம் சேர்ந்துள்ளது.
பல ஆண்டு போராட்டம் முடிவு
பல ஆண்டுகால போராட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், கடன் சுமையில் உள்ள பொதுத்துறை விமான நிறுவனமான இருந்த ஏர் இந்தியாவின் ஏல விற்பனை இன்று முடிவுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!



Click it and Unblock the Notifications