நெகிழ்ச்சியில் ரத்தன் டாடா.. வெல்கம் பேக் ஏர் இந்தியா.. பழைய புகைப்படத்தை பகிர்ந்து மகிழ்ச்சி..!

ஏர் இந்தியா நிறுவனத்தினை டாடா சன்ஸ் நிறுவனம் 18,000 கோடி ரூபாய்க்கு கைபற்றியுள்ளது.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினையும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் 68 வருடங்களுக்கு பிறகு மீண்டும் டாடாவின் வசம் ஏர் இந்தியா செல்கின்றது. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள டாடா, வெல்கம் பேர் ஏர் இந்தியா என குறிப்பிட்டுள்ளார்.

நெகிழ்ச்சி பகிர்வு

நெகிழ்ச்சி பகிர்வு

மேலும் வெல்கம் பேக் ஏர் இந்தியா என குறிப்பிட்டு பழைய புகைப்படத்தை ஒன்றினையும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். ஏர் இந்தியா நிறுவனத்தின் ஏலத்தை டாடா குழுமம் வென்றது நல்ல செய்தி. ஏர் இந்தியாவினை மீண்டும் கட்டியெழுப்ப கடுமையான முயற்சிகள் மேற்கொள்ள பட வேண்டும்.

நல்ல வாய்ப்பு கிடைக்கும்

நல்ல வாய்ப்பு கிடைக்கும்

எனினும் விமான துறையில் டாடா குழுமத்திற்கு இது ஒரு வலுவான சந்தை உள்ளது. இது நல்ல வாய்ப்பினை வழங்கும் என நம்புகிறேன், ஏர் இந்தியா ஜே.ஆர்.டி தலைமையில் டாடா ஒரு காலத்தில் உலகின் மிகவும் மதிப்புமிக்க விமான நிறுவனங்களில் ஒன்றாக புகழ் பெற்றது.

டாடா ஏர்லைன்ஸ் டூ ஏர் இந்தியா

டாடா ஏர்லைன்ஸ் டூ ஏர் இந்தியா

1932ம் ஆண்டு டாடா குழுமம் ஆரம்பித்த டாடா ஏர்லைன்ஸ், 1946ம் ஆண்டு ஏர் இந்தியா பெயர் மாற்றப்பட்டது. இதன் பின்னர் 1953ம் ஆண்டு ஏர் இந்தியா அரசுடமையாக்கப்பட்டது. இதற்கிடையில் கடந்த சில ஆண்டுகளாகவே கடன் பிரச்சனையில் தத்தளித்து வந்த ஏர் இந்தியாவின் பங்குகளை விற்க அரசு தீவிர முயற்சி எடுத்து வந்தது.

ட்விட்டரில் மகிழ்ச்சி

ட்விட்டரில் மகிழ்ச்சி

இதற்கிடையில் தான் தற்போது மீண்டும் டாடவின் வசம் ஏர் இந்தியா திரும்பியுள்ளது. ஆக 68 ஆண்டுகள் கழித்து டாடா நிறுவனம் மீண்டும் ஏர் இந்தியாவின் உரிமையாளராகியுள்ளது. இந்த நிலையில் தான் ரத்தன் டாடா தனது மகிழ்ச்சியினை ட்விட்டர் பக்கத்தின் மூலம் தெரிவித்துள்ளார்.

நெகிழ்ச்சியில் ரத்தன் டாடா

நெகிழ்ச்சியில் ரத்தன் டாடா

ஜேஆர்டி டாடாவின் தலைமையில் ஏர் இந்தியா ஒரு காலத்தில் உலகின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனங்களில் ஒன்றாக இருந்து வந்தது. ஆரம்ப காலத்தில் இது அனுபவித்த நற்பெயரை மீண்டும் பெறும் வாய்ப்பினை டாடாக்கள் பெறுவார்கள். ஜேஆர்டி டாடா இருந்திருந்தால் தற்போது மிகவும் மகிழ்ச்சியடைந்திருப்பார் என்றும் நெகிழ்ச்சியுடம் ட்விட்டரில் தனது மகிழ்ச்சியினை தெரிவித்துள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+