இந்திய மக்கள் மத்தியில் எலக்ட்ரிக் கார் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு காரணமாக பெரு நகரங்களில் மட்டும் அல்லாமல் சிறு டவுன் பகுதிகளில் கூட மக்கள் தங்களது தினசரி பயணத்திற்கு எலக்ட்ரிக் கார்களை வாங்கி வருகின்றனர். இன்னும் மக்கள் மத்தியில் Range குறித்த அச்சம் இருந்தாலும் மத்திய அரசு, தனியார் நிறுவனங்கள் என நாடு முழுவதும் புது புது சார்ஜிங் ஸ்டேஷன் அமைத்து வருகின்றனர்.
இதேவேளையில் எலக்ட்ரிக் கார்களின் பேட்டரிக்கு அதிகப்படியான வரும் வாரென்டி அளிக்கப்படும் காரணத்தால் மக்கள் ஆர்வமாக எலக்ட்ரிக் கார்களை வாங்கி வருகின்றனர். இதன் மூலம் கடந்த ஒரு வருடத்தில் எலக்ட்ரிக் கார் விற்பனை 1.5 மடங்கு அதிகரித்துள்ளது. எலக்ட்ரிக் கார் தயாரிப்பிலும், விற்பனையிலும் முன்னோடியாக இருக்கும் டாடா 2023 ஆம் நிதியாண்டு விற்பனையில் மிகப்பெரிய ஆதிக்கம் செலுத்தியுள்ளது.

2023 ஆம் நிதியாண்டு ஏப்ரல் 01 2022 முதல் மார்ச் 31 2023 வரையில் இந்தியாவில் மொத்தமாக விற்பனை செய்யப்பட்ட எலக்ட்ரிக் கார்களின் எண்ணிக்கை 47,102 கார்களாகும். இது கடந்தி நிதியாண்டில் ஒப்பிடுகையில் 18,583 கார்களாகும், இதன் மூலம் இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களின் விற்பனை 153.47 சதவீதம் அதிகரித்துள்ளது.

டாப் 10 பட்டியலில் கடைசி 3 இடத்தில் இருப்பது வால்வோ, மெர்சிடீஸ் பென்ஸ், சிட்ரான். வால்வோ கடைசியில் இருந்தாலும் கடந்த ஆண்டு வெறும் 5 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தாலும் 2023 ஆம் நிதியாண்டில் 140 கார்களை விற்பனை செய்து 2,700 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்லது.
இந்தியாவில் எலக்ட்ரிக் கார் விற்பனையில் அதிகப்படியான வளர்ச்சி அளவீட்டை பதிவு செய்தது BMW. இந்நிறுவனம் 2022 ஆம் நிதியாண்டில் வெறும் 9 எலக்ட்ரிக் கார்களை மட்டுமே விற்பனை செய்திருக்கும் நிலையில், 2023 ஆம் நிதியாண்டில் 4,188.89 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து உள்ளது. ஆனால் சந்தை பங்கீட்டில் வெறும் 0.82 சதவீதம் மட்டுமே.
இந்தியாவின் முக்கிய ஆட்டோமொபைல் நிறுவனமாக இருக்கும் டாடா மோட்டார்ஸ் 2022 ஆம் நிதியாண்டில் 15,671 கார்களை விற்பனை செய்திருந்த நிலையில், 2023 ஆம் நிதியாண்டில் 38,322 கார்களை விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் இந்தியாவின் மொத்த எலக்ட்ரிக் கார் விற்பனையில் 144.54 சதவீதம் வளர்ச்சி அடைந்து 81.36 சதவீத சந்தையை கொண்டு பெரும் ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது.

டாடா மோட்டர்ஸ் நிறுவனத்தை தொடர்ந்து MG 4511 கார்களையும், சீனாவின் BYD 1066 கார்களையும், ஹூண்டாய் 789 கார்களையும், மஹிந்திரா 463 கார்களையும், BMW 463 கார்களையும், கியா 312 கார்களையும், சிட்ரான் 202 கார்களையும், மெர்சிடீஸ் பென்ஸ் 247 கார்களையும், வால்வோ 140 கார்களையும், பிற ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மொத்தமாக சேர்ந்து 664 கார்களை விற்பனை செய்துள்ளது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications