தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ராணிப்பேட்டையில் ரூ.9,000 கோடி மதிப்பிலான டாடா மோட்டார்ஸ் - ஜாகுவார் லேண்ட் ரோவர் (Tata-JLR) உற்பத்தி தொழிற்சாலையை திறந்து வைத்தார்.
இந்தியாவில் முதல் முறையாக சொகுசு கார்கள் வெறும் அசெம்பிளி மட்டுமின்றி முழுமையாக உற்பத்தி செய்யப்படும் தொழிற்சாலை இது என்பதால், தமிழ்நாடு ஆட்டோமொபைல் துறை வரலாற்று சாதனை படைத்துள்ளது.

ராணிப்பேட்டையில் தயாரிக்கப்பட்ட முதல் கார் ரேஞ்ச் ரோவர் எவோக் (Range Rover Evoque) ஐ முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார். டாடா சன்ஸ் தலைவர் என்.சந்திரசேகரன் முன் இருக்கையில் அமர்ந்திருக்க, முதலமைச்சர் தானே காரை ஓட்டி வெளியேற்றினார்.
இந்த தொழிற்சாலைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) மார்ச் 2024-இல் கையெழுத்தானது. அடிக்கல் நாட்டப்பட்டது செப்டம்பர் 2024-இல். இன்று (பிப்ரவரி 2026) முதல் கார் வெளியீடு நடைபெற்றுள்ளது. வெறும் 16 மாதங்களில் தொழிற்சாலை தயாரானது தமிழ்நாடு அரசின் விரைவான அனுமதி மற்றும் ஆதரவால் சாத்தியமானது என்று டாடா சன்ஸ் தலைவர் என் சந்திரசேகரன் பாராட்டினார்.
ராணிப்பேட்டையில் அமைந்துள்ள இந்த பசுமை தொழிற்சாலை (greenfield facility) மூன்று கட்டங்களாக விரிவாக்கப்பட உள்ளது. முழுமையாக இயங்கத் தொடங்கிய பிறகு ஆண்டுக்கு 2.5 லட்சம் வாகனங்கள் உற்பத்தி செய்யும் திறன் கொண்டிருக்கும். இது இந்தியாவில் சொகுசு கார்களின் உற்பத்தியில் புதிய அத்தியாயத்தை தொடங்கும். தொழிற்சாலைக்கு அருகில் துணை தொழில்கள் (ancillary units) தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட விரிவாக்கத்தில் இன்னும் அதிக வேலைவாய்ப்புகள் உருவாகும். தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கூறுகையில், "வேலைவாய்ப்பு உருவாக்குவது தமிழ்நாடு அரசின் மிக முக்கிய இலக்கு. இதற்காக நாங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம்" என்றார். இந்த தொழிற்சாலை ராணிப்பேட்டை மாவட்டத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதலமைச்சரின் வேண்டுகோள்
இத்தொழிற்சாலையின் துவங்க நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரனிடம், தமிழ்நாட்டில் உயர்தர ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (high-end R&D) தொழில்களை அமைக்குமாறு கோரினார். "அரசு எல்லா வகையிலும் ஆதரவு அளிக்க தயாராக உள்ளது" என்றும் உறுதியளித்தார்.

ரத்தன் டாடா சிலை
ராணிப்பேட்டையில் திறக்கப்பட்டு உள்ள டாடா-ஜாகுவார் லேண்ட் ரோவர் தொழிற்சாலையில் ரத்தன் டாடாவின் திருஉருவ சிலை அமைக்கப்பட்டு, இன்று திறக்கப்பட்டு உள்ளது. வெண்கலத்தால் ரத்தன் டாடாவின் சிலை வடிக்கப்பட்டு இன்று தொழிற்சாலையுடன் சிலையும் திறக்கப்பட்டு உள்ளது.
சென்னையிலிருந்து 115 கி.மீ தொலைவில் உள்ள ராணிப்பேட்டையில் இந்த தொழிற்சாலை அமைந்திருப்பது தமிழ்நாட்டின் தொழில்மயமாக்கல் வேகத்தை உலகிற்கு காட்டுகிறது. சென்னையை தாண்டி புதிய உற்பத்தி நகரம் ராணிப்பேட்டையில் உருவாக்கப்பட்டு உள்ளது.
டாடா-ஜேஎல்ஆர் போன்ற உலகளாவிய நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முழு கார் உற்பத்தியைத் தொடங்கியுள்ளது புதிய மாற்றமாக பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications