டாடா குழுமம் அழிக்கப்படுகிறது; யாருக்கும் துணிச்சல் இல்லை- ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு..!!

இந்தியாவின் முன்னணி தொழில் குழுமமான டாடா குழுமத்தில் தலைமை பதவி தொடர்பான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. டாடா சன்ஸ் தலைவராக என்.சந்திரசேகரனை நியமனம் செய்வதற்கு நோயல் டாடா எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், டாடா குழும பிரச்சினை குறித்து எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

டாடா சன்ஸ் தலைமை நிர்வாக தலைவராக என். சந்திரசேகரன் பதவி நீட்டிப்பு வேண்டாம் என முதலில் அறிவித்தார். ஆனால் டாடா குழும இயக்குநர்கள் கூட்டத்தில் என்.சந்திரசேகரனுக்கு மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு பதவி நீட்டிப்பு தந்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு டாடா டிரஸ்ட்ஸ் தலைவரான நோயல் டாடா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

டாடா குழுமம் அழிக்கப்படுகிறது; யாருக்கும் துணிச்சல் இல்லை- ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு..!!

கடந்த செப்டம்பர் 17 அன்று நடைபெற்ற டாடா சன்ஸ் வாரிய கூட்டத்தில், என். சந்திரசேகரனின் பதவிக்கால நீட்டிப்பு குறித்த குறிப்பு முறையான நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்படவில்லை என்றும், இதில் நடைமுறை மீறல்கள் நடந்துள்ளதாகவும் கூறி இந்த தீர்மானம் செல்லாது என கூறி வருகிறார். டாடா சன்ஸில் பெரும்பான்மையான பங்குகளை வைத்துள்ள டாடா டிரஸ்ட்ஸ் அமைப்பின் தலைவர் நோயல் டாடா , என்.சந்திரசேகரன் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், பெரும்பான்மையான வாரிய உறுப்பினர்கள் இந்த தீர்மானத்திற்கு ஆதரவளித்தனர்.

Also Read

இதனால் தான் பிரச்சினையே பூதாகரமாகியுள்ளது. இந்நிலையில் டாடா குழும மோதல்கள் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நாட்டின் மிக முக்கியமான தொழில்குழுமமான டாடா குழுமம் அழிக்கப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இந்திய தொழில் துறை என்பது மோடி மற்றும் அமித் ஷாவின் விளையாட்டு பொருள் அல்ல. டாடா குழுமம் அழிக்கப்பட்டு வருகிறது, ஆனால் எந்தவொரு தொழிலதிபரும் இதற்கு எதிராக துணிந்து பேச முன்வரவில்லை என கூறியுள்ளார். இன்னும் எவ்வளவு காலத்திற்கு நீங்கள் மௌனமாக இருக்க போகிறீர்கள்? அவர்கள் உங்களை முழுமையாக கைப்பற்றும் வரை காத்திருக்க போகிறீர்களா? என நாட்டின் முன்னணி தொழிலதிபர்களை நோக்கி ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

Recommended For You

உங்களிடம் துணிச்சல் இல்லை, ஆனால் எங்களிடம் உள்ளது. இந்த குற்றங்களுக்கு நாங்கள் கண்டிப்பாக நீதி பெற்று தருவோம் என ராகுல் காந்தி தனது பதிவில் கூறியுள்ளார். ராகுலின் இந்த கருத்து மூலம் டாடா குழும பிரச்சினை கார்ப்பரேட் விவகாரத்தில் இருந்து அரசியல் உலகிறகு வந்து நிற்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+