டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா நிறுவனங்கள் கார் விற்பனை வேகம் குறைந்து வருவதாலும், வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுக்கும் நோக்கிலும், விற்பனையில் சில கார்கள் வரலாற்று உச்சத்தை தொட்டு உள்ள காரணத்திற்காகவும் தங்கள் பிரபலமான SUV கார்களின் விலையை நேற்று குறைத்துள்ளதாக அறிவித்தது.
ஆனால் உண்மையில் இந்த விலை குறைப்பிற்கான காரணம் உத்தரப்பிரதேச அரசு வெளியிட்ட அறிவிப்பு தான். யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தர பிரதேச அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் அம்மாநிலத்திற்கு விற்கப்படும் ஸ்டிராங் ஹைப்ரிட் கார்கள், பிளக்-இன் ஹைப்ரிட் கார்களுக்கு ரிஜிஸ்ட்ரேஷன் டாக்ஸ் மொத்தமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது.

இதன் மூலம் உத்தர பிரதேச அரசு எலக்ட்ரிக் வாகனங்களுக்கு அளிக்கும் சலுகையை ஹைப்ரிட் கார்களுக்கு வழங்கியுள்ளது. இதன் மூலம் மக்கள் இனி ஹைப்ரிட் கார்களை தேடி ஓடுவார்கள், இதேபோல் உபி அரசைத் தொடர்ந்து நாட்டின் பிற மாநிலங்களும் இதேபோன்ற அறிவிப்பை வெளியிட வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் காரணத்தால் ஆட்டோமொபைல் சந்தையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த உள்ளது.
இந்த சூழ்நிலையை மனதில் வைத்து தான் டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா நிறுவனங்கள் தனது டாப் என்ட் எஸ்யூவி கார்களின் இருப்பை வேகமாக குறைக்க முடிவு செய்து அதிகப்படியான தள்ளுபடியை அறிவித்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் விலை குறைப்பு: இந்திய எலக்ட்ரிக் கார் விற்பனையில் முடிசூடா மன்னனாக இருக்கும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம், கார்களின் விற்பனை வேகத்தை அதிகரிக்கும் நோக்கில், அசன் பிரபலமான ஹாரியர் மற்றும் சஃபாரி கார்களின் விலையில் ரூ.1.4 லட்சம் வரை சலுகைகளை வழங்கியுள்ளது.
கடந்த மாதம் நெக்ஸான் காரின் விலையை ரூ.1 லட்சம் வரை குறைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. புதிய மின்சார கார் Punch.ev மீது ரூ.30,000 வரையிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன.
மஹிந்திரா நிறுவனத்தின் விலை குறைப்பு: டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தைப் போலவே, மஹிந்திரா நிறுவனமும் தங்கள் பிரபலமான XUV700 காரின் AX7 மாடல்களின் விலையைக் குறைத்துள்ளது. குறிப்பாக, AX7 மாடல்களின் விலையில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த விலை குறைப்பு, XUV700 கார் அறிமுகமாகி மூன்று ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு வழங்கப்படுவதாக மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விலை குறைப்பிற்கு பின்பு தற்போது, டெல்லியில், எக்ஸ்-ஷோரூம் விலையில், மஹிந்திரா XUV700 AX7 காரின் விலை ரூ.19.49 லட்சத்தில் இருந்து ரூ.24.99 லட்சம் வரை உள்ளது. இந்த சிறப்பு விலை, அடுத்த நான்கு மாதங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது.
மாருதி சுசூகி பங்குகள் உயர்வு: செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா நிறுவனங்களின் பங்குகள் தடுமாறிய நிலையில் மாருதி சுசூகி பங்குகள் தடாலடியாக உயர்வும், இந்த இவ்விரு நிறுவனங்களின் விலை குறைப்பிற்கும் ஓரே தொடர்பு தான்.
உத்தர பிரதேச அரசு மின்சார கார்களுக்கு மட்டுமல்லாமல், ஹைப்ரிட் மற்றும் பிளக்-இன் வாகனங்களுக்கும் பதிவுக் கட்டணத்தில் விலக்கு அளிக்கும் திட்டத்தை அறிவித்திருப்பதை அடுத்து, மாருதி சுசூகி நிறுவனத்தின் பங்குகள் செவ்வாய்க்கிழமை கிட்டத்தட்ட 7% உயர்ந்துள்ளன. இந்த முடிவு, ஹைப்ரிட் வாகனங்களை ஊக்குவிப்பதற்கான பயணத்தின் தொடக்கம் மட்டுமே என ஹைப்ரிட் நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
புதன்கிழமை வர்த்தகத்தில் மாருதி சுசூகி பங்குகள் 3.35 சதவீதம் உயர்ந்து 13250 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இதேவேளையில் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா பங்குகள் 5.42 சதவீதம் சரிந்து 2767.20 ரூபாயாக உள்ளது, டாடா மோட்டார்ஸ் பங்குகள் 0.18 சதவீதம் மட்டுமே உயர்ந்து 1016.60 ரூபாயாக உள்ளது.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

ஈரான் போரை மையமாக வைத்து புதிய தொழில்: கோடிகளை அள்ளும் டிரம்ப் மகன்கள்!! வெளிச்சத்துக்கு வந்த உண்மை!!



Click it and Unblock the Notifications