மும்பை: இந்தியா மட்டுமல்ல உலகையே அச்சுறுத்தி வரும் ஒரு நோய் தான் புற்றுநோய். முதல் மற்றும் இரண்டாம் நிலையிலேயே புற்றுநோயின் தாக்கத்தை அறிந்து கொண்டால் அவர்களை காப்பாற்றும் சிகிச்சை உள்ளது.
ஆனால் பெரும்பாலான புற்றுநோய்கள் அறிகுறிகள் காட்டாமல் அட்வான்ஸூடு ஸ்டேஜில் மட்டுமே அறிகுறிகளை காட்டும். இதனால் பல உயிர்களை நாம் இழக்க நேரிடுகிறது.

தற்போது இந்தியாவில் அச்சுறுத்தும் நோய்களில் புற்றுநோய் முக்கிய இடத்தில் இருக்கிறது. மருத்துவ ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புகள் மூலம் புற்றுநோய்க்கான சிகிச்சைகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் ஒன்றுதான் சிஏஆர்-டி தெரபி. சிமெரிக் ஆண்டிஜென் ரிசப்டரின் டி செல் வகைகள் மூலம் மேற்கொள்ளப்படும் சிகிச்சை இது.
புற்றுநோய்க்கு ஆளானவர்களின் உடலில் இருந்து வெள்ளை அணுக்களை எடுத்து அதன் டி-செல்களை ஆய்வகத்தில் மாற்றுவர். அதற்கு புற்றுநோய் செல்களை அழிப்பதற்கான சக்தியை கொடுத்து மீண்டும் நோயாளியின் உடலில் செலுத்தும் முறை ஆகும்.
புற்றுநோய் செல்களை கண்டறிந்து தாக்கும் வகையில் டி செல்களுக்குள் இருக்கும் மரபணுக்களை மாற்றி, மீண்டும் உடலினுள் செலுத்தும் நுட்பம். மற்ற வகை சிகிச்சை வேலை செய்யாவிட்டால் கூட சில வகையான புற்று நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதில் இது மிகவும் உதவியாக இருக்கும் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
அதாவது புற்றுநோய் செல்களை கொல்ல உடலின் சொந்த பாதுகாப்பு அமைப்புகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இந்த வகை சிகிச்சையின் மதிப்பு ரூ.4 கோடி ஆகும். இந்தியாவிலும் இந்த நுட்பத்தை கொண்டு சிகிச்சை அளிக்க கோடிக்கணக்கில் ஆகும்.
ஆனால் மும்பையை சேர்ந்த மருத்துவர்கள் மற்றும் ஆய்வாளர்கள் இந்த விலையை குறைத்துள்ளனர். ஐஐடி மும்பை மற்றும் மும்பையில் உள்ள டாடா மெமோரியல் சென்டர் ஆகியவற்றின் கூட்டு முயற்சியோடு இந்தியாவிலேயே இந்த நவீன சிகிச்சை முறை கொண்டு வரப்பட்டுள்ளது.
ஐஐடி மும்பை விஞ்ஞானி டாக்டர் ராகுல் பூர்வார் தலைமையிலான குழுவினர் 2021 ஆம் ஆண்டு முதல் முறையாக ஒரு நோயாளியை கொண்டு பரிசோதனை செய்தனர்.
அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் சிகிச்சைக்கு ரூ.4 கோடி செலவாகும் ஆனால் அதில் ஒரு பகுதி தொகையிலேயே இந்தியாவில் சிகிச்சை அளிக்க முடியும் என இவரது குழு நிரூபித்துள்ளது. சுமார் 4 கோடி மதிப்புள்ள புற்றுநோய் சிகிச்சையை இந்தியாவில் 40 லட்சம் ரூபாயிலேயே பெற முடியும்.
இந்த ஆய்வின் போது மருத்துவர்களுக்கு மூன்று மில்லியன் டாலர்கள் மதிப்பிலான உபகரணங்கள் தேவைப்பட்டன. அதனை மும்பை ஐஐடியை சேர்ந்த விஞ்ஞானிகள் குறைந்த செலவில் தயாரித்து கொடுத்தனர்.
தற்போது கார்-டி தெரபியின் செலவை 20 லட்சம் ரூபாய் என குறைக்க மருத்துவர்கள் முயற்சி செய்து வருகின்றனர். இந்தியாவில் தற்போது 30 மருத்துவமனைகளில் இந்த புற்றுநோய் சிகிச்சை கிடைக்கிறது.
Story written by: Devika
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications