2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் நாட்டின் பல கார் தயாரிப்பாளர்கள் தங்களுடைய கார்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளனர். மாருதி, ஹூண்டாய், மஹிந்திரா, ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார், மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியா, ஆடி மற்றும் BMW ஆகிய நிறுவனங்கள் ஏற்கனவே விலை உயர்வை அறிவித்துள்ள நிலையில், தற்போது டாடா மோட்டார்ஸ் மற்றும் கியா நிறுவனங்களும் விலை உயர்வை அறிவித்துள்ளன.
TATA Motors: எலக்ட்ரிக் வாகனம், சிஎன்ஜி வாகன பிரிவில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் டாடா மோட்டார்ஸ் தனது பயணிகள் வாகன விலையை அடுத்த ஆண்டு ஜனவரி முதல் 3% வரை உயர்த்துவதாக திங்கள்கிழமை தெரிவித்தது. கார் தயாரிப்பின் உள்ளீட்டு செலவுகள் மற்றும் பணவீக்கம் அதிகரிப்பை ஈடுசெய்ய இந்த விலை உயர்வு மேற்கொள்ளப்படுவதாக அறிவித்துள்ளது.

இந்த 3 சதவீத விலை உயர்வு ஒவ்வொரு கார் மாடலுக்கும், அதன் வகைகளுக்கும் மாறுபடும் என்பது கவனிக்க வேண்டிய ஒன்று.
Kia: பிரபலமான கார் பிராண்டான கியா, அதன் முழு மாடல் விலையிலும் 2% விலை உயர்வை அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு 2025 ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகிறது.
கியா நிறுவனம் இந்த விலை உயர்வை அதிகரித்து வரும் சப்ளை சங்கிலி செலவுகளை ஈடு செய்யவே கொண்டு வருவதாக கூறியது. இந்த சவால்களுக்கிடையே, Kia India நிர்வாகம் பெரும் பகுதி செலவுகளை தனது லாப அளவில் இருந்து சரி செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களாக இந்தியாவில் கார் விற்பனை மோசமாக இருக்கும் காரணத்தால் கார் தயாரிப்பாளர்கள் இந்த பண்டிகை காலத்தில் அதிகப்படியான விற்பனையை பதிவு செய்ய வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பதால் பெரிய தள்ளுபடிகள் மற்றும் கவர்ச்சியான சலுகைகளை வழங்கினர்.
பண்டிகை காலம் முடிந்த உடன், புதிய ஆண்டில், புதிய கார்களை விற்பனை செய்வதற்கு முன் விலையை உயர்த்தியுள்ளது ஆட்டோமொபைல் நிறுவனங்கள்.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications