இந்தியாவின் முன்னணி எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ், ஹைபிரிட் கார்கள், எலக்ட்ரிக் கார்களை விட அதிக மாசு விளைவிப்பதால், இக்கார்கள் மீதான வரிகளைக் குறைக்க வேண்டாம் என்று மத்திய அரசை கேட்டுக்கொண்டு உள்ளது.
டோயோட்டா ஹைப்ரிட் கார்கள் மீதான வரியை குறைப்பதன் மூலம் மாசுபாடு, எரிபொருள் செலவுகள் குறையும் எனக் கூறி மத்திய அரசிடம் ஹைப்ரிட் கார்கள் மீது வரியை குறைக்க வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் தான் டாடா மோட்டார்ஸ் ஹைப்ரிட் கார்கள் மீதான வரியை குறைக்கக் கூடாது எனக் கூறியுள்ளது.

இந்திய ஆட்டோமொபைல் துறையில் வாகனங்களின் டிரெண்ட் வேகமாக மாறி வரும் வேளையில், மத்திய அரசுக்கு மாசுபாட்டையும், எரிபொருள் செலவுகளையும் குறைப்பது முக்கிய இலக்காக இருக்கும் வேளையில்.. சிறு நன்மை கிடைத்தாலும் அதைப் பெரிய அளவில் போற்றத் துவங்கியுள்ளது. இதன் வாயிலாகத் தான் ஹைப்ரிட் கார்கள் மீதான வரியை குறைப்பதற்கான பேச்சுக்கள் அடிப்பட்டு வருகிறது.
இந்தியாவில் தற்போது ஹைப்ரிட் கார்கள் வருகை அதிகரித்துள்ளது, டோயோட்டா மற்றும் மாருதி சுசூகி அடுத்தடுத்து ஹைப்ரிட் கார்களை அறிமுகம் செய்து வருவது மூலம் பேட்டரி பாதுகாப்பு, ரேஞ்ச் பிரச்சனையில் தவிக்கும் மக்களுக்கு மாற்றாக ஹைப்ரிட் கார்கள் உள்ளது.
சந்தையில் சிறிய எண்ணிக்கையிலான ஹைப்ரிட் கார்கள் இருந்தாலும், அதன் விற்பனை அதிகம். இந்த நிலையில் ஹைப்ரிட் கார்கள் மீதான வரி குறைக்கப்பட்டால் இதன் விற்பனை அதிகரிக்கும்.
இதனால் எலக்ட்ரிக் கார்களை மட்டுமே நம்பியிருக்கும் டாடா மோட்டார்ஸ்-க்கு பெரும் வர்த்தகப் பாதிப்பாக மாறும் என்பதால், ஹைப்ரிட் கார்களுக்கு வரி குறைக்க வேண்டாம் என டாடா மோட்டார்ஸ் மத்திய அரசை கேட்டுக்கொண்டு உள்ளதாக 3 அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக ஈடி தெரிவித்துள்ளது.
மாசுபாட்டைக் குறைப்பதற்கான பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு எலக்ட்ரிக் வாகனங்களை (EV) இந்தியா ஊக்குவிக்கிறது, அவற்றிற்கு வெறும் 5% வரி விதிக்கிறது. அதே நேரத்தில் ஹைப்ரிட் கார்களுக்கான வரி 43% ஆக உள்ளது. இது பெட்ரோல் கார்களுக்கு விதிக்கப்படும் 48% வரிக்குச் சற்று குறைவாக.
இந்த நிலையில் ஹைப்ரிட் கார்களுக்கு மத்திய அரசு 20 சதவீதமோ அல்லது 30 சதவீதமோ வரியை குறைத்தால், இக்கார்களின் விலை பெரிய அளவில் குறையும். இதனால் எலக்ட்ரிக் கார்கள் விற்பனை குறையும் என்பது தான் டாடா மோட்டார்ஸ்-ன் இந்தப் பதற்றத்திற்குக் காரணம்.
டாடா மோட்டார்ஸ்-ன் கோரிக்கை ஹைப்ரிட் கார்களை இந்தியாவில் பிரபலப்படுத்திய ஜப்பானிய வாகன தயாரிப்பு நிறுவனமான டோயோட்டாவை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பெட்ரோல் கார்களுடன் ஒப்பிடும்போது கார்பன் உமிழ்வைக் குறைப்பதாகக் கூறி அவற்றின் மீதான வரிகளைக் குறைக்குமாறு கடந்த ஆண்டு முதல் இந்திய அரசை டோயோட்டா வலியுறுத்தி வருகிறது.
அதன் நிலைப்பாட்டை ஆதரித்து, இந்தியாவின் வர்த்தகத் துறை கடந்த மாதம் ஒரு உள் குறிப்பில் ஹைப்ரிட் கார்கள் மீதான வரிகளை மறுசீரமைப்புச் செய்ய வலியுறுத்தியது.
இந்த நிலையில் தான் டாடா குழும தலைவர், அரசு அதிகாரிகளைச் சந்தித்து, இந்தியாவின் வர்த்தகத் துறைக்குக் கடிதம் எழுதியுள்ளது. இந்தியாவில் நகர்ப்புற காற்றின் பாதிப்புகள் மிகவும் மோசமாக உள்ளது, மேலும் ஹைப்ரிட் கார்களுக்கு ஏற்கனவே பெட்ரோல் கார்களை விடக் குறைவான வரி விதிக்கப்படுவதால் கூடுதலாக வரியை குறைத்து ஊக்குவிக்கப்படக்கூடாது என்று தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications