இந்திய ஆட்டோமொபைல் துறையில் ஒரு காலத்தில் யாரும் அசைக்க முடியாத இடத்தில் ராஜாவாக இருந்த டாடா மோட்டார்ஸ் கடந்த 10 வருடத்தில் அதிகளவிலான வர்த்தகத்தை இழந்து தொடர்ந்து பல காலாண்டுகளாக நஷ்டத்தைப் பதிவு செய்தது.
இந்த நிலையில், கடந்த ஒரு வருடத்தில் அடுத்தடுத்த புதிய கார் அறிமுகம், எலக்ட்ரிக் வாகனங்கள் அறிமுகம், நிர்வாக மாற்றம் எனப் பல மாற்றங்களுக்குப் பின்பு டாடா மோட்டார்ஸ் முக்கியமான இடத்தை அடைந்துள்ளது.
ஆட்டோமொபைல் சந்தை
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பல கார் நிறுவனங்கள் வந்துள்ள காரணத்தால் போட்டி அதிகரித்துள்ளது. இதனால் நிறுவனங்கள் குறைந்த லாபத்திற்குக் கார்களை விற்பனை செய்ய வேண்டிய நிலை உருவானது.
பிரச்சனைகள்
இது மட்டும் அல்லாமல் உற்பத்தி மற்றும் போக்குவரத்துச் செலவுகள் பெரிய அளவில் உயர்ந்த காரணத்தால் கடந்த ஒரு வருடத்தில் கார்களின் விலை பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இதற்கிடையில் சிப் தட்டுப்பாடு பெரும் பிரச்சனையாக வெடித்த காரணத்தால் அக்டோபர் மாதம் ஆட்டோமொபைல் நிறுவனங்களின் விற்பனை அளவீடு பெரிய அளவில் குறைந்தது.
டாடா மோட்டர்ஸ்
இந்த இக்கட்டான சூழ்நிலையில் 2021-22ஆம் நிதியாண்டின் 2வது காலாண்டில் டாடா மோட்டர்ஸ் நிறுவனத்தின் ஆப்ரேட்டிங் லாப அளவீடு ஒரு காருக்கு 45,810 ரூபாயாக அதிகரித்துள்ளது, இது கிட்டதட்ட மாருதி சுசூகி அளவீட்டை விடவும் 2 மடங்கு அதிகமாகும்.
முதல் முறை
கடந்த 10 வருடத்தில் முதல் முறையாக ஆப்ரேட்டிங் லாப அளவீட்டில் டாடா மோட்டார்ஸ் முதல் முறையாக மாருதி சுசூகியை முந்தியுள்ளது. ஆனால் விற்பனை எண்ணிக்கையில் மாருதி சுசூகி இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது. இந்திய ஆட்டோமொபைல் துறையின் அக்டோபர் மாத நிலை என்ன தெரியுமா..?
ஆட்டோபர் மாத விற்பனை அளவீடு
கார் விற்பனை - 2.06 லட்சம்
இரு சக்கர வாகனம் - 13.25 லட்சம்
3 சக்கர வாகனம் - 65,359
வர்த்தக வாகனங்கள் - 55,079
டிராக்டர் - 60,531
கடந்த ஆண்டின் இதே அக்டோபர் மாதத்தை ஒப்பிடுகையில் கார் மற்றும் பைக் விற்பனை அளவீடு 15.3 சதவீதமும், 23.2 சதவீதமும் சரிந்துள்ளது.
நிறுவனங்களின் விற்பனை அளவீடு
அக்டோபர் மாதத்தில் மட்டும் மாருதி சுசூகி நிறுவனம் 1.38 லட்சம் கார்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 24.2 சதவீதம் சரிவு.
ஆனால் டாடா மோட்டார்ஸ் 67,829 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தாலும், கடந்த ஆண்டை விடவும் 31.8 சதவீதம் அதிகமாகும்.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!



Click it and Unblock the Notifications