டாடா குழுமத்திற்கு சொந்தமான டாடா மோட்டார்ஸ் லிமிடெட் நிறுவனம் சர்வதேச அளவிலான மிகவும் மதிப்பு மிக்க முதல் 10 வாகன நிறுவனங்களில் இடம் பிடித்துள்ளது. தொடர்ச்சியாக இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு உயர்ந்து வந்ததே இதற்கு முக்கிய காரணம். சர்வதேச அளவில் மதிப்புமிக்க முதல் 10 வாகன நிறுவனங்களில் இடம் பிடித்திருக்கும் முதல் இந்திய நிறுவனம் என்ற பெருமையும் டாடா மோட்டார்ஸுக்கு கிடைத்துள்ளது.
கடந்த ஆறு மாத காலத்தில் மட்டும் இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு 50 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டில் மட்டும் 101 சதவிகிதம் அதிகரித்துள்ளது தற்போது இந்தியாவில் உள்ள வாகன நிறுவனங்களிலேயே 51 பில்லியன் டாலர் சந்தை மூலதனத்துடன் இருக்கக்கூடிய ஒரே வாகன உற்பத்தி நிறுவனம் இதுவாகும்.

சர்வதேச அளவில் இந்த அதிக மதிப்பு கொண்ட வாகன நிறுவனங்களின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது டெஸ்லா, இதன் சந்தை மூலதனம் 711.19 பில்லியன் டாலர்கள். டொயோட்டா மோட்டார்ஸ் 307.50 பில்லியன் டாலர்களுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. பிஒய்டி நிறுவனம் 92.65 பில்லியனுடன் மூன்றாவது இடத்திலும், ஃபெராரி நிறுவனம் 74.04 பில்லியன் டாலர் சந்தை மூலதனத்துடன் இந்த பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கிறது.
மெர்சிடிஸ் பென்ஸின் சந்தை மூலதனம் 71.26 பில்லியன் டாலர்கள், போர்சே நிறுவனம் 68.29 பில்லியன் டாலர்கள் ,பிஎம்டபிள்யூ நிறுவனம் 59.54 பில்லியன் டாலர்கள், ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் 58.18 பில்லியன் டாலர்கள் சந்தை மூலதனம் கொண்டுள்ளது. இந்த பட்டியலில் ஹோண்டா மோட்டார் நிறுவனம் 56.12 பில்லியன் டாலர்களுடன் இருக்கிறது.
தற்போது டாடா மோட்டார்ஸ் இந்த பட்டியலில் 10ஆவது இடம் பிடித்துள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஜெனரல் மோட்டார்ஸ், மாருதி சுசுகி, மகேந்திரா மகேந்திரா,ஃபோர்ட் , ஹூண்டாய் மோட்டார் உள்ளிட்ட நிறுவனங்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி இந்த பட்டியலில் முன்னேறியுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்புகள் கடந்த மூன்று ஆண்டுகளில் பல மடங்கு அதிகரித்துள்ளது.
இந்தியாவில் தற்போது மின்சார கார்களுக்கான பிரிவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முன்னணியில் இருக்கிறது. அதே வேளையில் டாடா குழுமத்தில் லாபகரமான நிறுவனமாகவும் டாடா மோட்டார்ஸ் தற்போது செயல்பட்டு வருகிறது .அண்மையில் நோமுரா உள்ளிட்ட பல்வேறு தரகு நிறுவனங்கள் இந்த பங்கினை வாங்கலாம் என பரிந்துரை செய்துள்ளன. ஜூலை 31ஆம் தேதி டாடா மோட்டார்ஸின் நிறுவன பங்கு 1159 ரூபாய் என வர்த்தகமானது.
Story Written by: Devika
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!



Click it and Unblock the Notifications