சத்தமில்லாமல் சாதித்த டாடா மோட்டார்ஸ்.. உலகத்திலேயே 4வது பெரிய நிறுவனம்!

டாடா குழுமத்தில் மிக முக்கிய வர்த்தக பிரிவாக இருக்கும் ஆட்டோமொபைல் பிரிவான டாடா மோட்டர்ஸ் கடந்த 10 வருடத்தில் பெரியளவிலான வளர்ச்சியை அடைந்துள்ளது. இந்த வளர்ச்சியை வேகப்படுத்தும் விதமாக டாடா மோட்டார்ஸ் தனது பயணிகள் வாகன பிரிவையும், வர்த்தக வாகன பிரிவையும் தனித்தனியாகப் பிரித்தது மூலம் அடுத்தடுத்து பல விரிவாக்காத திட்டங்களைச் செயல்படுத்தியது.

இதில் முக்கியமானதாக மோட்டார்ஸ்-ன் வணிக வாகனங்கள் பிரிவு ஜூலை மாதம் இத்தாலி நாட்டின் மிகப்பெரிய வணிக வாகனங்கள் தயாரிப்பு நிறுவனமான Iveco Group-ன் 89.42 சதவீத பங்குகளை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்தது.

சத்தமில்லாமல் சாதித்த டாடா மோட்டார்ஸ்.. உலகத்திலேயே 4வது பெரிய நிறுவனம்!

இந்த ஒரு ஒப்பந்தம் மூலம் டாடா மோட்டார்ஸ் ஐரோப்பிய சந்தைக்கு நுழைவதோடு, ஐரோப்பிய டிரக் தயாரிப்பு தொழில்நுட்பம் மற்றும் தரத்தை இந்தியாவுக்குக் கொண்டு வர முடியும். இந்த 89.42 சதவீத பங்குகளை சுமார் 3.43 பில்லியன் டாலர் மதிப்பிற்கு வாங்க முடிவு செய்யப்பட்ட நிலையில் அக்டோபர் 30ஆம் தேதி அனைத்து பங்குகளும் வாங்கப்பட்டு தற்போது Iveco Group டாடா மோட்டார்ஸ்-ன் கிளை நிறுவனமாக உருவாகியுள்ளது.

2008ஆம் ஆண்டு டாடா மோட்டார்ஸ் ஜாகுவார் லேண்டுரோவர் நிறுவனத்தைக் கைப்பற்றிய பின்பு மீண்டும் ஒரு ஐரோப்பிய நிறுவனத்தை வாங்கியது மூலம் உலகின் 4வது பெரிய கமர்சியல் வாகன தயாரிப்பு நிறுவனமாக உருவெடுத்துள்ளது.

மேலும் இக்கூட்டணி நிறுவனத்தில் தற்போது 70000 ஊழியர்கள் சுமார் 130 நாடுகளில் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக உலகம் முழுவதும் 9300 சேல்ஸ் மற்றும் சர்வீஸ் முனையங்களை வைத்து இந்தியா, ஐரோப்பா, லத்தின் அமெரிக்காவில் மிகப்பெரிய அளவிலான வர்த்தக ஆதிக்கத்தை கொண்டு உள்ளது.

இக்கூட்டணி தற்போது ஆசியா நாடுகளிலும், ஆப்பிரிக்காவிலும் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய துவங்கியுள்ளது. டாடா மோட்டார்ஸ் கமர்சியல் வெஹிக்கல் மற்றும் Iveco Group இணைந்து வருடத்திற்கு 6,00,000 வாகனங்களைத் தயாரிக்கும் திறன் கொண்டு, 24 பில்லியன் டாலர் அளவிலான வருமானத்தை ஈட்டும் மாபெரும் நிறுவனமாக உயர்ந்துள்ளது.

Iveco Group பங்குகளை திட்டமிட்டபடி வாங்கி முடித்துள்ள நிலையில் டாடா சன்ஸ் தலைவர் என்.சந்திரசேகரன் கூறுகையில் கமர்சியல் வாகன தயாரிப்பில் இரு பெரும் ஜாம்பவான்கள் இணைவது மூலம் அடுத்த 5 வருடத்தில் பெரிய அளவிலான வருமானம், லாப வளர்ச்சி எதிர்ப்பாக்கப்படுகிறது என தெரிவித்தார். மேலும் இத்தாலி பங்குச்சந்தையில் இருந்து Iveco Group-ஐ டீலிஸ்டிங் செய்யும் பணிகளில் தற்போது டாடா மோட்டார்ஸ் நிர்வாகம் பணியாற்றி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+