டெல்லி : பொதுவாக ஆட்டோமொபைல் துறையில் நிலவி வரும் மந்த நிலையால், ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனங்கள் சில நஷ்டம் கண்டுள்ள நிலையில், முன்னணி நிறுவனமான டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கடன் 1,17,571 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.
இது கடந்த ஜூன் காலாண்டில் 1,14,318 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் குழும நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனத்திடமிருந்து, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு 6,500 கோடி ரூபாய் மதிப்புள்ள ஊக்கத் தொகை பெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆட்டோமொபைல் துறையில் நிலவி வரும் நீடித்து மந்த நிலையில் இந்த கடன் அதிகரித்துள்ளதாகவும், இது கடந்த ஜூன் காலாண்டில் 1,14,318 கோடி ரூபாயாக இருந்ததாகவும் , இது கடந்த செப்டம்பர் காலாண்டில் 1,17,571 கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
இதில் குறிப்பாக வாகன வணிகத்தின் நிகர கடன் 46,515 கோடி ரூபாயிலிருந்து, 50,065 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. மார்ச் 2019ல் இதன் நிகர கடன் 28,391 கோடி ரூபாயாக இருந்துள்ள நிலையில். இதே ஒருங்கிணைந்த நிகர வாகன கடன் பங்கு விகிதம் 0.96 ஆக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 0.43 விகிதமாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதே இந்த நிறுவனத்தின் முழுமையான வருவாய் 43.7 சதவிகிதம் குறைந்து 10,000 கோடி ரூபாயாக இருந்தது. அதே நேரம் கடந்த செப்டம்பர் காலாண்டில் வெறும் 109 கோடி ரூபாயை மட்டுமே லாபமாக கண்டுள்ளது.
கடந்த ஜூலை - செப்டம்பர் காலாண்டில் விற்பனை 44 சதவிகிதம் சரிந்துள்ளதாகவும், இதே வர்த்தக வாகனங்கள் பிரிவில் 42 சதவிகிதம் குறைந்துள்ளதாகவும், இதே பயணிகள் வாகன விற்பனை 52 சதவிகிதம் குறைந்துள்ளதாகவும் ஏற்றுமதியும் 33 சதவிகிதம் சரிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதே முன்னணி கார் உற்பத்தியாளரான மாருதி சுசூகியின் விற்பனை இரண்டாவது காலாண்டில் 30.2 சதவிகிதம் விற்பனை சரிவடைந்தது. இதன் நிகர விற்பனை மதிப்பு 25.2 சதவிகிதம் குறைந்து 16,120 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications