ஆட்டோமொபைல் துறைக்கு இது மிக மோசமான காலம் தான். தொடர்ந்து கடந்த 11 மாதங்களாக பெரும் சரிவைக் கண்டு வரும் நிலையில், தற்போது வரை இதற்கு சரியான தீர்வு காணப்பட்டதாக தெரியவில்லை.
இந்த நிலையில் டாடா மோட்டார்ஸ் கடந்த ஞாயிற்றுகிழமையன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, கடந்த நவம்பர் மாதம் 25.32 சதவிகிதம் விற்பனை குறைந்து, 41,124 யூனிட்களாக குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டு இதே காலத்தில் 55,074 யூனிட்களாக விற்பனை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதே மொத்த உள்நாட்டு விற்பனை 25 சதவிகிதம் சரிந்து, 38,057 யூனிட்களாக விற்பனை வீழ்ச்சி கண்டுள்ளது. இது இதற்கு முந்தைய ஆண்டு இதே காலத்தில் 50,470 யூனிட்களாக விற்பனை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதே பயணிகள் வாகன விற்பனையானது 10,400 யூனிட்களாக விற்பனை செய்யப்பட்டிருந்தது. இதே கடந்த ஆண்டு இதே மாதத்தில் 16,982 யூனிட்களாக விற்பனை செய்யப்பட்டிருந்தது. இது சுமார் 39 சதவிகித வீழ்ச்சியாகும்.
இதே இந்த நிறுவனம் மொத்த வர்த்தக வாகன விற்பனையானது 19 சதவிகிதம் வீழ்ச்சி கண்டுள்ளது. இதுவே நவம்பரில் 30,588 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதற்கு முந்தியய ஆண்டில் இதே காலத்தில் 37,957 யூனிட்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதே ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் உள்ளிட்ட பல நிறுவனங்களும் கடந்த நவம்பர் மாதத்தில் வீழ்ச்சி கண்டுள்ளன.
ஏற்கனவே இத்துறையில் நிலவி வரும் மந்த நிலையால், பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் டாடா மோட்டார்ஸ் கடந்த மாதமே, தன்னார்வ விருப்ப ஓய்வு திட்டத்தினை அறிமுகப்படுத்தியது. இந்த நிலையில் இந்த பிரச்சனை இன்னும் நீளும் நிலையில், இது இன்னும் அதிகரிக்கலாம். அல்லது பணி நீக்கம் செய்யவும் வாய்ப்புகள் உள்ளது.
எப்படி எனினும் ஆட்டோமொபைல் துறையில் நீடிக்கும் இந்த மந்த நிலையானது அரசு புதியதாக கொண்டு வரவிருக்கும், பிஎஸ் 6 விதிகளுக்கு பின்பே சரியாகலாம் என்றும் கருதப்படுகிறது. அதுவரை ஆட்டோமொபைல் துறையில் தற்போது நீடித்து வரும் பிரச்சனையே நீளும் என்றும் கருதப்படுகிறது. அதுவறையிலும் இதுபோன்ற பிரச்சனைகள் அவ்வப்போது தலைதூக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இது டாடா மோட்டார்ஸில் மட்டும் அல்ல மற்ற நிறுவனங்களிலும் இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்றும் கருதப்படுகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications