இந்திய கார் விற்பனை சந்தையில் கடந்த 4-5 வருடமாக டாடா மோட்டார்ஸ் மிகப்பெரிய அளவிலான வளர்ச்சியை பதிவு செய்து வரும் வேளையில், புதிய வாடிக்கையாளர்களை அனைத்து மட்டத்திலும் பெற வேண்டும் என்ற இலக்குடன் குறைந்த விலை கார் முதல் ப்ரீமியம் கார்கள் வரையில் அடுத்துடுத்து அறிமுகம் செய்து வருகிறது.
இந்த நிலையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டிசம்பர் மாத ஸ்பெஷல் ஆஃபராக வாடிக்கையாளர்களுக்கு பெரிய சலுகை அறிவித்துள்ளது. புதிய கார்கள் வாங்குபவர்கள் வெறும் ரூ.4,999 முதல் மாத தவணை செலுத்தி புது டாடா கார் வாங்கும் வாய்ப்பை உருவாக்கியுல்ளது. இந்த சிறப்பு EMI திட்டம் டிசம்பர் 31, 2025 வரை மட்டும் அமலில் இருக்கும் எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இந்த சிறப்பு ஆஃபர் கீழ் நெக்ஸான், பஞ்ச், ஆல்ட்ரோஸ் போன்ற பிரபலமான 10 கார்களை டாடா மோட்டார்ஸ் விற்க உள்ளது. இதேபோல் எலக்ட்ரிக் வாகன பிரிவில் டியாகோ EV, பஞ்ச் EV, நெக்ஸான் EV, கர்வ் EV ஆகியவற்றுக்கும் இந்த சலுகை உள்ளது. இது குறைந்த விலையில் புதிய கார்களை வாங்குவோருக்கு ஜாக்பாட் ஆக விளங்குகிறது.
பெட்ரோல் கார்களுக்கு மாத தவணை ரூ.4,999 முதல் தொடங்குகிறது. டியாகோவுக்கு ரூ.4,999, டைகருக்கு ரூ.5,999, பஞ்சுக்கு ரூ.5,999, ஆல்ட்ரோஸுக்கு ரூ.6,777, நெக்ஸானுக்கு ரூ.7,666, கர்வ் காருக்கு ரூ.9,999. பெட்ரோல் கார்களுக்கான EMI கணக்கீடு 84 மாத தவணை காலம், 25 அல்லது 30 சதவீத பலூன் தொகை அடிப்படையில் கணக்கிடு செய்யப்பட்டு உள்ளது.
இதேபோல் எலக்ட்ரிக் கார்களுக்கு டியாகோ EV ரூ.5,999, பஞ்ச் EV ரூ.7,999, நெக்ஸான் EV ரூ.10,999, கர்வ் EV ரூ.14,555 மாத தவனையில் புதிய கார் வாங்கும் சலுகையை டாடா மோட்டார்ஸ் பலூன் கடன் திட்டம் மூலம் வழங்குகிறது. எலக்ட்ரிக் கார்களுக்கு 120 மாத தவணை காலம் அடிப்படையில் EMI கணிக்கப்பட்டது.
இந்த ஈஎம்ஐ தொகை குறிப்பிட்ட கடன் தொகை, தவணை காலம் அடிப்படையில் கணிக்கப்பட்டது. உண்மையான ஈஎம்ஐ அளவு ஆன் ரோடு விலை, கடன் தொகைக்கு ஏற்ப வேறுபடலாம்.
பலூன் திட்டம் என்றால் என்ன?
பலூன் திட்டத்தில் மாத தவணை குறைவாக இருக்கும். கடைசியில் ஒரு பெரிய தொகை செலுத்த வேண்டும். இது கார் வாங்கிய ஆரம்பக்கட்டத்தில் தவணையை குறைக்க உதவும், தவனை முடியும் தருவாயில் அதிக தொகை செலுத்த வேண்டியிருக்கும்.
பொதுவாக ஈஎம்ஐ திட்டத்தில் அனைத்து ஈஎம்ஐ தொகையும் ஓரே மாதிரியாக தான் ஆனால் இத்தகைய பலூன் கடன் திட்டத்தில் நெகிழ்வுதன்மை கொண்டது. ஆரம்பத்தில் ஈஎம்ஐ குறைவாக இருக்கும் நிலையில் எவ்விதமான பிரச்சனையும் இல்லை, கடன் காலத்தின் இறுதியில் செலுத்த வேண்டிய அதிகப்படியான தொகையை உங்களின் சம்பள உயர்வு, போனஸ் தொகையை வைத்து செலுத்தலாம். இத்தகைய திட்டங்கள் கார் கடன் மூலம் எடுப்பவர்களுக்கு வசதியாக இருக்கும்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications