டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எலக்ட்ரிக் வாகனப் பிரிவு கடந்த நிதியாண்டில் பாசிட்டிவ் ஆன ஆப்ரேட்டிங் லாப வரம்பை (EBITDA) அடைந்துள்ளது. உலகளவில் சில எலக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்களே இந்த அளவீட்டை எட்டியிருக்கும் நிலையில், டாடா மோட்டார்ஸ் தனது எலக்ட்ரிக் வாகன வர்த்தகத்தை துவங்கி சில ஆண்டுகளிலேயே எட்டியுள்ளது பலரையும் வியக்க வைத்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது வர்த்தக வாகனங்கள் மற்றும் பயணிகள் வாகனங்களை இரு தனித்தனி பட்டியலிடப்பட்ட நிறுவனங்களாகப் பிரிக்க திட்டமிட்டுள்ள வேளையில் ஈவி பிரிவின் ஆப்ரேட்டிங் மார்ஜின் லாபகரமாக இருப்பது அதன் முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் ஆக அமைந்துள்ளது.

டாடா மோட்டார்ஸ் இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமாக இருப்பினும், எலக்ட்ரிக் வாகன விற்பனையில் முன்னோடியாக இருப்பினும் அதன் பங்கு மதிப்பில் பெரிய அளவிலான வளர்ச்சியை இதுவரையில் பதிவு செய்யவில்லை. இது நிர்வாகத்திற்கும் சரி, முதலீட்டாளர்களுக்கும் சரி பெரும் சுமையாகவே இருந்தது.
இதனை கருத்தில் கொண்டு டாடா மோட்டார்ஸ்-ன் பயணிகள வாகன பிரிவின் வர்த்தகத்தை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்குடன் டாடா மோட்டார்ஸ் 2ஆக பிரிக்க டாடா சன்ஸ் சந்திரசேகரன் தலைமையிலான நிர்வாகம் முடிவு செய்தது. தற்போது இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் டாடா மோட்டார்ஸ்-ன் இந்த டீமெர்ஜர் முதலீட்டாளர்களுக்கு நீண்டகால மதிப்பு உருவாகும் என டாடா சன்ஸ் தலைவர் என்.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
இந்த வர்த்தக பிரிப்பு உள்ளூர் உற்பத்தி, செலவு குறைப்பு, மற்றும் உற்பத்தி தொடர்பான ஊக்குவிப்பு (PLI) நன்மைகள் மூலம் நிதி மேம்பாடு கிடைத்தாலும், இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அதிகரித்துள்ள போட்டியால் டாடா மோட்டார்ஸ்-ன் எலக்ட்ரிக் வாகன விற்பனை மற்றும் சந்தைப் பங்கு குறைந்துள்ளது இதை முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எலக்ட்ரிக் வாகனப் பிரிவு கடந்த நிதியாண்டில் பாசிடீவ் ஆப்ரேட்டிங் லாப வரம்பை (EBITDA) பதிவு செய்ய உள்ளூர் உற்பத்தி மேம்பாடு, செலவு குறைப்பு முயற்சிகள் மற்றும் உற்பத்தி தொடர்பான ஊக்குவிப்பு (PLI) திட்டத்தின் கீழ் கிடைத்த நிதி ஆதரவு முக்கிய காரணங்களாக உள்ளது.
டாடா மோட்டார்ஸ்-க்கு மொத்தமாக 527 கோடி ரூபாய் PLI ஊக்குவிப்பு நிதி பெறப்பட்டது, இதில் 2025 நிதியாண்டுக்கு 385 கோடி ரூபாயும், 2024 நிதியாண்டுக்கு 142 கோடி ரூபாயும் அடங்கும். இதனால், EBITDA வரம்பு 8.3 சதவீத புள்ளிகள் உயர்ந்து, -7.1% இல் இருந்து 1.2% ஆக மேம்பட்டு உள்ளது.
டாடா மோட்டார்ஸ் தனது வணிக வாகனங்கள் மற்றும் பயணிகள் வாகனங்களை இரு தனித்தனி பட்டியலிடப்பட்ட நிறுவனங்களாகப் பிரிக்க திட்டமிட்டுள்ளது. இதன்படி, வணிக வாகனங்கள் தொடர்பான அனைத்து சொத்துக்கள், ஊழியர்கள் மற்றும் முதலீடுகளுடன் புதிய நிறுவனமான TMLCV உருவாக்கப்படும்.
அதேநேரம், பயணிகள் வாகனப் பிரிவு (TMPV) டாடா மோட்டார்ஸ் லிமிடெட் (TML) உடன் மீண்டும் இணைக்கப்பட்டு, TML பட்டியலிடப்பட்ட நிறுவனமாகத் தொடரும். இந்தப் பிரிப்பு முடிந்தவுடன், இரு நிறுவனங்களும் புதிய பெயர்கள் உடன் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும்.
டாடா மோட்டார்ஸ்-ன் டீமெர்ஜர் திட்டத்தின் கீழ், TML-இல் 2 ரூபாய் மதிப்புள்ள ஒவ்வொரு முழு பங்குக்கும், பங்குதாரர்கள் TMLCV-இல் 2 ரூபாய் மதிப்புள்ள ஒரு முழு பங்கைப் பெறுவார்கள். இது "Entitlement Ratio" என அழைக்கப்படுகிறது. இதன்மூலம், பங்குதாரர்கள் இரு நிறுவனங்களிலும் சமமான பங்குகளைப் பெறுவார்கள்.
இந்திய எலக்ட்ரிக் வாகனச் சந்தையில் டாடா மோட்டார்ஸ் முதல் இடத்தில் உள்ளது, ஈவி பிரிவில் டாடா மோட்டார்ஸ் டியாகோ மற்றும் நெக்ஸான் உள்ளிட்ட ஆறு மாடல்கள் உள்ளன. இருப்பினும், எம்ஜி மோட்டார் மற்றும் மஹிந்திரா & மஹிந்திரா போன்ற நிறுவனங்களின் புதிய கார் அறிமுகத்தாலும், அதன் போட்டியாலும், 2025 நிதியாண்டில் எலக்ட்ரிக் வாகன விற்பனை 9,285 கோடி ரூபாயில் இருந்து 8,187 கோடி ரூபாயாகக் குறைந்தது. இதனால், சந்தைப் பங்கு 73.1% இல் இருந்து 55.4% ஆக வீழ்ச்சியடைந்தது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications