இரண்டாக உடையும் டாடா மோட்டார்ஸ்.. பங்கு விலை தடாலடியாக 2% வரையில் உயர்வு..!

இந்தியாவின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் நிறுவனங்களில் ஒன்றான டாடா மோட்டார்ஸ் அடுத்தடுத்து புதிய கார்களை அறிமுகம் செய்து மக்கள் மத்தியில் அதிகளவிலான வரவேற்பு பெற்றுள்ள நிலையில், வேகமாக வளர்ச்சி அடைய வேண்டும் என்று பல முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறது.

இதன் அடிப்படையில் டாடா மோட்டார்ஸ் கீழ் கார், டிரக், வர்த்தக வாகனங்கள் எனப் பல வாகனங்களைத் தயாரித்து வரும் நிலையில் நிறுவனத்தை இரண்டாக உடைக்க முடிவு செய்துள்ளது.

இந்தச் செய்தி டாடா மோட்டார்ஸ் முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் திங்கட்கிழமை காலை வர்த்தகத்தில் டாடா மோட்டார்ஸ் பங்குகள் யாரும் எதிர்பார்க்காத வகையில் 1.98 சதவீதம் வரையில் உயர்ந்து ஒரு பங்கு விலை 291.40 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம்

டாடா மோட்டார்ஸ் நிறுவனம்

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஆகஸ்ட் 27ஆம் தேதி வெளியிட்ட தரவுகள் அடிப்படையில் டாடா மோட்டார்ஸ் நிர்வாகம் தனது பயணிகள் வாகன வர்த்தகப் பிரிவைத் தனியாகப் பிரித்து ஒரு கிளை நிறுவனமாக இயக்க தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தின் மும்பை பென்ச் ஒப்புதல் அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

பயணிகள் வாகன பிரிவு

பயணிகள் வாகன பிரிவு

இந்தப் பயணிகள் வாகன பிரிவில் கீழ் தான் பெட்ரோல் கார்கள், டீசல் கார்கள், புதிதாகத் துவங்கியுள்ள எலக்ட்ரிக் கார் தயாரிப்பு மற்றும் விற்பனை பிரிவுகளும் உள்ளது. இப்பிரிவை தனியாகப் பிரித்துள்ளதன் மூலம் இப்பரிவு பங்குகளை மட்டும் தனியாக விற்பனை செய்து முதலீட்டை ஈர்ப்பது மட்டும் அல்லாமல் பல முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் உடன் கூட்டணியும் வைக்க முடியும் என டாடா விளக்கம் அளித்துள்ளது.

தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம்

தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம்

இந்தப் பிரிவு குறித்து மார்ச் 2020, ஜூலை 2020, மார்ச் 2021 என மூன்று முறை டாடா மோட்டார்ஸ் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்திடம் அறிக்கை சமர்ப்பித்தற்கு ஆகஸ்ட் 24, 2021ல் ஒப்புதல் கிடைத்துள்ளது. இதன் படி வர்த்தகத்தைத் தனியாகப் பிரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக மும்பை பங்குச்சந்தையில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது டாடா மோட்டார்ஸ்.

Tata Motors Passenger Vehicles நிறுவனம்

Tata Motors Passenger Vehicles நிறுவனம்

இந்த முடிவுக்கு டாடா மோட்டார்ஸ் குழுமம் முதல் கட்டமாக ஒப்புதல் அளிக்கும் போது பயணிகள் வாகன பிரிவுக்கு TML Business Analytics Services எனப் பெயர் வைக்கத் திட்டமிட்டது, ஆனால் தற்போது Tata Motors Passenger Vehicles என்ற பெயரில் புதிய நிறுவனத்திற்கு மொத்த பயணிகள் வாகன பிரிவை மாற்ற உள்ளது.

டாடா மோட்டார்ஸ் மதிப்பு

டாடா மோட்டார்ஸ் மதிப்பு

பயணிகள் வாகன பிரிவு தனியாகப் பிரிக்கப்படுவதன் மூலம் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மதிப்பில் எவ்விதமான மாற்றமும் இருக்கப்போவது இல்லை. இதனால் முதலீட்டாளர்களுக்கு எவ்விதமான பிரச்சனையும் இல்லை.

நஷ்டத்தின் அளவு

நஷ்டத்தின் அளவு

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பயணிகள் வாகன பிரிவின் மொத்த நஷ்டத்தின் அளவு 11,173 கோடி ரூபாய், இந்நிறுவனத்தின் மொத்த மதிப்பு 9,417 கோடி ரூபாய். இப்புதிய Tata Motors Passenger Vehicles நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளும் டாடா மோட்டார்ஸ் கட்டுப்பாட்டில் தான் இருக்கும்.

டாடா சன்ஸ்

டாடா சன்ஸ்

டாடா சன்ஸ் வெளிநாட்டு முதலீட்டுச் சந்தையில் தனிப்பட்ட முறையில் 1 பில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடாகத் திரட்ட முடிவு செய்துள்ளது. இந்த முதலீடு மொத்தமும் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய டாடா குழுமம் திட்டமிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தொழிற்சாலை

தமிழ்நாட்டில் தொழிற்சாலை

டாடா குழுமம் சமீபத்தில் மொபைல் போன் மற்றும் எலக்ட்ரானிக் கருவிகள் உற்பத்தியில் இறங்கியது. இத்துறையில் குறுகிய காலகட்டத்திலேயே சிறப்பான வளர்ச்சி அடைந்தது. இதனால் டாடா குழுமம் இப்பிரிவு வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யவும் தமிழ்நாட்டில் புதிதாக ஒரு மொபைல் மற்றும் உதிரிப்பாகங்கள் தயாரிப்பு தொழிற்சாலையை உருவாக்க முடிவு செய்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+