டாடா மோட்டார்ஸின் அதிரடி.. பயணிகள் வாகன வணிகத்தினை தனி நிறுவனமாக மாற்ற திட்டம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாட்டின் மிகப்பெரிய வாகன நிறுவனமான டாடா மோட்டார்ஸ் நிறுவனம், தனது பயணிகள் வாகனங்களின் வணிகத்தினை ஒரு தனி நிறுவனமாக மாற்ற பங்குதாரர்கள் ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இது குறித்து மார்ச் 5ம் தேதியன்று நடந்த வாக்கெடுப்பில், பயணிகள் வாகனங்களின் வணிகப் பிரிவை, TML பிசினஸ் அனலிஸ்டிக்ஸ் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு மாற்றுவதை பரிசீலித்து வாக்கெடுப்பு நடைபெற்றது.
இந்த பயணிகள் வாகன வணிகத்தின் மதிப்பு 9,417 கோடி ரூபாய் என்று இந்த நிறுவனம் கூறியுள்ளது.

ஆதரவான வாக்குகள்

ஆதரவான வாக்குகள்

இது குறித்து பங்கு சந்தைக்கு தாக்கல் செய்த அறிக்கையில், டாடா மோட்டாஸ் மொத்தம் 2,15,41,38,392 வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில் 2,15,32,39,294 வாக்குகள் இந்த நடவடிக்கைக்கு ஆதரவாக வந்துள்ளன. ஆக மொத்தத்தில் மொத்த வாக்குகளில் 99.958% சாதகமாக வந்துள்ளது. மீதமுள்ள 8,99,098 வாக்குகள் (0.042%) எதிராக வந்துள்ளன.

நிறுவனம், நிறுவனம் சாரா பங்குதாரர்கள்

நிறுவனம், நிறுவனம் சாரா பங்குதாரர்கள்

இதே பொது நிறுவன பங்குதாரர்களைப் பொறுத்த வரையில் மொத்தம் 68,86,10,054 வாக்குகள் பதிவாகின. இவை அனைத்தும் ஆதரவாகவே வந்தன. எந்தவொரு வாக்கும் டாடா மோட்டார்ஸின் திட்டத்திற்கு எதிராக இல்லை.

இதே பொது நிறுவனம் சாராத பங்குதாரர்கள் பிரிவில் மொத்தம் 15,20,76,906 வாக்குகள் பதிவாகின. இதில் 15,11,77,808 வாக்குகள் ஆதரவாகவும் (99.409%), 8,99,098 வாக்குகள் எதிராகவும் (0.591%) தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

எப்போது நிறுத்தம்

எப்போது நிறுத்தம்

இந்த ஆண்டு மே - ஜூன் மாதங்களில் அதன் உள்நாட்டு பயணிகள் வாகனத்தினை நிறுத்துவதற்காக செயல்முறை முடிவடையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இது வணிகத்திற்கு சாத்தியமான கூட்டாளரை இன்னும் அழைக்கவில்லை.
கடந்த ஆண்டு தனது உள்நாட்டு பயணிகள் வாகன வணிகத்தினை தனி நிறுவனமாக மாற்றுவதாகவும், அதன் நீண்டகால நம்பகத்தன்மையை பாதுகாக்க உதவும் வகையில் ஒரு மூலோபாய பங்காளித்துவதை நாடுவதாகவும் அறிவித்திருந்தது.

மறுசீரமைப்பு அவசியம்

மறுசீரமைப்பு அவசியம்


டாடா மோட்டார்ஸ் தனது ஒட்டுமொத்த வணிக மறுசீரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக, பயனிகள் வாகன வணிகம் மற்றும் அதன் நலன்களின், வளர்ச்சி, மேம்பாடு ஆகியவற்றை வழங்குவதற்காகவும் பயணிகள் வாகன வணிகத்தினை மறுசீரமைப்பது அவசியம் என்றும் கூறியது.

அதோடு இது பிவி வாகனம் மற்றும் வணிக வாகனங்கள் என தனித்தனியாக கவனம் செலுத்த உதவியாக இருக்கும். இது அதன் வணிகம் மேம்பட உதவும் என்றும் டாடா மோட்டார்ஸ் கூறியுள்ளது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tata motors gets shareholders nod to hive off PV business into new subsidiary

Tata motors updates.. Tata motors gets shareholders nod to hive off PV business into new subsidiary
Story first published: Monday, March 8, 2021, 22:46 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X