உலகின் முன்னணி ஆட்டோமொபைல் கம்பெனிகளில் ஒன்று நம் இந்தியாவின் டாடா மோட்டார்ஸ்.
இந்த டாடா மோட்டார்ஸ் கம்பெனியின் குளோபல் மொத்த வியாபாரம் (Wholesale) பாதாளத்தில் இருக்கிறதாம்.
டாடா போன்ற இந்தியாவின் மிகப் பெரிய வணிக சாம்ராஜ்யத்துக்கு இந்த அடி விழுந்து இருக்கிறது என்றால், குட்டி குட்டி கம்பெனிகள், சிறு குறு தொழில்முனைவோர்களுக்கு எல்லாம் எப்படி அடி விழுந்து இருக்கும் என்று நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது. சரி விவரங்களைப் பார்ப்போம்.
மொத்த வியாபாரம்
டாடா மோட்டார்ஸின் ஒட்டு மொத்த உலக Wholesale வியாபாரம், இந்த ஜூன் 2020 காலாண்டில், முந்தைய நிதி ஆண்டின் ஜூன் காலாண்டை விட 64 சதவிகிதம் சரிந்து இருக்கிறதாம். இதில் ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் போன்ற விலை உயர்ந்த சொகுசு கார்களின் Wholesale விற்பனையையும் சேர்த்துத் தான் சொல்லி இருக்கிறார்களாம். டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஒட்டு மொத்த ஜூன் 2020 காலாண்டில் நடந்த Wholesale வியாபாரம் 91,954 வாகனங்கள் தானாம்.
வாகனங்கள் ரக வாரியாக
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வணிக வாகனங்கள் மற்றும் டாடா தாவோ (Daewoo) வாகனங்களின் Wholesale விற்பனை எண்ணிக்கை ஜூன் 2019 காலாண்டை விட, ஜூன் 2020 காலாண்டில் 89 சதவிகிதம் சரிந்து இருக்கிறதாம். அதே போல டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பயணிகள் வாகனங்களின் Wholesale விற்பனை எண்ணிக்கை ஜூன் 2019 காலாண்டை விட, ஜூன் 2020 காலாண்டில் 49 சதவிகிதம் சரிந்து இருக்கிறதாம்.
2019-ல் இருந்து பிரச்சனை
இந்த கொரோனா வைரஸ் பிரச்சனை வருவதற்கு முன், சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்த கம்பெனிகள் கூட, தற்போது செயல்பட முடியாமல் தடுமாறிக் கொண்டு இருக்கிறது. ஆனால், இந்திய ஆட்டோமொபைல் துறைக்கு, கடந்த 2019-ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே பல்வேறு பிரச்சனைகள் சூழத் தொடங்கிவிட்டன.
பொருளாதாரம்
2019-ம் ஆண்டிலேயே பெரும்பாலான மாதங்களில் ஆட்டோமொபைல் கம்பெனிகள் லாபம் பார்க்க முடியாமல், விற்பனை அதிகரிக்க முடியாமல் தடுமாறின. இப்போது கொரோனா வைரஸ் வேறு சேர்ந்து கொண்டு, ஆட்டோமொபைல் துறையையே ஒரு வழி ஆக்கிக் கொண்டு இருக்கிறது. எப்போது கொரோனா வைரஸுக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்து, பொருளாதாரம் மேம்பட்டு, மக்கள் கையில் பணம் சேர்ந்து, அவர்கள் வாகனங்களை வாங்குவார்கள், எப்போது இந்திய ஆட்டோமொபைல் கம்பெனிகள் லாபம் பார்பப்து என்று தெரியவில்லை.


Click it and Unblock the Notifications