கார் உற்பத்தியாளர்களான ஹோண்டா, டாடா மோட்டார்ஸ், ரெனால்ட் நிறுவனங்கள், அதன் வாகனங்கள் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளன.
இது தொடர்ந்து வாகன உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் மூலதன பொருட்களின் விலை அதிகரிப்பால், உற்பத்தி விலை விகிதமானது பலமான ஏற்றத்தினை கண்டுள்ளது.
இதன் காரணமாக வாகனங்கள் விலையை அதிகரிக்க வேண்டிய கட்டாய நிலைக்கு நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன.
மாருதி சுசுகி விலை அதிகரிப்பு
ஏற்கனவே சில தினங்களுக்கு முன்பு மாருதி சுசுகி நிறுவனம், ஆடி மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் உள்ளிட்ட வாகன நிறுவனங்கள் வாகன விலையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளன. இதில் மாருதி சுசுகி நிறுவனம் ஜனவரி 2022ல் விலையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இது வாகனங்களின் மாடலை பொறுத்து விலையேற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Array
இதே மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் மூலதன பொருட்கள் விலை அதிகரிப்பு காரணமாக, அதன் கார்களின் விலையை மாடல்களுக்கு ஏற்றவாறு 2% வரை அதிகரிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
சொகுசு காரான இந்த வாகனங்களின் விலையேற்றம் என்பது வாகன விற்பனையை பாதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆடி கார் விலை
இதே ஆடி நிறுவனம் ஜனவரி 1, 2022ல் இருந்து அதன கார் விலையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இது மாடல்களுக்கு ஏற்றவாறு 3% வரையில் மாற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவும் மூலதன பொருட்கள் விலை அதிகரிப்பு காரணமாக, செயல்பாட்டு விலையும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக விலையேற்றம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது.
ஹோண்டா கார்
வாகன உற்பத்திக்கு தேவையான கமாடிட்டிகளின் விலையும், முக்கிய மூலதன பொருட்கள் பற்றாக்குறையால் விலை ஏற்றம் இந்த விலை அதிகரிப்புக்கு வழிவகுத்துள்ளது. இதற்கிடையில் தான் ஹோண்டா கார் நிறுவனம் விலை அதிகரிப்பு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது.
ரெனால்ட் என்ன நிலவரம்
ரெனால்ட் நிறுவனமும் ஜனவரி மாதம் முதல் கொண்டு கார் விலையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. பிரெஞ்ச் நிறுவனமான இது அதன் குவிட், ட்ரைபர், கைகர் உள்ளிட்ட சிறிய ரக மற்றும் நடுத்தர ரக கார்கள் இந்தியாவில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இது அலுமினியம், காப்பர், பிளாஸ்டிக் உள்ளிட்ட மெட்டல்களின் விலை அதிகரிப்பு காரணமாக இந்த விலை அதிகரிப்பு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications