இந்தியாவின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டாடா மோட்டார்ஸ் தனது வாடிக்கையாளர்களுக்கு பெரும் ஷாக் ஒன்றை அளித்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது வாகனங்களின் விலையை ஜூலை 1 முதல் உயர்த்த போவதாக அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பின்படி டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தயாரிக்கும் வாகனங்கள் 1.5 சதவீதம் முதல் 2.5 சதவீதம் வரை விலை உயர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாடா மோட்டார்ஸ்
இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமாக விளங்கிவரும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஜூலை 1 முதல் விலை உயர்த்தப் போவதாக அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு என்பது வாகனங்களை பொறுத்து 1.5 சதவீதத்தில் இருந்து 2.5 சதவீதம் வரை இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விலை உயர்வு
ஒரு சில குறிப்பிட்ட மாடல், வேரியண்ட் அடிப்படையில் விலை உயர்வு இருக்கும் என்றும் இந்த வாகன விலை உயர்வு அனைத்து வாகனங்களுக்கும் பொருந்தும் என்றும் டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.
உற்பத்தி செலவு அதிகரிப்பு
வாகன உற்பத்தியில் ஏற்படும் செலவுகள் அதிகரித்ததன் காரணமாகவே விலை உயர்வு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தங்களது வாகனத்தின் விலையை உயர்த்தி நிலையில் தற்போது மீண்டும் உயர்த்தியுள்ளது வாடிக்கையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது.
தவிர்க்க முடியாத விலை உயர்வு
இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் உற்பத்திப் பொருட்களின் விலை உயர்வு காரணமாகவும் பல்வேறு உற்பத்தி செலவு காரணமாகவும் இந்த விலை உயர்வு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் உற்பத்தி செலவு கணிசமாக அதிகரித்துள்ளதால் விலை உயர்வை தவிர்க்க முடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.
உதிரிபாகங்கள் விலை
கடந்த சில நாட்களாக வாகன உற்பத்திக்கு தேவையான உதிரிபாகங்கள் விலை உச்சத்திற்கு சென்று கொண்டிருக்கும் நிலையில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பெரும் சிக்கலை சந்தித்து வருகின்றன. எனவே டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை அடுத்து வேறு சில வாகன உற்பத்தி நிறுவனங்களும் விலையை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விலை உயர்வு எவ்வளவு?
வாகனங்களை பொருத்தும் 1.5 சதவீதம் முதல் 2.5 சதவீதம் வரை விலை உயர்வு இருக்கும் என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அதாவது ஒரு வாகனத்தின் விலை 10 லட்ச ரூபாய் என்றால் சுமார் 15 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
ஒரே வருடத்தில் இரண்டாவது முறை
கடந்த ஏப்ரல் மாதம் தான் டாட மோட்டார்ஸ் தனது கார்கள் உள்பட ஒருசில வாகனங்களின் விலையை 1.1 சதவீதம் அதிகரித்த நிலையில் தற்போது இரண்டே மாதங்களில் மீண்டும் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications