இந்திய எலக்ட்ரிக் வாகன சந்தையில் பல நிறுவனங்கள் போட்டிப்போட்டாலும், டாடா மோட்டார்ஸ் அதிகப்படியான வர்த்தகச் சந்தையைக் கைப்பற்றிப் பெரிய அளவிலான ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இந்நிலையில் டாடா மோட்டார்ஸ் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யவும் ஒவ்வொரு பிரிவிலும் தனிப்பட்ட கவனத்தைச் செலுத்த டாடா மோட்டார்ஸ் கீழ் டாடா பேசன்ஜர் எலக்ட்ரிக் மொபிலிட்டி கீழ் அனைத்து எலக்ட்ரிக் வாகன வர்த்தகத்தையும் கொண்டு வந்தது.
இந்த நிலையில் டாடா பேசன்ஜர் எலக்ட்ரிக் மொபிலிட்டி தற்போது புதிய சாதனையைப் படைத்துள்ளது.
டாடா மோட்டார்ஸ்
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கிளை நிறுவனமான டாடா பேசன்ஜர் எலக்ட்ரிக் மொபிலிட்டி தனது புனே தொழிற்சாலையில் 50000 நெக்சான் EV வாகனத்தைத் தயாரித்துப் புதிய சாதனை படைத்துள்ளது.
50000 கார்
எந்த ஒரு ஆட்டோமொபைல் நிறுவனமும் இதுவரையில் 50000 எலக்ட்ரிக் வாகனங்களைத் தயாரிக்காத நிலையில் டாடா மோட்டார்ஸ்-ன் டாடா பேசன்ஜர் எலக்ட்ரிக் மொபிலிட்டி முதல் நிறுவனமான 50000 எலக்ட்ரிக் கார்களைத் தயாரித்துச் சாதனை படைத்துள்ளது.
10 புதிய எலக்ட்ரிக் கார்கள்
டாடா மோட்டார்ஸ் தற்போது தனது எலக்ட்ரிக் கார்களுக்கு three-phased architecture முறையைப் பயன்படுத்தி வருகிறது. இந்தக் கட்டமைப்பில் அடுத்த 5 வருடத்தில் 10 எலக்ட்ரிக் வாகன மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிமுகம் செய்துள்ளது.
என்.சந்திரசேகரன்
இந்த நிலையில் இந்த வெற்றியை கொண்டாடிய டாடா சன்ஸ் மற்றும் டாடா மோட்டார்ஸ் தலைவரான என்.சந்திரசேகரன் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் பேசுகையில், 2018ல் எலக்ட்ரிக் வாகனத்தைத் தயாரிக்கும் திட்டத்தை ஒரு கனவு திட்டமாகத் துவங்கினோம், கடந்த 4 வருடத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.
4 மாடல்கள்
இந்தப் பிரம்மாண்ட வளர்ச்சிக்கு டாடா மோட்டார்ஸ்-ன் கோர் டீம் மற்றும் டாடா குழுமத்தின் பிற நிறுவனங்களின் உதவிகள் பெரிய அளவில் உதவியுள்ளது. டாடா மோட்டார்ஸ் கீழ் தற்போது டியாகோ EV, டிகார் EV, நெக்சான் EV ப்ரைம், நெக்சான் EV மேக்ஸ் ஆகிய கார்கள் உள்ளது.
மத்திய - மாநில அரசுகள்
இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாட்டையும், விற்பனைகளையும் அதிகரிக்க மத்திய அரசும், மாநில அரசுகளும் அதிகப்படியான சலுகைகளை அளித்து வருகிறது. இதனால் டாடா மோட்டார்ஸ் அனைத்து எலர்க்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனங்களும் பயன் பெறுகிறது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications