இந்திய ஆட்டோமொபைல் துறையில் கடந்த 5 வருடத்தில் பெருமளவிலான வர்த்தகத்தைப் பெற்றது மட்டும் அல்லாமல் எலக்ட்ரிக் வாகன பிரிவில் முடிசூடா மன்னனாக இருக்கிறது டாடா மோட்டார்ஸ்.
இந்நிறுவனம் EV துறையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற முக்கியமான இலக்குடன் அடுத்தடுத்து கார்களை அறிமுகம் செய்வது மட்டும் அல்லாமல் டாடா குழுமத்தின் பிற நிறுவனங்களையும் இணைத்து டாடா மோட்டார்ஸ் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் புதுமையான திட்டத்தை முன்வைத்துள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது எலக்ட்ரிக் வாகனங்களின் வரிசையில் நெக்சான் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்த நிலையில், அடுத்ததாக வெளியிடப்போகும் கார்கள் எது, அதன் அறிமுக கால அட்டவணையையும் வெளியிட்டுள்ளது.
புதிய கார்கள்: டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அடுத்ததாக Curvv.ev, Harrier.ev, Sierra.ev மற்றும் Avinya ஆகிய எலக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்ய உள்ளது. இதில் அதிகம் எதிர்பார்ப்பு இருப்பது Curvv.ev மற்றும் Avinya கார் மீது தான்.
எப்போது அறிமுகம்: நடப்பு நிதியாண்டில் (FY25) புதிய Curvv மற்றும் Harrier எலக்ட்ரிக் வாகன மாடல்களை அறிமுகப்படுத்த டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு ஆட்டோ கண்காட்சியில் Avinya என்ற கான்செப்ட் எலக்ட்ரிக் கார் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, Avinya மற்றும் Sierra எலக்ட்ரிக் கார்கள் அடுத்த நிதியாண்டில் (FY26) அறிமுகமாகவுள்ளன.
மேலும், Avinya என்ற பெயரில் பல எலக்ட்ரிக் கார்களை டாடா நிறுவனம் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எலக்ட்ரிக் கட்டமைப்பை வலுப்படுத்துதல்: எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்காக, எலக்ட்ரிக் கட்டமைப்பை வலுப்படுத்த டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.
2024 நிதியாண்டில் இருந்த 10,000 பப்ளிக் எலக்ட்ரிக் சார்ஜிங் நிலையங்களை 2030ம் ஆண்டுக்குள் 1,00,000 க்கும் அதிகமாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது டாடா மோட்டார்ஸ்.
அதேபோல், கம்யூனிட்டி எலக்ட்ரிக் சார்ஜிங் நிலையங்களின் எண்ணிக்கையையும் 4,300 இல் இருந்து 1,00,000 க்கும் அதிகமாக அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
எலக்ட்ரிக் கட்டணத்தில் சலுகை: எலக்ட்ரிக் வாகன வாடிக்கையாளர்களுக்குக் கூடுதல் லாபம் வழங்கும் வகையில், எலக்ட்ரிக் வாகனங்களுடன் சோலார் ரூப்டாப் இணைத்து விற்க டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.
இதன் மூலம் எலக்ட்ரிக் கார் வாங்கும் வாடிக்கையாளர்கள் சோலார் ரூப்டாப் அமைப்பதில் கூடுதல் பணத்தை மிச்சப்படுத்த முடியும். இது சோலார் ரூப்டாப் மற்றும் எலக்ட்ரிக் வாகன விற்பனைக்கு மேலும் ஊக்கமளிக்கும்.
டாடா குழுமத்தின் பலம்: டாடா எலக்ட்ரிக் வாகனங்கள் தற்போது ஜே.எல்.ஆர், அகார்டாஸ், டாடா ஆட்டோகாம்ப் சிஸ்டம்ஸ் மற்றும் டாடா பவர் போன்ற டாடா குழும நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் மேம்பட்ட தொழில்நுட்பங்கள், உள்நாட்டு உற்பத்தி மற்றும் செலவு குறைப்பு ஆகியவற்றை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் எளிதில் சாதிக்க முடியும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications