கொரோனா எதிரொலி.. நிலைமை மோசமடைந்தால் ஆலை மூடப்படலாம்.. டாடா மோட்டார்ஸ் அறிவிப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில், மகாராஷ்டிராவில் அதன் தாக்கம் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது மிக அதிகமாகவே பரவி வருகிறது.

இந்த நிலையில் நிலைமை இன்னும் மோசமடைந்தால், அங்குள்ள கார் தயாரிப்பு ஆலை மூடப்படும் என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் உள்ள ஆலையில் லாரிகள், கார்களை, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

ஆலையை மூட நடவடிக்கை

ஆலையை மூட நடவடிக்கை

இந்த நிலையில் இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. அதிலும் இந்தியாவிலேயே மகாராஷ்டிராவில் நிலைமை மிக மோசமாக தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், டாடா மோட்டார்ஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் குவென்டர் பட்செக் நிலைமை மோசமடைந்தால் திங்கட்கிழமைக்குள் பணிகளைக் குறைக்கவும், செவ்வாய்கிழமைக்குள் கார் தயாரிப்பு ஆலையை மூடவும் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா அரசு உத்தரவு

மகாராஷ்டிரா அரசு உத்தரவு

பிரிட்டீஸ் சொகுசு கார் நிறுவனமான ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் ஆகியவற்றின் உரிமையாளரான டாடா மோட்டார்ஸின் இந்த நடவடிக்கை, இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா வழக்குகளுக்கு மத்தியில் வந்துள்ளது. டாடா மோட்டார்ஸ் ஆலை மற்றும் பொறியியல் மையம் அமைந்துள்ள மும்பை மற்றும் புனே உள்ளிட்ட முக்கிய மூன்று நகரங்களில் அத்தியாவசிய சேவைகளைத் வழங்குவதைத் தவிர, அனைத்து கடைகள் மற்றும் அலுவலகங்களை மூடுமாறு மகாராஷ்டிரா அரசு உத்தரவிட்டுள்ளது.

நிலைமை மோசமடைந்தல் ஆலையை மூடலாம்
 

நிலைமை மோசமடைந்தல் ஆலையை மூடலாம்

இந்த நிலையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திங்கட்கிழமைக்குள் அதன் செயல்பாடுகளை குறைத்து, விஷயம் இன்னும் மோசமாகும் பட்சத்தில் செவ்வாய்கிழமை அதன் ஆலையை மூட தயாராக இருக்கும் என்று அதன் நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார். மேலும் இது மார்ச் 31 வரை மூடப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

நிலைமையை கண்கானித்து வருகிறோம்

நிலைமையை கண்கானித்து வருகிறோம்

மேலும் எங்கள் அலுவலகங்கள் மற்றும் ஆலைகள் எங்கெல்லாம் அமைந்துள்ளதோ, அங்கெல்லாம் உன்னிப்பாகக் கண்கானிப்போம். தேவை ஏற்பட்டால் பொருத்தமான மற்றும் செயல்திறன் மிக்க நடவடிக்கைகளை எடுப்போம் என்றும் புட்செக் கூறியுள்ளார். இந்தியாவின் மிகப்பெரிய டிரக் தயாரிப்பாளரான டாடா மோட்டார்ஸ் நாடு முழுவதும் அரை டஜன் உற்பத்தி ஆலைகளைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உற்பத்தி நிறுத்தம்

உற்பத்தி நிறுத்தம்

இந்த நிலையில் பயணிகள் கார்கள் மற்றும் லாரிகள் உருவாக்கும் தளங்களில் புனே மிகப்பெரிய பங்கினைக் கொண்டுள்ளது. ஜாகுவார் லேண்ட் ரோவர் வியாழக்கிழமையன்று ஐக்கிய இராச்சியத்தில் அதன் உற்பத்தியை அடுத்த வாரம் முதல் கொண்டு உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்த உள்ளதாகவும, மேலும் வைரஸ் பரவலை தடுக்க ஸ்லோவாக்கியா ஆலையில் அதன் பணிகளை நிறுத்திவிட்டதாகவும் டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tata motors may shut down Maharashtra plant due to coronavirus outbreak

Tata Motors will scale down its operations by the end of Monday and will be prepared to close the plant by Tuesday if things further worsen. and its adding that it will remain in this mode until March 31.
Story first published: Saturday, March 21, 2020, 21:10 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X