இந்தியாவில் சரக்கு போக்குவரத்து புதிய உச்சத்தை எட்டி வரும் வேளையில் இத்துறையில் நேரடியாக களமிறங்கி அசத்தி வரும் வேளையில் தற்போது பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியங்களும் நேரடியாகவும், மறைமுகமாகவும் களமிறங்க துவங்கியுள்ளது.
இதன்படி இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான டாடா மோட்டார்ஸ் சுமார் 150 கோடி ரூபாய் முதலீடு செய்து SAAS நிறுவனமான ஃபரைட் டைகர் -ல் சுமார் 27 சதவீத பங்குகளை வாங்குவதாக அறிவித்தது.

டாடா மோட்டார்ஸ் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 100 கோடி ரூபாயை கூடுதலாக முதலீடு செய்யவும் ஏற்பாடுகள் இந்த ஒப்பந்தத்தில் முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஃபரைட் டைகர் நிறுவனத்தின் பிஸ்னஸ் என்ன..? டாடா மோட்டார்ஸ் நேரடியாக முதலீடு செய்ய என்ன காரணம்..?
ஃபிரைட் காமர்ஸ் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் என்பது ஒரு டிஜிட்டல் சேவை தளமாகும். இந்தியாவில் சரக்கு போக்குவரத்திற்கான எண்ட்-டு-எண்ட் லாஜிஸ்டிக்ஸ் வேல்யூ செயின் தீர்வுகளை இந்நிறுவனம் வழங்குகிறது. இந்த டிஜிட்டல் தளம் ஷிப்மென்ட் செய்பவர்கள், கேரியர்கள், லாஜிஸ்டிக்ஸ் சேவை வழங்குநர்கள் மற்றும் சரக்கு வாகன உரிமையாளர்களை டிஜிட்டல் முறையில் சந்தையுடன் இணைக்கிறது.
இந்த இணைப்பு மூலம் லாஜிஸ்டிக்ஸ் துறையில் சப்ளை மற்றும் டிமாண்ட்-ஐ பூர்த்தி செய்கிறது. இத்தளத்தின் மூலம் சரக்கு வாகன உரிமையாளர்கள் சரக்குகளைக் கண்டறிவது முதல் போக்குவரத்து தேவைப்படும் நிறுவனங்கள் பதிவு செய்வது வரையில் அதை நிர்வகிக்கும் பணிகளை எளிதாக்குகிறது.
இந்த நிலையில் Freight Tiger நிறுவனத்தின் சிஇஓ ஸ்வப்னில் ஷா இதுகுறித்து கூறுகையில் எங்கள் கனவுகள் மெய்படவும், உறுதியான முதலீட்டாளர்களையும், விரிவாக்கம் செய்வதற்கான தளத்தையும் ஒரு சிறந்த முதலீட்டாளராக டாடா மோட்டார்ஸ் எங்களுக்கு கிடைத்துள்ளது. டாடா மோட்டார்ஸ் கூட்டணி மூலம் இந்தியாவில் போக்குவரத்து செலவுகளில் தற்போதைய 14 சதவீத ஜிடிபி அளவை 10 சதவீதமாக குறைக்கும் பணத்தில் Freight Tiger நிறுவனம் முக்கிய பங்கு விகிக்கும் என தெரிவித்தார்.
Freight Tiger நிறுவனம் வாகன உரிமையாளர்கள் மற்றும் சரக்கு உரிமையாளர்களுக்கு டிராக்கிங் சேவை அளிக்கிறது, இதோடு கரியர் மேட்சிங், பல்வேறு ஆவணங்கள் மற்றும் பேமெண்ட் சேவைகளும் அளிக்கிறது. Freight Tiger நிறுவனம் இதுவரையில் சுமார் 1 கோடி பேருக்கு சேவைகளை அளித்துள்ளது.
Freight Tiger நிறுவனத்தில் முதலீடு செய்வது மூலம் டாடா மோட்டார்ஸ் தனது கனரக வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பது மட்டும் அல்லாமல் அதன் சொந்த connected vehicle தளமான Fleet Edge சேவையை மேம்படுத்தும்.


Click it and Unblock the Notifications