இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகச் சாம்ராஜ்ஜியமான டாடா குழுமம் கடந்த 6 மாதங்களாக வட இந்திய பகுதிகளில் முதலீடு செய்வதில் அதிகப்படியான கவனத்தைத் தெலுத்தி வந்தது. இதில் குறிப்பாகக் குஜராத் மற்றும் அசாம் மாநிலத்தில் செமிகண்டக்டர் தயாரிப்பு மற்றும் பேக்கேஜிங் தொழிற்சாலைக்கான முதலீடு நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானதாக மாறியது.
இந்த நிலையில் தற்போது என்.சந்திரசேகரன் தலைமையிலான டாடா சன்ஸ் நிறுவனம் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை டீமெர்ஜிங் செய்து பங்குச்சந்தையில் பணிகள் வாகனத்தைத் தனி நிறுவனமாகவும், வர்த்தக வாகனத்தைத் தனி நிறுவனமாகவும் பிரித்துப் பட்டியலிடப்போவதாகச் செபியிடம் அறிவித்துள்ளது, இந்த அறிவிப்பு வெளியான நாளில் இருந்து டாடா மோட்டார்ஸ் பங்குகள் மீது அதிகப்படியான முதலீடு குவிந்து வருகிறது.

இந்த முக்கியமான கட்டத்தில் டாடா மோட்டார்ஸ் தனது வாகன உற்பத்தியை அதிகரிக்கத் தமிழ்நாட்டில் புதிய மற்றும் மெகா முதலீட்டுத் திட்டத்தை அறிவித்துள்ளது. ராணிப்பேட்டையில் 9000 கோடி ரூபாய் முதலீட்டில் 5000 பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பை அளிக்கும் வகையில் புதிய உற்பத்தி தொழிற்சாலையை அமைக்கும் வழியை ஆராயத், தமிழ்நாட்டு அரசின் முதலீட்டு நோடல் ஏஜென்சியான கைடென்ஸ் தமிழ்நாடு அமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த முதலீட்டை டாடா மோட்டார்ஸ் 5 வருடத்தில் முதலீடு செய்ய திட்டமிட்டு உள்ளது.
இதற்கான ஒப்பந்தத்தில் நேற்று தமிழ்நாடு அரசு மற்றும் டாடா மோட்டார்ஸ் மத்தியில் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து டாடா மோட்டார்ஸ் வெளியிட்ட அறிக்கையில் தமிழ்நாட்டில் புதிய வாகன உற்பத்தி தொழிற்சாலை என்பதை மட்டுமே குறிப்பிட்டு உள்ளது. இதில் கார் தொழிற்சாலையா அல்லது கனரகத் தொழிற்சாலையா என்பதைத் தெரிவிக்கவில்லை.
ராணிப்பேட்டை-யில் தொழிற்சாலையை அமைக்கப் போகிறது என்று வெளியான தகவலைத் தொடர்ந்து இப்பகுதி வர்த்தகத்தைப் பார்க்கும் போது கனரகத் தொழிற்சாலைகள் அதிகமாகக் காணப்படுகிறது.
குறிப்பாக மிட்சுபிஷி ஹெவி இண்டஸ்ட்ரீஸ் இந்தியா பிரிசிஷன் டூல்ஸ், டிவிஎஸ் - பிர்கேஸ் இந்தியா, BHEL, அர்செல்லார் தாம் பிராசசிங், எம்ஆர்அப் ஆகியவை உள்ளது.
இதனால் டாடா மோட்டார்ஸ் ராணிப்பேட்டையில் வர்த்தக வாகனங்களுக்கான தொழிற்சாலையை அமைக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. பங்குச்சந்தையில் தனியாகப் பிரித்துப் பட்டியலிடப்படும் டாடா மோட்டார்ஸ் வர்த்தக வாகனங்களுக்கு இது மிகவும் சிறப்பான துவக்கமாக இருக்கும்.
இதேவேளையில் ராணிப்பேட்டையில் டாடா மோட்டார்ஸ் கார் தொழிற்சாலையாக அமைத்தால் சென்னை கார் உற்பத்தி பேஸ்மென்ட்-க்கு இணையாகவும், உதவியாகவும் ராணிப்பேட்டை உருவாகும்.
More From GoodReturns

மீண்டும் இந்திய பங்குச்சந்தையை நோக்கி வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! இனியாவது சந்தை ஏறுமா?

3 ஆண்டுகளில் 740% வளர்ச்சி அடைந்த மல்டிபேக்கர் பங்கு: இப்போது முதலீடு செய்யலாமா?

ரூ.666 இருந்தால் போதும் ரூ.1 கோடி இலக்கை எட்டலாம்…!! அட இவ்வளவு ஈஸியான வழி இருக்கா?

அப்புறம் பாத்துக்கலாம்னு அசால்ட்டா இருக்காதீங்க! 5 வருஷம் லேட் பண்ணா ரூ3கோடி காலி.. SIP ரகசியம்?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?



Click it and Unblock the Notifications