இந்தியாவில் மின்சார வாகனங்களை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் மின்சார கார்களை போட்டி போட்டுக் கொண்டு பல்வேறு நிறுவனங்களும் அறிமுகம் செய்த வண்ணம் இருக்கின்றன.
டெஸ்லா, வின்ஃபாஸ்ட் போன்ற வெளிநாட்டு நிறுவனங்களின் மின்சார கார்கள் இந்திய சந்தைக்குள் நுழைந்துவிட்ட நிலையில் உள்நாட்டு நிறுவனங்கள் தற்போது போட்டி போட்டுக் கொண்டு மின்சார கார்களுக்கான விலைகளை குறைத்து வருகின்றன. அந்த வகையில் இந்தியாவின் முன்னணி வாகன விற்பனை நிறுவனமான டாடா தங்களுடைய மின்சார கார்களுக்கு அதிகபட்சமாக 3.8 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி அறிவித்திருக்கிறது. பிப்ரவரி மாதத்துடன் இந்த தள்ளுபடி முடியும் என தெரிவித்துள்ளது.

நெக்ஸான் (Nexon) : நெக்ஸான் மின்சார கார்களுக்கு அதிகபட்சமாக 1.2 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. 2024, 2025இல் தயாரிக்கபட்ட chassis model கார்களுக்கு அதிகபட்ச சலுகை கிடைக்கும். 2026ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட நெக்ஸான் மின்சார கார்களுக்கு 30,000 வரை தள்ளுபடி கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டியாகோ (Tiago) : டியாகா மின்சார கார்களுக்கு டாடா நிறுவனம் 1.5 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி அறிவித்துள்ளது. டாடாவின் மலிவு விலை மின்சார கார்களாக டியாகா மாடல் கார்கள் இருக்கின்றன. இதில் 2024 மற்றும் 2025இல் தயாரிக்கப்பட்ட chassis model கார்களுக்கு 1.5 லட்சம் ரூபாயும், 2026இல் தயாரிக்கப்பட்ட மாடல் கார்களுக்கு 60 ஆயிரம் ரூபாய் வரையிலும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹேரியர் (Harrier) : டாடாவின் விலைமதிப்பு மிக்க மின்சார கார் இது. இதில் 2025 மற்றும் 2026 ஆகிய ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட அனைத்து மாடல்களுக்கும் 1.5 லட்சம் ரூபாய் தள்ளுபடி அறிவித்திருக்கிறது. இது தவிர லாயல்டி போனஸும் கிடைக்குமாம்.

பன்ச் (Punch) : டாடாவின் புகழ்பெற்ற மின்சார கார் இது. இதில் 2024,2025இல் தயாரிக்கப்பட்ட chassis model கார்களுக்கு 1.6 லட்சம் வரை தள்ளுபடி கிடைக்கும். 2026 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட பன்ச் கார்களுக்கு 90,000 ரூபாய் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்வ் (Curvv) : டாடா நிறுவனத்தில் அதிகமாக தள்ளுபடி பெற்ற மின்சார கார் இது தான். இந்த மாடல் கார்களுக்கு 3.8 லட்சம் ரூபாய் வரை அதிகபட்ச தள்ளுபடி வழங்கப்பட்டிருக்கிறது. இதில் 2024, 2025 ஆம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட chassis model கார்களுக்கு 3.3 லட்சம் ரூபாய் தள்ளுபடி கிடைக்கிறது. அதே போல 2026 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட கார்களுக்கு 2.8 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடியும். மற்ற அனைத்து வகையான கார்களுக்கும் 3.8 லட்சம் ரூபாய் வரையிலும் தள்ளுபடி கிடைக்கும் என டாடா நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications