இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனமான டாடா மோட்டார்ஸுக்கு சொந்தமான, பிரிட்டனை சேர்ந்த உலகப் புகழ்பெற்ற சொகுசு மற்றும் ஸ்போர்ட்ஸ் வாகனத் தயாரிப்பு நிறுவனம் தான் ஜாகுவார் லேண்ட் ரோவர் (JLR). பல நூற்றாண்டுகால பிரிட்டன் பொறியியல் பாரம்பரியத்தை கொண்ட JLR, உலகளாவிய சொகுசு கார் சந்தையில் வலுவான இடத்தை பிடித்துள்ளது.
இந்நிலையில் தான், ஜாகுவார் லேண்ட் ரோவர் மீது சைபர் தாக்குதல் நடந்துள்ளது. ஆனால் தற்போது, இதிலிருந்து படிப்படியாக மீண்டு வருவதாகவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதேசமயம், வரும் நாட்களில் தனது சில உற்பத்தி நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த சைபர் தாக்குதலை தொடர்ந்து JLR-இன் உற்பத்தி முற்றிலுமாக நிறுத்தியதன் காரணமாக, மூடிஸ் முதலீட்டாளர் சேவை (Moody's Investors Service) டாடா மோட்டார்ஸின் மதிப்பீட்டுக் கண்ணோட்டத்தை நெகட்டிவாக குறைத்துள்ளது. மூடிஸ், டாடா மோட்டார்ஸின் Ba1 கார்ப்பரேட் குடும்ப மதிப்பீட்டை (CFR) அப்படியே வைத்திருந்தாலும், கண்ணோட்டத்தை பாசிட்டிவில் இருந்து நெகட்டிவாக மாற்றியுள்ளது.
இதுதொடர்பாக மூடிஸின் உதவித் துணைத் தலைவரும் ஆய்வாளருமான ஸ்வேதா படோடியா கூறுகையில், "நிறுவனத்தின் கடன் அளவீடுகள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பப் பல மாதங்கள் ஆகும் என்பதையே இந்த மாற்றம் குறிக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
இந்த சைபர் தாக்குதல் சம்பவம், சுற்றுச்சூழல், சமூக மற்றும் நிர்வாகம் பிரிவின் கீழ், வாடிக்கையாளர் உறவு அபாயங்கள் குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது. இதுவே மதிப்பீட்டுக் கண்ணோட்டத்தைக் குறைக்க முக்கிய காரணமாகவும் அமைந்துள்ளது. அக்.1ஆம் தேதி முதல் டாடா மோட்டார்ஸின் வணிக வாகனப் பிரிவு பிரிக்கப்பட்ட பிறகு, JLR நிறுவனம் அதன் ஒருங்கிணைந்த EBITDA-வில் 90%-க்கும் அதிகமாகப் பங்களிக்கும்.
JLR உற்பத்தி நிறுத்தம் காரணமாக, மார்ச் 2026 உடன் முடிவடையும் நிதியாண்டில் டாடா மோட்டார்ஸின் ஒருங்கிணைந்த EBITDA சுமார் 850 மில்லியன் டாலராக குறையும் என்று மூடிஸ் மதிப்பிட்டுள்ளது. இது, இதற்கு முன் மதிப்பிடப்பட்ட சுமார் 3 பில்லியன் டாலரை விட மிக குறைவாகும். அதேபோல், இந்த ஆண்டு அதிகரித்த செயல்பாட்டு மூலதன தேவைகள் காரணமாக, செயல்பாடுகளில் இருந்து எதிர்மறையான பணப்புழக்கம் ஏற்படக்கூடும் என்றும் மூடிஸ் எதிர்பார்க்கிறது.
உற்பத்தி நிறுத்தப்பட்ட நிலையிலும், சப்ளையர் கொடுப்பனவுகள் மற்றும் ஊழியர் சம்பளங்களுக்காக JLR வாரந்தோறும் சுமார் 500 மில்லியன் பவுண்டுகள் பணத்தை வெளியேற்றி வருகிறது. இருப்பினும், சப்ளையர் கொடுப்பனவுகள் குறையும்போது, வரும் வாரங்களில் இந்த பண வெளியேற்றம் படிப்படியாக குறையும் என்று மூடிஸ் தெரிவித்துள்ளது.
JLR வசம் சுமார் 25,000 வாகனங்கள் இருப்பு உள்ளது. எனவே, இது குறுகிய கால செயல்பாட்டு மூலதன அழுத்தத்தை குறைக்க உதவும் என்று மூடிஸ் கூறியுள்ளது. இருப்பினும், உற்பத்தி நிறுத்தம் நீண்ட காலம் நீடித்தாலோ அல்லது இயல்பு நிலைக்கு திரும்பத் தாமதமானாலோ, வருவாய் மற்றும் பணப்புழக்கங்களில் ஏற்படும் பாதிப்பு மிகவும் கடுமையாக இருக்கும் என்றும் மூடிஸ் எச்சரித்துள்ளது.
தற்போதைய நெகட்டிவ் கண்ணோட்டத்தின் அடிப்படையில், அடுத்த 12 முதல் 18 மாதங்களுக்குள் மதிப்பீடு உயர்வு ஏற்பட வாய்ப்பில்லை. JLR-இன் நிலைமை சீராகி, மீண்டு வந்தால் மட்டுமே, இந்த மதிப்பீட்டு கண்ணோட்டம் நிலையானது என்று மாறும்.
இந்த சைபர் தாக்குதலின் விளைவுகளை குறைக்க, JLR விரைவில் அதன் உற்பத்தி நடவடிக்கைகளை ஓரளவு மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. முதலீட்டாளர்கள் மற்றும் பங்குதாரர்கள் நிறுவனத்தின் நீண்டகால செயல்பாடுகளில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் இந்த நிலைமையை உன்னிப்பாக கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications