இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பயணிகள் வாகன பிரிவில் பொதுவாகவே வெளிநாட்டு நிறுவனத்தின் ஆதிக்கம் சற்று கூடுதலாகவே இருக்கும். இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கார்கள் 90 சதவீதம் இந்தியாவில் தயாரிக்கப்பட்டாலும், அதில் அதிகப்படியானவை வெளிநாட்டு நிறுவனத்துடையது.
சமீபத்தில் ஆட்டோமொபைல் சந்தையில் பல பிரச்சனைகள், பல மாற்றங்கள் நடந்து வரும் வேளையில், ஹூண்டாய் நிறுவனத்தைப் பின்னுக்குத் தள்ளி டாடா மோட்டார்ஸ் 2வது இடத்தைப் பிடித்துள்ளது.
ஆட்டோமொபைல் சந்தை
இந்திய ஆட்டோமொபைல் சந்தை 2021ஆம் ஆண்டில் செமிகன்டக்டர் சிப் தட்டுப்பாடு மற்றும் மோசமான 2வது தொற்று அலையில் இருந்து மிகவும் சிறப்பான முறையில் மீண்டு வந்துள்ளது என்றால் மிகையில்லை.
30 லட்சம் கார்கள்
2021ஆம் ஆண்டு வர்த்தகம் முடிந்து ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களது விற்பனை தரவுகளை வெளியிட்டு வருகிறது. 2020ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் 2021ஆம் ஆண்டில் சுமார் 27 சதவீதம் அதிக விற்பனையைப் பதிவு செய்துள்ளது. இதன் மூலம் இந்திய வரலாற்றிலேயே 3வது முறையாக 30 லட்சம் வாகனங்கள் 2021ஆம் ஆண்டில் விற்பனை செய்யப்பட்டு உள்ளது.
விலை உயர்வு
ஆட்டோமொபைல் நிறுவனங்கள் உற்பத்தி மற்றும் போக்குவரத்துச் செலவுகள் அதிகமாகியுள்ள வேளையில் கார்களின் விலையை அனைத்து முன்னணி நிறுவனங்களும் ஒரு முறைக்கும் அதிகமாக உயர்த்திய நிலையிலும் உற்பத்தி 27 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது இந்திய சந்தையில் புதிய கார்களுக்கான டிமாண்டை காட்டுகிறது.
ஹூண்டாய் - டாடா மோட்டார்ஸ்
இந்தச் சிறப்பான வர்த்தகத்தில் கடந்த 10 வருடத்தில் முதல் முறையாக இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட நிறுவனங்களின் பட்டியலில் ஹூண்டாய் நிறுவனத்தை 3 வது இடத்திற்குத் தள்ளிவிட்டு 2வது இடத்தை டாடா மோட்டார்ஸ் டிசம்பர் 2021 வர்த்தகத்தின் மூலம் கைப்பற்றியுள்ளது.
வரலாறு காணாத உச்சம்
இது மட்டும் அல்லாமல் டாடா மோட்டார்ஸ் வரலாறு காணாத விதமாக மாதாந்திர, காலாண்டு மற்றும் வருடாந்திர வர்த்தகத்தை இந்த டிசம்பர் 2021, அக்டோபர் - டிசம்பர் 2021, 2021ஆம் ஆண்டில் பதிவு செய்துள்ளது.
விற்பனையும், உற்பத்தியும்
டிசம்பர் 2021ல் மட்டும் டாடா மோட்டார்ஸ் சுமார் 3,53,000 கார்களை விற்பனை செய்துள்ளது, இதேவேளையில் ஹூண்டாய் நிறுவனம் 3,23,312 கார்களை விற்பனை செய்துள்ளது. 2021ஆம் ஆண்டில் ஹூண்டாய் நிறுவனத்தில் சிப் தட்டுப்பாடு காரணமாகத் தனது உற்பத்தியைப் பல நாடுகள் நிறுத்தியும், குறைத்தும் உள்ளது.
எலக்ட்ரிக் கார் விற்பனை
மேலும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எலக்ட்ரிக் கார் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது டிசம்பர் மாதம் மட்டும் சுமார் 2,255 எலக்ட்ரிக் கார்களை டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்துள்ளது.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

ஈரான் போரை மையமாக வைத்து புதிய தொழில்: கோடிகளை அள்ளும் டிரம்ப் மகன்கள்!! வெளிச்சத்துக்கு வந்த உண்மை!!



Click it and Unblock the Notifications