டாடா மோட்டார்ஸின் அதிரடி முடிவு.. கார் பிரியர்கள் கவலை..!

இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமான டாடா மோட்டார்ஸ் நிறுவனம், தனது பயணிகள் வாகன விலையை நவம்பர் 7ம் தேதி முதல் உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது.

டாடா வாகனங்களின் விலை அதிகரிப்பானது மாடலுக்கு ஏற்ப மாறுபடலாம் என்றாலும்,விலை 0.9% அளவுக்கு ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது வாகன உதிரி பாகங்களின் செலவினங்கள் அதிகரித்த நிலையில், வாகன உற்பத்தி விலையும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நிறுவனங்களின் செலவினங்களும் அதிகரித்துள்ளது.

ஏன் செலவு அதிகரிப்பு?

ஏன் செலவு அதிகரிப்பு?

ஏற்கனவே அதிகரித்திருக்கும் உள்ளீட்டுச் செலவினங்கள் அதிகரித்துள்ள நிலையில், ஒட்டுமொத்த உற்பத்தி செலவினங்களும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாகவே இந்த விலை அதிகரிப்பினை செய்துள்ளதாகவும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விளக்கம் கொடுத்துள்ளது.

என்னென்ன கார்கள்?

என்னென்ன கார்கள்?

டாடா நிறுவனம் தற்போது டியாகோ, நெக்ஸான், ஹாரியர் மற்றும் சஃபாரி உள்ளிட்ட பல வகையான பயணிகள் வாகனங்களை விற்பனை செய்து வருகின்றது. ஆக இவற்றின் விலையானது வரும் திங்கட்கிழமை முதல் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் விலை அதிகரிப்பு

மீண்டும் விலை அதிகரிப்பு

ஏற்கனவே மூலதன பொருட்கள் விலை அதிகரித்ததன் காரணமாக, ஜூலை மாதம் கார்களின் விலையை ஏற்கனவே உயர்த்தியிருந்தது. தற்போது மீண்டும் இந்த விலை அதிகரிப்பானது, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த சில மாதங்களாக விற்பனை அதிகரித்து வரும் நிலையில், செலவினங்களும் அதிகரித்துள்ள நிலையில் வந்துள்ளது.

விற்பனை

விற்பனை

இதன் மின்சார வாகன விற்பனை உட்பட கடந்த அக்டோபர் மாதத்தில் வாகன விற்பனையானது 45,423 ஆக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 34, 155 ஆக இருந்தது. இது கடந்த ஆண்டினை காட்டிலும் 33% அதிகரித்துள்ளது.

சமீபத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டாடா டியாகோ வாகனத்தினை அறிமுகம் செய்தது. இதன் எக்ஸ் ஷோரூம் விலை 8.49 ரூபாயில் இருந்து ஆரம்பமாகிறது. இது அதிகபட்சமாக 11.79 லட்சம் ரூபாய் வரையில் செல்கின்றது.

மின்சார வாகன விற்பனை அதிகரிப்பு

மின்சார வாகன விற்பனை அதிகரிப்பு

மக்களின் தேவைக்கு ஏற்ப வாகனங்களை வடிவமைத்து விற்பனை செய்து வரும் டாடா நிறுவனம், மின்சார வாகனத் துறையிலும் முன்னணி விற்பனையாளராக உள்ளது. இது அடுத்த 5 ஆண்டுகளில் மின்சார வாகன பிரிவில் 15,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ள நிலையில், 10 புதிய ரக மின்சார வாகனங்களையும் அறிமுகம் செய்யவுள்ளதாக சமீபத்தில் அறிவித்தது. இது டாடாவின் விற்பனையை அதிகரிக்க உதவும் எனலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+