Tata Motors: சமீபத்திய மாதங்களாகவே பல்வேறு வாகன நிறுவனங்கள் தங்களது வாகன விற்பனையை அதிகரித்து வருகின்றன. இது சர்வதேச அளவில் நிலவி வரும் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், வாகன உற்பத்திக்கு தேவையான உற்பத்தி பொருட்களின் சப்ளையானது குறைந்துள்ளது.
ஆக மூலதன பற்றாக்குறை என்பது இன்றைய நிலவரப்படி வாகன நிறுவனங்கள் எதிர்கொண்டு வரும் பெரும் பிரச்சனையாகவே உள்ளது.

மூலதன பொருட்கள் பற்றாக்குறைக்கு மத்தியில், தேவை அதிகரிப்பால் அவற்றின் விலையானது அதிகரித்துள்ளது. இதன் காரணமாக உற்பத்தி செலவும் அதிகரித்துள்ளது. இது மேற்கொண்டு இந்த செலவுகளை ஈடுகட்டவும் வாகன நிறுவனங்கள் தங்களது வாகன விலையை உயர்த்த வேன்டிய கட்டாயத்தில் உள்ளன.
இதற்கிடையில் தான் சமீபத்திய மாதங்களாகவே பல்வேறு வாகன நிறுவனங்களும் வாகனங்கள் விலையை அதிகரித்துள்ளன.
அந்த வகையில் தற்போது டாடா குழுமத்தினை சேர்ந்த வாகன நிறுவனமான டாடா மோட்டார்ஸ் மே 1 முதல் அதன் வாகனங்கள் விலையை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலம், விலையானது 0.6% வரையில் அதிகரிப்படலாம் என தெரிகிறது. இதன் மூலம் வாகனங்களின் மாடலுக்கு ஏற்ப விலை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு செலவு அதிகரிப்பின் மத்தியிலும், நல்ல தரமான வாகனங்களை வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப கொடுக்க வேண்டும். ஆக விலைவாசி அதிகரித்த் உஅவ்ரும் இந்த சூழலில் இந்த விலை அதிகரிப்பு என்பது கட்டாயம் இருக்க வேண்டிய சூழல் இருந்து வருகின்றது.

டாடா மோட்டார் மட்டுமே தனது வாகன விலையை உயர்த்தவில்லை. இந்தியாவின் மிகப்பெரிய கார் விற்பனையாளரான மாருதி, ஹூண்டாய், ஹோண்டா உள்ளிட்ட வாகன நிறுவனங்களும் விலையை உயர்த்த போவதாக சமீபத்திக் அறிவித்துள்ளன. அவை அவற்றின் வாகங்களின் மாடலுக்கு ஏற்ப 2000 ரூபாய் முதல் 15,000 ரூபாய் வரையில் விலையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.
டாடா மோட்டார்ஸின் இந்த விலை அதிகரிப்பானது நடப்பு ஆண்டில் இரண்டாவது முறையாகும். ஏற்கனவே மூலதன பொருட்கள் விலை அதிகரிப்பால் வாகனங்களின் உற்பத்தி விலை அதிகரித்த நிலையில் தான் விலை அதிகரிப்பும் வந்தது. இந்த நிலையில் தற்போதும் இரண்டாவது முறையாக அதே காரணத்திற்காக விலை அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications