இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் டாடா மோட்டார்ஸ் தனது நிதி நிலையை மேம்படுத்துவதற்காக ஒரு முக்கியமான முடிவை எடுத்துள்ளது. கடந்த ஒரு மாதமாக அதானி குழுமத்தின் அளவுக்கு அதிகமான கடன் மற்றும் கணக்கியல் மோசடிகள் குறித்த குற்றச்சாட்டுகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் அதானி குழும பங்குகளின் சரிவை சரி செய்ய அதானி குழுமம் தனது கடன்களைப் படிப்படியாகக் குறைத்து வருகிறது.
இதேவேளையில் பங்கு முதலீட்டாளர்கள் தற்போது ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்யும் கடன் அளவை முக்கியக் காரணியாகப் பார்க்கின்றனர். இதனால் டாடா மோட்டார்ஸ் தனது கடன் அளவை குறைக்க 1 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்யத் திட்டமிட்டு உள்ளது.
இந்தப் பங்குகளை விற்க பெரும் முதலீட்டு நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்த துவங்கியுள்ளது. இந்தப் பங்கு விற்பனை மூலம் டாடா மோட்டார்ஸ் தனது இந்திய வர்த்தகத்தில் நெட் ஜீரோ டெபிட் இலக்கை அடைய உள்ளதாகத் தெரிகிறது.
டாடா மோட்டார்ஸ் முடிவு
டாடா மோட்டார்ஸ் இந்தியா எலக்டிரிக் வாகன சந்தையில் பெரும் ஆதிக்கத்தைக் கொண்டு வேகமாக வளர்ச்சி அடைந்தது மட்டும் அல்லாமல் கடந்த 10 வருடத்தில் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தான் விட்ட இடத்தைப் பிடித்தாக வேண்டும் என்பதற்காக அடுத்தடுத்து பல புதிய மாடல் கார்களை அறிமுகம் செய்யத் திட்டமிட்டு வருகிறது. இதுமட்டும் அல்லாமல் டாடா மோட்டார்ஸ் EV பயணத்தில் சக போட்டி நிறுவனங்கள் ஈடுக்கொடுக்க முடியாத அளவுக்குத் தற்போது போராடி வருகின்றனர்.

இது ரொம்ப முக்கியம் பாஸ்
இந்த நிலையில் நிறுவனத்தின் நிதி நிலையை மேம்படுத்த கடன் அளவை குறைக்க டாடா மோட்டார்ஸ் சுமார் 1 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது, இதற்காக UAE நாட்டின் அபுதாபி இன்வெஸ்ட்மென்ட் அத்தாரிட்டி, முபதலா இன்வெஸ்ட்மென்ட் கம்பெனி, சவுதி அரேபியாவின் பப்ளிக் இன்வெஸ்ட்மென்ட் பண்ட, சிங்கப்பூர் Temasek ஹோல்டிங்க்ஸ், KKR, ஜெனரல் அட்லான்டிக் போன்ற நிறுவனத்திடம் டாடா மோட்டார்ஸ்-ன் EV பிரிவின் பங்குகளை விற்பனை செய்யப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
எவ்வளவு டார்கெட்
இந்த EV பிரிவு பங்கு விற்பனையில் திரட்டப்படும் 1 பில்லியன் டாலர் தொகையில் சிறிய அளவிலான தொகை மட்டும் முதலீடாக ஏற்றுக்கொண்டு மீதமுள்ள தொகையைக் கடன் அளவை குறைப்பதற்காகப் பயன்படுத்த திட்டமிட்டு உள்ளது டாடா. டாடா குழுமம் கடந்த முறை முதலீட்டை திரட்டிய போது EV பிரிவு 9.1 பில்லியன் டாலர் அளவில் மதிப்பீடு செய்யப்பட்டது.

வியக்கவைக்கும் வேல்யூவேஷன்
இந்த நிலையில் தற்போதைய முதலீட்டுச் சுற்றில் குறைந்தது 15 சதவீதம் அதிகம் மதிப்பிடப்பட்டு 10.5 பில்லியன் டாலர் அளவில் மதிப்பிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரையில் டாடா குழுமமோ அல்லது முதலீடு ஈர்க்க பேச்சுவார்த்தை நடத்தும் நிறுவனங்களோ எவ்விதமான அறிவிப்புகளையும் வெளியிடவில்லை.

டாடா எலக்ட்ரிக் வாகன பிரிவு
டாடா மோட்டார்ஸ் தனது வர்த்தகத்தை வேகமாக விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பதற்காகப் பல பிரிவுகளாகத் தனது உற்பத்தி தளத்தையும், வர்த்தகத்தையும் பிரித்தது. இதன் அடிப்படைியில் தற்போது Tata Passenger Electric Mobility Ltd கீழ் தற்போது டாடா மோட்டார்ஸ்-ன் எலக்ட்ரிக் வாகன பிரிவு உள்ளது. இந்நிறுவனம் 2021ல் TPG Rise Climate மற்றும் ADQ உடனான ஒப்பந்தம் மூலம் 1 பில்லியன் டாலர் அளவிலான நிதியை திரட்டியது.
இன்று டாடா மோட்டார்ஸ் பங்கு விலை என்ன தெரியுமா..? இதை கிளிக் செய்யுங்க..
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications