டாடா டெக்னாலஜிஸ் ஐபிஓ-வின் கடைசி நாள் இன்று, 2 ரூபாய் முக மதிப்பில் 475- 500 ரூபாய் விலை பட்டியலில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் முதலீட்டாளர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று 6.08 கோடி பங்குகளுக்குச் சுமார் 15.10 மடங்கு அதிக முதலீட்டைப் பெற்று அசத்தியுள்ளது. அடுத்த சில வருடங்களுக்கு ஐபிஓ சூப்பர்ஸ்டார் என்றால் டாடா டெக்னாலஜிஸ் தான் என்று கூறும் அளவுக்குச் சாதனைப்படைத்துள்ளது.
இந்த நிலையில் டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் ஐபிஓ-வில் அதிகப்படியான லாபம் பார்த்தது யாரு என்றால் கட்டாயம் அது டாடா மோட்டார்ஸ் தான். இந்த ஐபிஓ-வில் டாடா டெக்னாலஜிஸ் சுமார் 6.08 கோடி பங்குகளை விற்பனை செய்யும் வேளையில், இதில் டாடா மோட்டார்ஸ் மட்டுமே 4.63 கோடி டாடா டெக்னாலஜிஸ் பங்குகளை விற்கிறது.

டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் பெரும் பகுதி பங்குகளை 1996 ஆம் ஆண்டு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வாங்கித் தனது பங்கு இருப்பை 64.79 சதவீதமாக வைத்திருந்தது. அப்போது வெறும் 7.4 ரூபாய்க்கு வாங்கப்பட்ட பங்குகள் தற்போது 500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இந்த ஐபிஓ-வில் டாடா மோட்டார்ஸ் விற்கும் 4.63 கோடி டாடா டெக்னாலஜிஸ் பங்குகளின் அப்போதைய விலை வெறும் 34 கோடி ரூபாய் மட்டுமே, ஆனா இப்போது இதன் மதிப்பு 2300 கோடி ரூபாய் . இதன் மூலம் டாடா மோட்டார்ஸ் 1996 ஆம் ஆண்டு முதலீடு செய்த பணத்திற்கு இப்போது 67 மடங்கு லாபத்தைப் பதிவு செய்துள்ளது.
இந்த ஐபிஓ மூலம் டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் டாடா மோட்டார்ஸ்-ன் பங்கு இருப்பு 64.79 சதவீதத்தில் இருந்து 53.39 சதவீதமாக மட்டுமே சரிய உள்ளது. ஐபிஓ-வுக்குப் பின்பும் டாடா மோட்டர்ஸ் அதிகப்படியான பலன்களை அனுபவிக்க உள்ளது என்றால் மிகையில்லை.
டாடா டெக்னாலஜிஸ் ஐபிஓ-வில் QIB பிரிவில் ஒதுக்கப்பட்ட பங்குகளுக்கு 8.55 மடங்கு முதலீடும், NII பிரிவுக்கு 31.19 மடங்கும், ரீடைல் பிரிவுக்கு 11.56 மடங்கும், ஊழியர்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்குகளுக்கு 2.47 மடங்கும், இதர பிரிவுகளுக்கு ஒதுக்கப்பட்ட பங்குகளுக்கு 20.48 மடங்கு என மொத்தமாக 6.08 கோட் பங்குகள் 15.10 மடங்கு முதலீடு குவிந்துள்ளது.
நவம்பர் 24 ஆம் தேதி ஐபிஓ முடியும் வேளையில், அலாட்மென்ட் நவம்பர் 30 ஆம் தேதி நடக்கும், அலாட்மென்ட் கிடைக்காத முதலீட்டாளர்களுக்கான ரீபண்ட் டிசம்பர் 1 ஆம் தேதி துவங்கும், முதலீட்டாளர்களின் டிமேட் கணக்கில் வரவு வைக்கப்படும் பணிகள் நவம்பர் 4 ஆம் தேதி துவங்கும், பங்குச்சந்தையில் டிசம்பர் 5 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பட்டியலிடப்படும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications