இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியமான டாடா குழுமத்தின் ஆட்டோமொபைல் நிறுவனமான டாடா மோட்டாரஸ், தமிழ்நாட்டை ஜாகுவார் லேண்ட் ரோவர் (JLR) எலக்ட்ரிக் வாகனங்களுக்கான ஏற்றுமதி மையமாக மாற்றுவதற்கான திட்டம் வேகமாகச் செயல்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் ஆட்டோமொபைல் உற்பத்திக்கும், எலக்ட்ரிக் வாகன உற்பத்திக்கும் தலைநகரமாக விளங்கும் தமிழ்நாட்டுக்கு ஜாகுவார் லேண்ட் ரோவர் (JLR) எலக்ட்ரிக் வாகன தொழிற்சாலை திட்டம் மிகவும் முக்கியமானதாக உள்ளது.
செப்டம்பர் மாதத்திற்குள் 9000 கோடி ரூபாய் முதலீட்டில் அமையவுள்ள ஜாகுவார் லேண்ட் ரோவர் (JLR) எலக்ட்ரிக் வாகன தொழிற்சாலையின் அடிக்கல் நாட்டும் விழா நடைபெற உள்ளது. இந்தியாவில் முதல் முறையாக இந்த தொழிற்சாலையில் தான் முழுமையாக உற்பத்தி செய்யப்படும் பிரீமியம் வாகனமாக இருக்கும். மேலும் அடிக்கல் நாட்டும் விழா பின்னர் அடுத்த 12 முதல் 18 மாதங்களில் புதிய தொழிற்சாலை செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா குழுமத்திற்கு, தமிழ்நாடு அரசு இந்த புதிய தொழிற்சாலை அமைப்பதற்காக ஏற்கனவே ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பனப்பாக்கத்திற்கு அருகில் 400 ஏக்கர் நிலத்தைக் கொடுத்துள்ளது. சென்னை-பெங்களூரு தொழில்துறை வழித்தடத்தை இணைக்கும் இந்த திட்டம் ஓசூர் மற்றும் சென்னைக்கு இடையே ஒரு இணைப்பாக இருக்கும்.
சென்னையிலிருந்து சுமார் 90 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த இடத்தின் நன்மை என்னவென்றால், சென்னை மற்றும் எண்ணூர் துறைமுகங்களுக்கு அருகில் அமைந்துள்ளதுதான். இதன் மூலம் பனிப்பாக்கத் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் எலக்ட்ரிக் வாகனங்கள் உள்நாட்டில் விற்பதை தாண்டி வேகமாகவும், குறைந்த செலவிலும் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய முடியும்.
பனப்பாக்கத்தில் ஜாகுவார் லேண்ட் ரோவர் (JLR) எலக்ட்ரிக் வாகன தொழிற்சாலையின் அடிக்கல் நாட்டு விழா அடுத்த இரண்டு மாதங்களுக்குள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆட்டோமொபைல் துறையில் ஒரு தொழிற்சாலை செயல்படுத்துவதற்கு பொதுவாக 12-18 மாதங்கள் ஆகும். எனவே இந்த திட்டம் 2025 இன் பிற்பகுதி அல்லது 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் ஜாகுவார் லேண்ட் ரோவர் (JLR) எலக்ட்ரிக் வாகன தொழிற்சாலையின் அடிக்கல் நாட்டு விழாவில் டாடா சன்ஸ் தலைவர் என் சந்திரசேகரன் மற்றும் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் உடன் தொழிற்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா ஆகியோர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பனப்பாக்கத்தில் JLR தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் என்பதை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இன்னும் முடிவு செய்யவில்லை. ஆனால் கடந்த மாதம் வெளியான தகவல் படி JLR-ன் எலக்ட்ரிஃபைட் மாடியூலர் ஆர்கிடெக்சர் (EMA) அடிப்படையில் தயாரிக்கப்பட்ட JLR பிராண்ட் கார்களும், டாடா எலக்ட்ரிக் வாகனங்கள் உருவாக்கும் என்று தெரிகிறது.
சமீபத்தில், பிரெஞ்சு கார் தயாரிப்பு நிறுவனமான சிட்ரோன் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட எலக்ட்ரிக் வாகனங்களை சர்வதேச சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்து புதிய சாதனையை படைத்தது. இந்த வரிசையில் தற்போது டாடா மோட்டார்ஸ்-ம் இணைய உள்ளது, இதில் முக்கியமாக டாடா மோட்டார்ஸ் ஆடம்பர கார்களை தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை



Click it and Unblock the Notifications