நாட்டின் மிகப்பெரிய வாகன நிறுவனமான டாடா மோட்டார்ஸ் நிறுவனம், கடந்த ஆண்டினை காட்டிலும் 31% வளர்ச்சியும், கடந்த மாதத்தினை காட்டிலும் 16%மும் விற்பனையில் வளர்ச்சியினை கண்டுள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த அக்டோபர் 2021ல் 67,829 வாகனங்கள் உள்நாட்டிலும் மற்றும் சர்வதேச சந்தையிலும் விற்பனை செய்துள்ளது.
இதுவே கடந்த செப்டம்பர் 2021ல் 59,156 வாகனங்களாக விற்பனை செய்திருந்தது. இதே கடந்த அக்டோபர் 2021ல் 52,132 வாகனங்களாக விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
டாடா மோட்டார்ஸ் உள்நாட்டில் விற்பனை
இதே டாடா நிறுவனம் அக்டோபர் மாதத்தில் உள்நாட்டில் மட்டும், 31% விற்பனையை அதிகரித்து, 65,151 வாகனங்களாக அதிகரித்துள்ளது. இதே கடந்த அக்டோபர் 2020ல் 49,669 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. இதே பயணிகள் வாகன விற்பனையில் உள் நாட்டில் 33,925 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்த ஆண்டினை காட்டிலும் 44% அதிகமாகும். இது கடந்த ஆண்டில் 23,617 வாகனங்களாக இருந்தது.
வர்த்தக வாகனங்கள் விற்பனை
வர்த்தக வாகனங்களை பொறுத்தமட்டில் கடந்த ஆண்டினை காட்டிலும் மொத்தம் 18% அதிகரித்து, 33,674 வாகனங்களாக விற்பனையை அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 28,472 வாகனங்களாக இருந்தது.
இதற்கிடையில் ஆட்டோமொபைல் நிறுவனமான அக்டோபர் இறுதியில் 21 வகையான புதிய வாகனங்களை வெளியிட்டது. இந்த 21 வாகனங்கள் நடுத்தர மற்றும் கனரக வணிகம் மற்றும் இடை நிலை மற்றும் இலகு ரக வணிகம், சிறிய வணிகம் மற்றும் பேருந்து உள்ளிட்ட பல வாகனங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
பஜாஜ் ஆட்டோ விற்பனை
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் கடந்த ஆண்டினை காட்டிலும் விற்பனை 14% வீழ்ச்சியினை பதிவு செய்து, 4,39,615 வாகனங்களாக விற்பனை செய்துள்ளது. இது கடந்த ஆண்டில் 5,12,038 வாகனங்களாக விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக உள்நாட்டில் விற்பனை 22% குறைந்து 2,18,565 வாகனங்களாக குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டில் 2,81,160 வாகனங்களாக இருந்தது. இதே ஏற்றுமதி விகிதமானது 4% குறைந்து, 2,21,050 வாகனங்களாக குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டில் 2,30,878 வாகனங்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இரு சக்கர வாகன விற்பனை
குறிப்பாக இரு சக்கர வாகன விற்பனையானது கடந்த அக்டோபர் மாதத்தில் 26% குறைந்துள்ளது. கடந்த மாதத்தில் அக்டோபர் மாதத்தில் 1,98,738 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டில் 2,68,631 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதே ஏற்றுமதியில் 5% சரிவினைக் கண்டு, 1,92,565 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டில் 2,01,659 வாகனங்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications