டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தமிழ்நாட்டின் ராணிப்பேட்டை மாவட்டத்தில் அமைத்துள்ள புதிய கார் தயாரிப்பு தொழிற்சாலையில் இருந்து முதல் ஜாகுவார் லேண்ட் ரோவர் (JLR) காரை பிப்ரவரி மாத துவக்கத்தில் டெலிவரி செய்ய உள்ளது. சென்னையை தாண்டி தமிழ்நாட்டின் அடுத்த ஆட்டோமொபைல் ஹப் ஆக ராணிப்பேட்டை உருவெடுக்கும் வேளையில் டாடா மோட்டார்ஸ் குறுகிய காலத்தில் தனது தொழில்சாலை கட்டுமானத்தை முடித்து உற்பத்தி பணிகளை துவங்கியுள்ளது.
டாடா மோட்டார்ஸ் ராணிப்பேட்டையில் தொழிற்சாலை அமைப்பதற்காக 2024 செப்டம்பர் 28 அன்று அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில், வெறும் 16 மாதங்களில் உற்பத்திக்கு தயாராகியுள்ளது. இது இந்தியாவின் 'மேக் இன் இந்தியா ஃபார் தி வேர்ல்ட்' திட்டத்துக்கு மிகப்பெரிய வெற்றியாகக் கருதப்படுகிறது.

ஸ்ரீபெரும்புதூர், ஓசூர்-க்கு அத்தப்படியாக மாநிலத்தின் முக்கிய உற்பத்தி நகரமாக மாறும் அனைத்து விதமான கட்டமைப்புகளும் தன்னுள் கொண்டுள்ளது ராணிப்பேட்டை மாவட்டம். இந்தியாவில் பல வெளிநாட்டு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இருந்தாலும், அனைத்தும் உதிரிப்பாகங்களை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்து, இந்திய மண்ணில் அசம்பிள் செய்யப்படுபவை. ஜாகுவார் லேண்ட்ரோவர் முதல் BMW, பென்ஸ் வரையில் இதே பார்மெட்டில் தான் இயங்குகிறது.
இந்த நிலையில், பிரீமியம் கார்களை முதல் முறையாக இந்தியாவில் முழுமையாக உற்பத்தி செய்யும் முயற்சியை டாடா மோட்டார்ஸ் கையில் எடுத்துள்ளது. இதற்காக ராணிப்பேட்டையில் டாடா மோட்டார்ஸ்-ன் ஆடம்பர கார் பிரிவான ஜாகுவார் லேண்ட் ரோவர் (JLR) ஆலையை சுமார் 470 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டு தற்போது உற்பத்திக்கு தயாராகியுள்ளது. இந்த ஆலையில் டாடா மோட்டார்ஸ் மற்றும் ஜேஎல்ஆர் இரு பிராண்டுகளின் கார்களையும் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்ட இருந்தாலும், பிரதானமாக ஜேஎல்ஆர் பிராண்டுகாக செயல்படும்.
இந்த தொழிற்சாலையின் முதல் காராக காம்பாக்ட் எஸ்யூவி மாடலான ரேஞ்ச் ரோவர் எவோக் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவில் இதன் விலை ரூ.65 லட்சத்திலிருந்து தொடங்குகிறது (எக்ஸ்-ஷோரூம்). பிப்ரவரி 9 அன்று இந்த கார் உற்பத்தி தளத்தில் இருந்து விற்பனைகாக வெளியில் வரும் என இந்நிறுவன உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டாடா சன்ஸ் தலைவர் என்.சந்திரசேகரன் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் பிப்ரவரி 9ஆம் தேதியன்று முதல் கார் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராணிப்பேட்டையில் பானப்பாக்கம் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள இந்த ஆலை சுமார் ரூ.9,000 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது இந்த ஆலையில் பல்லாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது.
முதல் கட்டமாக இத்தொழிற்சாலையில் முழு காரையும் தயாரிக்காமல், CKD (கம்ப்ளீட்லி நாக்ட் டவுன்) முறையில் உற்பத்தி தொடங்கப்படும். அதாவது கார் உதிரிபாகங்களை வெளியில் இருந்து வாங்கி அதை இத்தொழிற்சாலையில் அசம்பிள் செய்யப்படும். இந்த தொழிற்சாலை முழு உற்பத்தி நிலைக்கு வர 7 ஆண்டுகள் ஆகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ஆலை பெட்ரோல், டீசல் மற்றும் எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்யும், மேலும் உள்நாட்டு சந்தைக்கு மட்டுமல்லாமல் ஏற்றுமதிக்கும் பயன்படுத்தப்படும்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பனப்பாக்கம் தொழிற்சாலை - சென்னை மற்றும் எண்ணூர் துறைமுகங்களுக்கு அருகில் அமைந்துள்ளது. இதனால் டாடா மோட்டார்ஸ் ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் ஏற்றுமதிக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கிறது.
டாடா மோட்டார்ஸ் தனது உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்ட போது, 2021 செப்டம்பரில் ஃபோர்டு இந்திய சந்தையை விட்டு வெளியேறிய நிலையில் அதன் இரு தொழிற்சாலையில் ஒன்றான சனந்த் ஆலையை வாங்கியது. அதன் பின் சென்னை ஆலையை வாங்க திட்டமிட்ட போது இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. இதன் பின்னர் ராணிப்பேட்டை ஆலை அமைக்க முடிவு செய்தது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications