வணிக வாகனம், பயணிகள் வாகனங்கள் மற்றும் மின்சார வாகனங்கள் என எல்லா வணிகங்களிலும் திறன் விரிவாக்கத்திற்கு நிதியளிப்பதற்காக, டாடா மோட்டார்ஸ் நடப்பு நிதியாண்டில் அதிகபட்ச இந்தியாவில் மட்டும் 6000 கோடி ரூபாயை முதலீடாக மேற்கொள்ள உள்ளது.
3 மாதத்தில் ரூ.1506 கோடி லாபம் பார்த்த டெக் மகேந்திரா.. முதலீட்டாளர்களுக்கும் சர்பிரைஸ் உண்டு?

ஜாகுவார் லேண்ட் ரோவர்
பிரீமியம் வாகன நிறுவனமான ஜாகுவார் லேண்ட் ரோவரில் 26,000 கோடி ரூபாய் முதலீட்டை செய்ய உள்ளது.
2021-2022 நிதியாண்டில் 23 ஆயிரம் கோடி ரூபாய் மூலதனத்தை டாடா மோட்டர்ஸில் செய்தது டாடா குழுமம். இப்போது 2022-2023 நிதியாண்டில் 32 ஆயிரம் கோடி ரூபாய் மூலதன செலவை செய்ய உள்ளது.

எலக்ட்ரிக் வாகனம்
ஜாகுவார் லேண்ட் ரோவர், டிரக்ம் பேருந்து, கார் என்ன எல்லாவற்றிலும் டாடா மோட்டார்ஸ் எலக்ட்ரிக் வானங்களை உற்பத்தி செய்ய உள்ளது. அதற்கு இந்த மூலதன செலவைச் செய்ய உள்ளது.

டிமேண்ட்
அடுத்து வர இருக்கு 9 மாதத்தில் 2.5 லட்சம் வாகனங்களை டெலிவரி செய்வதற்கான ஆர்டர்காளை டாடா மோட்டார்ஸ் பெற்றுள்ளது. இவற்றின் மதிப்பு மட்டும் 1.1 லட்சம் கோடி ரூபாய் என கூறப்படுகிறது.
ஜாகுவார் லேண்ட் ரோவர் இதுவரை இல்லாத அளவுக்கு 1.68 லட்சம் யூனிட்களை புக்கிங்கை பெற்றுள்ளது. அதேசமயம் பயணிகள் வாகன வணிகம் 75000 யூனிட்களில் இருந்து 1 லட்சமாக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்குப் பிறகு ஒரு வலுவான வர்த்தக நிலைக்குத் திரும்பும் மற்றும் விநியோகச் சங்கிலி சூழ்நிலை மேம்படும் என்ற நம்பிக்கையால் டாடா மோட்டாஸ் இவ்வளவு பெரிய முதலீட்டை செய்துள்ளது.

மாற்று எரிபொருள்
2025-ம் ஆண்டு ஜாகுவார் லேண்ட் ரோவர் முழுமையாக எலக்ட்ரிக்கிற்கு மாறும். 2024-ம் ஆண்டு ஜாகுவாரில் அரை டஜன் கார்கள் எலட்ரிக்காக இருக்கும். மேலும் பெட்ரோல், டீசலுக்க்கு மாற்றாக ஹைட்ரஜன் எரிபொருள் பயன்படுத்துவது குறித்து ஆராய்ந்து வருகிறது.

பேட்டரி
டாடா குழுமம் டாடா மோட்டார்ஸ் மற்றும் பிற எலக்ட்ரிக் வாகன உற்பத்திக்கு ஏற்றவாறு பேட்டரி உற்பத்தி நிறுவனங்களை இந்தியா மற்றும் வெளிநாடுகளில் அமைக்கும் திட்டத்தில் உள்ளது.

டாடா மோட்டர்ஸ் எலக்ட்ரிக் வாகனங்கள்
இப்போது டாடா மோட்டர்ஸ் விற்பனை செய்து வரும் நெக்ஸான் ஈவி பிளஸ் எலக்ட்ரிக் கார் முழு சார்ஜ் செய்தால் 400 கிலோ மீட்டர் வரை செல்லும். நெக்ஸான் ஈவி 320 கிலோ மீட்டர் வரை செல்லும். டாடா டைகோர் ஈவி 306 கிலோ மீட்டர் வரை செல்லும்.