மும்பை: நாட்டின் முன்னணி வாகன நிறுவனமான டாடா மோட்டார்ஸ், தனது வருங்கால வாடிக்கையாளர்களுக்காக, நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை கடன் வழங்குனரான எஸ்பிஐ உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இது எஸ்பிஐவுடன் இணைந்து வருங்கால வாடிக்கையாளர்களுக்கு, சிறிய மற்றும் இலகுவான வணிக வாகனங்களுக்கு மலிவான வட்டியில் கடன் வழங்குவதற்காக, ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை போட்டுள்ளது டாடா மோட்டார்ஸ் நிறுவனம்.
இது நாட்டின் மிகப்பெரிய வணிக வாகன நிறுவனமான டாடா மோட்டார்ஸ் தனது வாகன விற்பனையை ஊக்குவிக்கும் பொருட்டு இப்படியொரு அதிரடியான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

விற்பனை அதிகரிக்கும்
இந்த இரு பெரும் கூட்டாளிகளின் ஒப்பந்தத்தினால் கிராமப்புறங்களில் வாகன விற்பனையை அதிகரிக்க முடியும் என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கருதுகிறது. இந்த கூட்டணி மூலம் இந்த இரு தரப்பு வணிக நிறுவனங்களும், குறைவான நேரத்தில், வெளிப்படைத் தன்மை, இன்னும் பல சலுகைகளுடன் கடன் வழங்க இணைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

வர்த்தக வாகன விற்பனை சரிவு
கடந்த 2018க்கு பிறகு வர்த்தக வாகனங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இது அரசின் சில விதிகள் அந்த நேரத்தில் லாரிகளின் சுமக்கும் திறனை மாற்றியது. இதனையடுத்து பொருளாதார சரிவு, மந்த நிலை, ஜிஎஸ்டி, கொரோனா என பல காரணங்களினால் வீழ்ச்சி கண்டது. இதனால் வாகன விற்பனையானது மிக மோசமாக பாதித்தது. ஏன் கடந்த ஆண்டின் சில மாதங்களில் ஒரு வாகனங்கள் கூட விற்கப்படவில்லை.

கூட்டணி எதற்காக?
அதோடு கடந்த 2019ம் ஆண்டில் இருந்தே சிறு வணிக வாகனங்களை வாங்குபவர்களுக்கு, விதிமுறைகள் கடுமையாக்கத் தொடங்கியதால், மலிவு விலையில் வங்கிகளிடமிருந்து கடன் பெற முடியவில்லை. இதனால் பலரும் வணிக வாகனங்கள் வாங்குவதை தள்ளி வைத்தனர். இந்த நிலையில் தற்போது தான் படிப்படியாக தேவைகள் மீண்டு வர ஆம்பித்துள்ளன. ஆக வாடிக்கையாளார்கள் முன்னர் எதிர்கொண்ட பிரச்சனைகளை தற்போதும் எதிர்கொள்ள கூடாது என்பதற்காக, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த கூட்டணியை உருவாக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

எளிதில் கடன் கிடைக்கும்
ஆக எஸ்பிஐயின் உதவியுடன் கிராமப்புறங்களிலும், விற்பனையை வலுப்படுத்துவோம் என நம்புகிறோம். அதோடு எஸ்பிஐ-வுடன் இணைந்து தொடர்ந்து எங்களது சேவையை தொடர்வோம் என டாடா மோட்டார்ஸின் வர்த்தக வாகன பிரிவின் தலைவர் கிரிஷ் வாக் கூறியுள்ளார். மேலும் குறைந்த டவுன்பேமெண்ட், குறைந்த இஎம்ஐ விகிதம் என பல சலுகைகள் வழங்கப்படும். ஆக வாடிக்கையாளர்கள் இனி எளிதாக கடன் பெற முடியும். வாகனங்கள் வாங்குவதும் எளிது என அறிவித்துள்ளன.