இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனமான டாடா மோட்டார்ஸ், (Tata Motors) இப்போது இத்தாலியைச் சேர்ந்த புகழ்பெற்ற லாரி தயாரிப்பு நிறுவனமான Iveco-வைக் வாங்கும் பிளான் ஒன்றின் இறுதிக்கட்டத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு சுமார் 4.5 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். இந்த ஒப்பந்தம் மட்டும் முடிந்தால், இது Tata குழுமத்தின் வரலாற்றிலேயே இரண்டாவது பெரிய ஒப்பந்தம் ஆக இருக்கும்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் Iveco நிறுவனத்தை வாங்கும் திட்டம், இதுவரை டாடா செய்த அதிக மதிப்புள்ள வாங்கும் நடவடிக்கையாக இது அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு டாடா மோட்டாஸ் கடந்த 2008ஆம் ஆண்டு ஜாகுவார் லேண்ட் ரோவர் 2.3 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கியிருந்தது. தற்போதைய Iveco ஒப்பந்தம் அதன் மதிப்பை விட இரட்டிப்பு அளவுக்கு பெரியதாகும்.

இந்த ஒப்பந்தம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இதற்காக டாடா மோட்டார்ஸ் மற்றும் Iveco நிறுவனங்களின் போர்டு மீட்டிங் நடைபெறவுள்ளது. டாடா மோட்டார்ஸ், இவேகோவில் 27.1% பங்குகளை வாங்க திட்டமிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மீதமுள்ள பங்குகளுக்கான பொதுச் சந்தை ஒப்பந்தம் (Tender Offer) அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021-ஆம் ஆண்டு, சீனாவின் FAW குழுமம் இவேகோவை வாங்க முயன்றபோது, இத்தாலி அரசு அந்த ஒப்பந்தத்தைத் தடை செய்தது. ஏனென்றால், இவேகோவின் பாதுகாப்புத் துறை, தேசிய பாதுகாப்பை பாதிக்கக்கூடியதாக இருப்பதாக அரசுக்கு அச்சம் எழுந்தது. அதனால் இப்போது, இவேகோ தனது பாதுகாப்பு பிரிவை தனியாக பிரித்து வைக்கிறது. இதனால், டாடா மோட்டார்ஸ் ஒப்பந்தம் செய்யும் போது, அரசாங்க ஒழுங்குமுறை தடைகள் குறைவாக இருக்க வாய்ப்புள்ளது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
நேற்று, இவேகோவின் பங்குகள் 7.4% வரை உயர்ந்தன. இது, டாடா மோட்டார்ஸ் இந்நிறுவனத்தில் பங்கு வாங்கும் பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறப்பட்ட நிலையில் இந்த மாற்றம் நிகழ்ந்தது. 2025இல் மட்டும் இவேகோவின் பங்குகள் இரட்டிப்பு வளர்ச்சி பெற்றுள்ளன. இதனால், இவேகோவின் மொத்த மதிப்பு அமெரிக்க டாலரில் 6.15 பில்லியன் (ரூ.51,000 கோடி) ஆக உயர்ந்துள்ளது. தற்போது இவேகோவின் வருமானத்தில் 74% ஐரோப்பாவில் இருந்து தான் வருகிறது.
இவேகோ ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டால், அது டாடா மோட்டார்ஸ்-க்கு வணிக வாகனத் துறையில் உலகளாவிய மாற்றத்தை ஏற்படுத்தும். ஒரே நேரத்தில், இவேகோவின் மதிப்பு, திறன் மற்றும் சந்தையில் மாற்றங்களை டாடா பெருமளவில் பயன்படுத்தக்கூடிய வாய்ப்பு உள்ளது.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications