டாடா மோட்டார்ஸ் பங்குகள் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் தடாலடியாக உயர்ந்தது. டாடா குழுமத்தில் பல வருடங்களுக்கு பின்பு எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை வெற்றியை தொடர்ந்து நிதிநிலையில் வலிமையான நிலையை அடைந்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் பங்குகள் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் சுமார் 3 சதவீதத்திற்கு மேல் உயர்ந்தது மூலம் இந்நிறுவனங்கள் பங்குகள் 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்தது முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது.

செவ்வாய்க்கிழமை வர்த்தக முடிவில், டாடா மோட்டார்ஸ் பங்குகள் 3 சதவீதம் உயர்ந்து ஒரு பங்கு ரூ.583.05 ஆக இருந்தது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வலிமையான மார்ச் காலாண்டு முடிவுகள் மற்றும் மேம்பட்ட எதிர்கால கணிப்புகள் ஆகியவை இந்நிறுவனத்தின் பங்குகளை 2023 ஆம் ஆண்டில் மட்டும் கிட்டத்தட்ட 48 சதவீதம் உயர்ந்தி முதலீட்டாளர்களுக்கு பெரிய லாபத்தை கொடுத்துள்ளது.
இன்றைய தடாலடி வளர்ச்சி மூலம் டாடா மோட்டார்ஸ் பங்குகள் புதிய 52 வார உச்ச அளவான 584 ரூபாய் அளவீட்டை பதிவு செய்துள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பயணிகள் வாகனங்கள், வர்த்தக வாகனங்கள் மட்டும் அல்லாமல் அதன் கட்டுப்பாட்டில் இருக்கும் ஜாகுவார் லேண்ட் ரோவர் (ஜேஎல்ஆர்) உட்பட அனைத்து வலிமையான வளர்ச்சி பாதையில் உள்ளது.
இந்த தடாலடி வளர்ச்சிக்கு முக்கியமான காரணம் தரகு நிறுவனமான Jefferies டாடா மோட்டார்ஸ் பங்குகள் மீதான டார்கெட் விலையை 665 ரூபாயில் இருந்து 700 ரூபாயாக உயர்த்தியுள்ளது. இது மட்டும் அல்லாமல் அதிகப்படியாக 790 ரூபாய் வரையில் உயர வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இதேவேளையில் இந்தியாவின் ICICI Securities டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பயணிகள் வாகனங்கள், வர்த்தக வாகனங்கள், ஜாகுவார் லேண்ட் ரோவர் விற்பனை வளர்ச்சியை அடிப்படையாக கொண்டு தனது ரேட்டிங்-ஐ buy என வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications