இந்தியாவில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் முன்னணி வர்த்தக சாம்ராஜ்ஜியங்களில் ஒன்றாக இருக்கும் டாடா குழுமத்தின் ஆட்டோமொபைல் நிறுவனமான டாடா மோட்டார்ஸ் வாரத்தின் முதல் நாள் வர்த்தகத்தில் மட்டும் சுமார் 8 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த திடீர் உயர்வுக்கு முக்கிய காரணம் அமெரிக்காவின் முன்னணி முதலீட்டு சேவை வங்கியான கோல்ட்மேன் சாக்ஸ் வெளியிட்ட ஒரு அறிவிப்பு தான்.
டாடா மோட்டார்ஸ் முதலீட்டாளர்கள் இன்று காலை முதல் மகிழ்ச்சியில் உச்சத்தில் உள்ளனர் என்றால் மிகையில்லை, ஒரே நாளில் 8 சதவீதம் லாபம் என்றால் கேட்கவா வேண்டும், இந்த தடாலடி உயர்வுக்கும், கோல்ட்மேன் சாக்ஸ் அறிவி்ப்புக்கும் தொடர்பு உள்ளதா என்றால் கட்டாயம் உள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 2023 ஆம் ஆண்டில் மார்ச் 31 உடன் முடிந்த காலாண்டில் சுமார் 3,63,361 கார்களை விற்பனை செய்துள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சொந்த தயாரிப்புகள் மட்டும் அல்லாமல் டாடா மோட்டார்ஸ் கட்டுப்பாட்டில் இருக்கும் ஜாகுவார் லேண்டு ரோவர் விற்பனையும் சேர்ந்து மார்ச் காலாண்டில் கடந்த ஆண்டை காட்டிலும் சுமார் 8 சதவீத விற்பனை வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
இக்காலாண்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வர்த்தக வாகன பிரிவு, பயணிகள் வாகன பிரிவு, ஜாக்குவார் லேண்டு ரோவர் ஆகிய 3 முக்கிய பிரிவுகளும் மார்ச் காலாண்டு முடிவில் சரிவில் இருந்து மீண்டு வரும் பாதையை அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தான் கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் டாடா மோர்ட்டார்ஸ் பங்குகளின் டார்கெட் விலையை முந்தைய அளவான 480 ரூபாயில் இருந்து 550 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதை தொடர்ந்து NOMURA INDIA 508 ரூபாயும், CLSA 544 ரூபாயும், ஜேபி மோர்கன் 438 ரூபாயும், BOFA SECURITIES 475 ரூபாய் விலையை டார்கெட் விலையாக அறிவித்துள்ளது.
இதன் எதிரொலியாக திங்கட்கிழமை காலை வர்த்தகத்தில் கிட்டதட்ட 8 சதவீதம் உயர்ந்து 473.30 ரூபாய் வரையில் உயர்ந்து முதலீட்டாளர்களை மனம் குளிரவைத்தது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் 52 வார உயர்வு விலை 494.40 ரூபாய். திங்கட்கிழமை வர்த்தக முடிவில் டாடா மோட்டார்ஸ் பங்குகள் விலை 5.31 சதவீதம் உயர்ந்து 460.90 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!



Click it and Unblock the Notifications