இந்தியாவின் கார் தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ் தனது குறிப்பிட்ட சில மாடல் கார்களுக்கு சிறப்பு ஆஃபர்களை வழங்கியுள்ளது. அதன்படி, 'ஃபெஸ்டிவல் ஆஃப் கார்களை' 2.05 லட்சம் வரை விலைக் குறைப்புடன் Tiago, Altroz, Nexon, Harrier மற்றும் Safari போன்ற பிரபலமான மாடல்களில் அறிமுகப்படுத்தியுள்ளது. சலுகைகள் அக்டோபர் 31, 2024 வரை கிடைக்கும். மேலும் பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி வாகனங்களுக்கான கவர்ச்சிகரமான எக்ஸ்சேஞ்ச் மற்றும் பெனிஃபிட்டுகளும் உள்ளன.
டாடா மோட்டார்ஸ் கார்களின் திருவிழா என்ற பிரச்சாரத்தை அறிவித்து, இந்த பண்டிகைக் காலத்திற்கான அற்புதமான சலுகைகளை வழங்குகிறது. அதன் பிரபலமான கார்கள் மற்றும் எஸ்யூவிகளின் விலையை ரூ.2.05 லட்சம் வரை குறைத்துள்ளது. டாடா மோட்டார்ஸின் வெளியிட்ட அறிக்கையின்படி, இந்த சிறப்பு பண்டிகை சலுகைகள் அனைத்து பெட்ரோல், டீசல் மற்றும் CNG மாடல்களிலும் அக்டோபர் 31, 2024 அன்று முடிவடைகின்றன.

சலுகைகளை அறிவித்துள்ள டாடா பயணிகள் எலக்ட்ரிக் மொபிலிட்டியின் தலைமை வணிக அதிகாரி விவேக் ஸ்ரீவத்சா, வாடிக்கையாளர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வார்கள் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார். பண்டிகைக் காலம் தொடங்கும் நிலையில், எங்கள் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு பலவிதமான கவர்ச்சிகரமான சலுகைகளை வழங்குவதில் மகிழ்ச்சியடைவதாகவும், ICE வாகனங்களில் ரூ. 2.05 லட்சம் வரையிலான மொத்தப் பலன்களுடன், இந்த ஆண்டு பண்டிகைக் கொண்டாட்டத்தில் கணிசமான விலைக் குறைப்புகளும் எக்ஸ்சேஞ்ச் மற்றும் பெனிஃபிட்கள் இருக்கும் என்று கூறியுள்ளார். அதன்படி பிரபல மாடல்களான டியாகோ: ரூ 4.99 லட்சத்திற்கும், ஆல்ட்ராஸ்: ரூ 6.49 லட்சத்திற்கும் கிடைக்கும். அதேபோல், நெக்ஸான்: ரூ 7.99 லட்சத்திலும்,ஹாரியர்: ரூ 14.99 லட்சத்திலும் மற்றும்
சஃபாரி: ரூ 15.49 லட்சத்திலும் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. கூடுதலாக, டீலர்ஷிப்களில் கிடைக்கும் ரூ.45,000 வரையிலான எக்ஸ்சேஞ்ச் சலுகைகளிலிருந்து வாடிக்கையாளர்கள் பயனடையலாம் என்று டாடா மோட்டார்ஸ் அறிவித்துள்ளது.
டீலர்ஷிப்களில் கணிசமான சரக்குகள் குவிந்துள்ள நிலையில் இந்த விலைக் குறைப்பு வந்துள்ளது. ஏப்ரலில் தொடங்கிய நடப்பு நிதியாண்டில் மூன்றாவது சரிவைக் குறிக்கும் வகையில் ஆகஸ்ட் மாதத்தில் டீலர்களின் கார்களின் விற்பனை 4.5% குறைந்துள்ளது. இந்தியாவின் முதல் மூன்று கார் தயாரிப்பு நிறுவனங்களான மாருதி சுசுகி, ஹூண்டாய் மற்றும் டாடா மோட்டார்ஸ் - வாடிக்கையாளர்களுக்கான டீலர் விற்பனை முறையே 8.5%, 12.9% மற்றும் 2.7% குறைந்துள்ளது.
ஆகஸ்டில், உலகின் மூன்றாவது பெரிய வாகனச் சந்தையில் விற்கப்படாத கார் இருப்பு 70-75 நாட்களில் சாதனையாக உயர்ந்துள்ளது. இதன் மதிப்பு 778 பில்லியன் ரூபாய்கள் ($9.27 பில்லியன்) ஆகும்.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தனலட்சுமி DL-47 லாட்டரி முடிவுகள் வெளியீடு: யாருக்கெல்லாம் ஜாக்பாட் கிடைத்தது?

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!



Click it and Unblock the Notifications