சர்வதேச அளவில் எரிபொருள் விலையானது உச்சம் தொட்டு வரும் நிலையில், இதற்கு ஏதேனும் மாற்றம் வந்து விடாதா? என்ற பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. இதனாலேயே உலக அளவில் மின்சார வாகன சந்தையானது மேம்படத் தொடங்கியுள்ளது. குறிப்பாக இந்தியாவின் வாகன சந்தையில் முன்பை விட தற்போது மின்சார வாகனங்கள் மீதான ஆர்வம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
எல்ஐசி ஐபிஓ மே 4 தொடக்கம்.. கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் என்ன..!
இந்த வாய்ப்பினை நழுவ விடக்கூடாது என்ற நிலையில், இந்திய வாகன நிறுவனங்கள் பலவும் ஏற்கனவே மின்சார வாகன உற்பத்தியில் இறங்கத் தொடங்கி விட்டன.

அடுத்த தலைமுறை வாகனம்
பல நிறுவனங்களும் ஏற்கனவே உற்பத்தி செய்து வரும் நிலையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதன் புதிய மின்சார காரினை இன்று அறிமுகம் செய்துள்ளது.
இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ள டாடா அவின்யா, அடுத்த தலைமுறை மின்சார வாகங்களை நோக்கிய முன்னேற்றமாகும். இந்த வாகனம் ஜென் 3 கட்டமைப்பினை கொண்டது என பெருமைபட தெரிவித்துள்ளது.

சந்திரசேகரன் என்ன கூறுகிறார்?
சமஸ்கிருத மொழியில் இருந்து உருவானது அவின்யா என்ற பெயர். இது புதுமை என்று பொருள் ஆகும். பெயருக்கு ஏற்ப பல புதுமைகளுடன் இந்த வாகனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
டாடா குழுமத்தின் தலைவர் என் சந்திரசேகரன், டாடா மோட்டார்ஸ் மின்சார வாகனங்களை மூன்று கட்டமைப்புடன் கொண்டு வரும். உலகளாவிய ரீதியில் எங்களது வாகனங்கள் சிறந்ததாக இருக்க வேண்டும். டாடா மோட்டார்ஸ் மற்றும் ஜாகுவார் லேண்ட் ரோவர் மின்சார இயக்கத்திற்கு தயாராக உறுதி பூண்டுள்ளன.குறிப்பாக எதிர்கால தேவைகளுக்கு ஏற்ப டெக்னாலஜியினை உட்புகுத்தவும் திட்டமிட்டுள்ளது.

கண்ணை கவரும் வாகனம்
மொத்தத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ள இந்த வாகனம் சர்வதேச சந்தைக்கு ஏற்ப வடிவமைத்துள்ளது டாடா மோட்டார்ஸ். இது இந்தியா மட்டும் அல்ல, உலக சந்தைகளையும் கவரும் எனலாம். தற்போதைய காலகட்டத்தில் கார் பிரியர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பல தொழில் நுட்பம், இடவசதி, மொத்தத்தில் பற்பல அம்சங்களுடன் கண்னை கவரும் ஒரு வாகனமாக டாடா அவின்யா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இலக்கு
இந்தியாவின் 2030 மிஷனின் படி, 2030-க்குள் 30% மின்மயமாக்கல் என்ற தொலை நோக்கு பார்வையை நோக்கி செல்ல டாடா திட்டமிட்டுள்ளது. எனினும் எங்களின் லட்சியம் அதனையும் தாண்டியது. ஆக அதனை நோக்கில் எங்களின் பயணம் உள்ளது எனவும் டாடா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்றைய பங்கு நிலவரம்?
டாடாவின் இந்த அறிமுகத்தின் மத்தியில் இபப்ங்கின் விலையானது என்.எஸ்.இ-யில் 2.65% அதிகரித்து, 447.60 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இன்றைய உச்ச விலை இது வரையில் 447.75 ரூபாயாகும். குறைந்தபட்ச விலை 437.85 ரூபாயாகும். இதன் 52 வார உச்ச விலை 536.70 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 268.45 ரூபாயாகும்.
இதே பி.எஸ்.இ-யில் இப்பங்கின் விலையானது 2.46% அதிகரித்து, 446.90 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இன்றைய உச்ச விலை இதுவரையில் 447.60 ரூபாயாகும். குறைந்தபட்ச விலை 437.80 ரூபாயாகும். இதன் 52 வார உச்ச விலை 536.50 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 268.50 ரூபாயாகும்.