யானைக்கும் அடி சறுக்கும் என்பது எதார்த்தம். இப்போது அப்படித்தான் ஜாகுவாருக்கும் அடி சறுக்கியிருக்கிறது.
டாடா மோட்டார்ஸின் துணை நிறுவனமான ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம், தனது லண்டனில் உள்ள ஹேல்வுட் தொழில்சாலையில் ( Halewood factory) உள்ள தொழிலாளர்களில் 10% பேரை குறைக்கலாம் என்றும் கூறியுள்ளது.
இந்த நிறுவனம் செயல்திறனை மேம்படுத்த இத்தகைய நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
விற்பனையிலும் வீழ்ச்சி
இந்த ஆலையில் ரேஞ்ச் ரோவர் அவோக் கார்கள் மற்றும் லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் வாகனங்களை உற்பத்தி செய்து வருகிறது. சீனா வாகன சந்தையால் பலவீனமடைந்தும், ஐரோப்பாவில் டீசல் வாகனங்களுக்கான தேவை வீழ்ச்சியாலும் பாதிக்கப்பட்டுள்ள ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் கடந்த 2019ல் விற்பனையில் 6% வீழ்ச்சி கண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
அதிகரித்து வரும் விற்பனை
எனினும் சமீபத்திய மாதங்களில் மீள்ச்சி கண்டு வரும் சீனாவின் வாகன சந்தையானது, மீண்டும் ஏற்றத்துக்கு வழி வகுக்கும் என்றும் கூறப்படுகிறது. சொல்லப்போனால் டிசம்பரில் ஒட்டுமொத்த நிறுவனங்களின் வாகன விற்பனையானது 1.3% அதிகரித்துள்ளது. இது சந்தை மீண்டு வருவதையே காட்டுகிறது.
சீரமைப்பு நடவடிக்கை
ஜாகுவார் லேண்ட் ரோவர் தனது செயல்திறனை மேம்படுத்தவும், நிலையான வளர்ச்சியை செயல்படுத்தவும் மற்றும் எங்கள் வணிகத்தின் நீண்ட கால வெற்றியையும் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் இந்த நிறுவனம் ஒரு அறிக்கையில் கொடுத்துள்ளது. இதற்காக ஹேல்வுட் உற்பத்தி மூன்று ஷிப்டிலிருந்து, ஏப்ரல் 2020 முதல் இரண்டு பிளஸ் ஷிப்ட் முறைக்கு நகர்கிறோம் என்றும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
வேலைகள் பாதிப்பு
பிரிட்டனில் உள்ள மூன்று ஜாகுவார் லேண்ட் ரோவர் தொழில் சாலைகளில் ஒன்றான ஹேல்வுட் தொழில் சாலையில் சுமார் 45,000 பேர் பணி புரிகின்றனர். இந்த நிலையில் ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் கடந்த புதன் கிழமையன்று கொடுத்த அறிவிப்பால் 500 வேலைகள் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் கூறப்படுகிறது.
கடுமையான சவால்
வழக்கமாக இயங்கும் சில மாடல்களுக்கான தேவை வீழ்ச்சியைக் கையாளும் அதே நேரம், விதிமுறைகள் கடுமையாக்கப்படுவதால் ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனமும் கடுமையான சவால்களை எதிர்கொண்டு வருகிறது. இந்த நிலையிலேயே இந்த நிறுவனம் இப்படி ஒரு நடவடிக்கை எடுத்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications