டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் பழைய ஃப்ரீலேண்ட்ர் (Freelander) மாடலை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளது டாடா நிர்வாகம். இந்த முறை ஃப்ரீலேண்ட்ர் காரை பெட்ரோல் - டீசல் காராக இல்லாமல் எலக்ட்ரிக் வாகனமாக இருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஜாக்வார் லேண்ட் ரோவர் நிறுவனம் சீன சந்தையை குறி வைத்து செர்ரி(chery) ஆட்டோமொபைல் நிறுவனத்துடன் கூட்டணியில் செய்து ஃப்ரீலேண்டரை எலக்ட்ரிக் வாகனமாக மீண்டும் அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது.

எலக்ட்ரிக் வாகனமாக ஃப்ரீலேண்டரை அறிமுகப்படுத்துவதன் மூலம் டாடா மோட்டார்ஸ் எலக்ட்ரிக் வாகன துறையில் தங்களுடைய நிறுவன வளர்ச்சியையும் லாபத்தையும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனம் செர்ரி ஆட்டோமொபைல் நிறுவனத்துடன் இணைந்து ஒரு கூட்டு நிறுவனத்தை உண்டாக்கியுள்ளது.
இவர்கள் இருவரும் இணைந்து ஃப்ரீலேண்டர் என்ற பிராண்டின் பெயரிலேயே அடுத்தடுத்த எலக்ட்ரிக் வாகனங்களையும் தயாரிக்க உள்ளனர். இந்தக் கூட்ட நிறுவனம் சிஜேஎல்ஆர் (CJLR) என என்ற பெயரில் செயல்பட உள்ளது.
செர்ரி ஆட்டோமொபைல் நிறுவனத்தின் உற்பத்தி வசதிகள் மற்றும் தொழில்நுட்பங்களைக் கொண்டு இந்த கார்கள் தயாரிக்கப்பட உள்ளன. ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனத்தை பொறுத்தவரை சர்வதேச அளவில் வாகன சந்தையில் முக்கிய இடத்தை பிடிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதற்காகவே செர்ரி ஆட்டோமொபைல் நிறுவனத்துடன் இணைந்து கூட்டு நிறுவனத்தை உருவாக்கியுள்ளது.
சீனாவில் உள்நாட்டு நிறுவனங்களான பிஒய்டி (BYD) மற்றும் கிரேட் வால் மோட்டார் (Great wall motor) நிறுவனங்கள் முன்னணி எலக்ட்ரிக் வாகன விற்பனை நிறுவனங்களாக உள்ளன. இதனிடையே டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சீனாவின் சென்சூவில் உள்ள ஆலையில் இந்த புதிய ஃப்ரீலேண்ட்ர் மாடல்களை தயாரித்து முதல் கட்டமாக விற்பனை செய்ய உள்ளது. முதலில் சீன சந்தை தான் இலக்கு, பின்னர் அங்கிருந்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடிவு செய்துள்ளது.
ஃப்ரீலேண்டர் மாடலை டாடா மோட்டர்ஸ் 1997இல் அறிமுகம் செய்தது. 2015 ஆம் ஆண்டு வரை இது பயன்பாட்டில் இருந்த நிலையில் ஃப்ரீலேண்டர் மாடலை நிறுத்துவதாக அறிவித்தது. அதற்கு பதிலாக டிஸ்கவரி ஸ்போர்ட் என்பதை 2016 ஆம் ஆண்டிலிருந்து அறிமுகம் செய்தது.
ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் 2024ஆம் நிதி ஆண்டின் நான்காவது காலாண்டில் விற்பனை விகிதத்தில் 81% வளர்ச்சியடைந்துள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளில் இதனை இரண்டு மடங்கு அதிகரிக்க வேண்டுமென டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை பொறுத்தவரை 2024 ஆம் நிதி ஆண்டின் நான்காவது காலாண்டில் மூன்று மடங்கு அதிக லாபத்தை பெற்ற நிறுவனமாக இருக்கிறது. அதாவது முந்தைய ஆண்டின் இதே கால கட்டத்தில் 5,496 கோடி ரூபாய் லாபம் பெற்றிருந்த நிலையில் இந்த ஆண்டில் அது 17,528 கோடி ரூபாயாக உயர்ந்தது.
Story written by: Devika
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!



Click it and Unblock the Notifications