இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகச் சாம்ராஜ்ஜியமாக விளங்கும் டாடா குழுமம் என்.சந்திரசேகரன் தலைமையில் தொடர்ந்து பல துறையில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வரும் வேளையில், தற்போது புதிதாக ஆன்லைன் மூலம் உணவு டெலிவரி செய்யும் வர்த்தகத் துறையில் இறங்க முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் தற்போது இரு நிறுவனங்கள் மட்டுமே ஆதிக்கம் கொண்ட பல துறைகள் உள்ளது, இதனால் போட்டித்தன்மை குறைந்து மக்களிடம் அதிகப்படியான தொகையை வசூலிக்கக் கூடிய நிலை உருவாகியுள்ளது.

உதாரணமாக உணவு டெலிவரி துறையில் ஸ்விக்கி, சோமேட்டோ. யூபிஐ பேமெண்ட் துறையில் போன்பே, கூகுள் பே. ஆன்லைன் டாக்சி துறையில் ஓலா, உபர். இப்படிப் பல பொருட்கள், பல துறையில் போட்டித்தன்மை இல்லாமல் இரு பெரு நிறுவனங்கள் ஆதிக்கம் செய்யும் சூழலில் உள்ளது.
இதை ஒடுக்கும் முயற்சியில் புதிய நிறுவனங்கள் வந்தாலும் போதுமான நிதி ஆதாரம், கட்டமைப்பு இல்லாத காரணத்தால் வேகமாகத் தோல்வி அடைந்து வருகிறது. மக்களும் இந்த நிறுவனங்களை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்த நிலையில் டாடா குழுமம் களத்தில் குதித்துள்ளது.
டாடா குழுமத்தின் சூப்பர் ஆப் தளமான டாடா நியூ மத்திய அரசின் ONDC தளத்தின் உதவியுடன் ஆன்லைன் முறையில் உணவு டெலிவரி சேவையை அளிக்கத் திட்டமிட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது. இத்துறைக்குள் டாடா குழுமம் வருவது ஸ்விக்கி, சோமேட்டோ ஆகிய நிறுவனங்களுக்குப் பெரிய தலைவலியாக மாறியுள்ளது.
டாடா நியூ தளம் அடுத்த சில நாட்களில் ONDC தளத்தில் தனது புதிய உணவு டெலிவரி சேவையை லான்ச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் இது குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் சோதனை முறையில் வழங்கப்பட உள்ளது, இதைத் தொடர்ந்து அடுத்த சில நாட்களிலோ அல்லது வாரத்திலேயோ மக்களின் பயன்பாட்டுக்கு வர உள்ளது.
இந்த உணவு டெலிவரி சேவை மூலம் மக்களைத் தொடர்ந்து டாடா நியூ ஆப்-குள் தொடர்ந்து அழைத்து வர முடியும், இதனால் பிற சேவைகளுக்கும் வர்த்தகம், வருவாய் பெற முடியும் என்பது டாடா குழுமத்தின் திட்டம்.
டாடா குழுமத்திற்கு இந்த உணவு டெலிவரி சேவையில் கிடைக்கும் வெற்றி மூலம் அதன் ஆடை, நகைகள், மளிகை பொருட்கள், மளிகை பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ், விமானம் போன்ற இதர பல சேவைகளைப் பயன்படுத்த முடியும்.
Tata Neu ஆப்பில் உணவு பிரிவில் இந்தச் சேவையைப் பெற முடியும். ஆனால் அதைக் கிளிக் செய்தால், தாஜ் பிராண்டை இயக்கும் டாடா குழுமத்தின் ஹோட்டல் உணவகங்களின் மெனுக்கள் மட்டுமே தற்போது வாடிக்கையாளர்கள் விருப்ப தேர்வாக உள்ளது. ONDC ஒருங்கிணைப்புடன், ஏற்கனவே நெட்வொர்க்கில் உள்ள நகரங்கள் மற்றும் அதன் பல்லாயிரக்கணக்கான உணவகங்களுக்கான அணுகலை டாடா நியூ ஆப்ஸ் பெறும்.
தற்போது, Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி சந்தையில் சுமார் 95 சதவீதத்திற்கும் அதிகமான பங்கைக் கொண்டுள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications