இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியமான டாடா குழுமம் மிகுந்த நம்பிக்கையுடன் உருவாக்கப்பட்ட ஒரு டிஜிட்டல் வர்த்தகம் தளம் தான் டாடா நியூ. இந்த நிறுவனம் அனைத்து டாடா பிராண்டுகளையும் இணையம் வாயிலாக மக்களுடன் இணைக்கும் ஒரு சூப்பர் ஆப் ஆக உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக டாடா சன்ஸ் தலைவர் என்.சந்திரசேகரன் பெரும் தொகையை முதலீடு செய்து இத்தளத்தை விரிவாக்கம் செய்தது மட்டும் அல்லாமல் பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்பட்டது.
ஆனாலும் போதுமான வரவேற்பு மக்கள் மத்தியில் கிடைக்கவில்லை, இதற்கு மத்தியில் தலைமை பொறுப்பில் இருந்தவர்கள் தொடர்ந்து மாறி வந்ததும் பெரும் பிரச்சனையாக இருந்தது, இந்த நிலையில் டாடா நியூ தளத்தை எப்படியாவது மேம்படுத்த வேண்டும் என திட்டமிட்டு புது சிஇஓ தலைமையில் கடுமையான முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த முடிவுகள் டாடா குழும ஊழியர்களுக்கு பீதியை உருவாக்கியுள்ளது.

டாடா குழுமத்தின் டிஜிட்டல் பிரிவான டாடா டிஜிட்டல் நிறுவனத்தில் செப்டம்பர் மாதம் புதிய சிஇஓ ஆக பொறுப்பேற்ற சஜித் சிவானந்தன் இந்நிறுவனத்தின் வர்த்தக கொள்கையில் முக்கியமான மாற்றத்தை கொண்டு வந்ததுள்ளார். ஜியோ மொபைல் டிஜிட்டல் சேவைகளின் முன்னாள் தலைவரான சஜித் சிவானந்தன், 2019இல் தொடங்கப்பட்ட டாடா டிஜிட்டலின் மூன்றாவது தலைமை நிர்வாக அதிகாரி ஆவார்.
சஜித் சிவானந்தன் டாடா நியூ சூப்பர் ஆப் வளர்ச்சியை விரைவாக்குவதற்காக இதுவரையில் மொத்த விற்பனை மதிப்பு (GMV) என்ற இலக்கை கொண்டு செயல்பட்டு வந்த டாடா டிஜிட்டல், இப்போது அதிலிருந்து முழுவதுமாக விலகி டாடா குழுமத்தின் அனைத்து நிறுவனங்களையும் ஒருங்கிணைக்கும் நோக்குடன் இறங்கியுள்ளது.
மேலும், இந்த மாற்றத்தின் மூலம் டாடா டிஜிட்டல் பிரிவும், டாடா நியூ பிரிவும் இனி டாடா குழுமத்தின் உள் டிஜிட்டல் இயந்திரமாகவும், வாடிக்கையாளர் ஈர்ப்பு முனையாகவும் செயல்படும் என்று இந்நிறுவன உயர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த மாற்றம் டாடா நியூவின் வளர்ச்சி வேகத்தை குறைக்காமல், குழுமத்தின் ஒட்டுமொத்த டிஜிட்டல் திறனை பலப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய உத்தியை செயல்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக, டாடா நியூ சூப்பர் ஆப்பில் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை 50 சதவீதத்துக்கும் மேல் குறைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது இப்பிரிவு ஊழியர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
டிஜிட்டல் பிரிவில் செலவுகளை கட்டுப்படுத்தி செயல்பாடுகளை திறம்பட நடத்துவதே இந்த பணிநீக்கத்தின் நோக்கம் என எக்னாமிக் டைம்ஸ் செய்தியில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் டாடா நியூ இனி, தனியொரு சூப்பர் ஆப்பாக மட்டும் செயல்படாமல், டாடா குழுமத்தின் அனைத்து நிறுவனங்களுக்கும் பொதுவான டிஜிட்டல் தளமாக மாற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாற்றத்தின் மூலம் டாடா குழுமத்தின் பல்வேறு நிறுவனங்களான டைட்டன், இந்தியன் ஹோட்டல்ஸ் கம்பெனி லிமிடெட் (ஐஎச்சிஎல்), டாடா மோட்டார்ஸ், டாடா கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் ஆகியவற்றின் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பணிகளை இப்போது ஒரே இடத்தில் கொண்டு வரப்படுகின்றன.
இதன் மூலம் டாடா டிஜிட்டல் குழுமத்தின் உள் டிஜிட்டல் நிறுவனமாக மாறி, அனைத்து பிராண்டுகளுக்கும் ஒரே மாதிரியான டிஜிட்டல் சேவைகளை வழங்கி செலவுகளை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும். இதேநேரத்தில் டாடா குழுமத்தின் மொத்த வாடிக்கையாளர் அனுபவத்தையும் உயர்த்தும் என்று நிறுவனம் நம்புகிறது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications