இந்தியாவின் மிகப்பெரிய விமானச் சேவை நிறுவனமாக மாறி வரும் ஏர் இந்தியா சமீபத்தில் அதன் தாய் நிறுவனமான டாடா குழுமத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் அனைத்து விமானச் சேவை நிறுவனங்களை ஒன்றாக இணைக்கும் முயற்சியில் மாபெரும் வெற்றியை அடைந்தது மட்டும் அல்லாமல் அடுத்த ஒரு வருடத்திற்கு இந்த இணைப்பை முடிக்கத் திட்டமிட்டு உள்ளது.
இந்த நிலையில் இந்தியாவுக்குள் அதிகப்படியான இடங்களும், வெளிநாடுகளுக்கும் அதிகப்படியான இடங்களுக்கும் விமானப் போக்குவரத்து சேவை அளிக்கும் நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
இதேபோல் மலிவு விலை விமானச் சேவை முதல் எக்ஸ்கியூட்டிவ் விமானச் சேவை அளிக்கும் நிறுவனமாகவும் உள்ளது. இந்த நிலையில் டாடா குழுமம் ஏர் இந்தியாவை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்ல முக்கியமான திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது.
டாடா குழுமம்
டாடா குழுமம் தற்போது எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், ரீடைல் வர்த்தகத்தின் விரிவாக்கத்தில் எந்த அளவிற்கு முக்கியத்துவம் அளிக்கிறதோ, அதைவிட அதிகமான முக்கியத்துவத்தை ஏர் இந்தியா மீது வைத்துள்ளது.
என் சந்திரசேகரன்
மத்திய அரசிடம் பெரும் தொகை கொடுத்து வாங்கிய ஏர் இந்தியாவை விரைவில் லாபகரமான நிறுவனமாக மாற வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளார் டாடா சன்ஸ் தலைவர் என் சந்திரசேகரன்.
ஏர் இந்தியா
இந்த நிலையில் டாடா குழுமத்தின் ஏர் இந்தியா சுமார் 500 விமானங்களை ஆர்டர் செய்யும் திட்டத்தை நெருங்கியுள்ளது. உலகின் முன்னணி விமானத் தயாரிப்பு நிறுவனங்களான ஏர்பஸ் மற்றும் போயிங் ஆகியவற்றிடம் சுமார் 500 விமானங்களை ஆர்டர் செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
500 விமானங்கள்
இதில் 400 நேரோ பாடி விமானங்களையும், 100 வைட் பாடி விமானங்களையும் வாங்கத் திட்டமிட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 500 விமானங்களின் ஆர்டர் குறித்து டாடா, ஏர்பஸ், போயிங் ஆகிய நிறுவனங்கள் எவ்விதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.
100 பில்லியன் டாலர்
500 விமானங்களை வாங்க வேண்டும் என்றால் குறைந்த 100 பில்லியன் டாலராவது செலவு செய்ய வேண்டும், பல்க் ஆர்டர் என்பதால் ஏர்பஸ் மற்றும் போயிங் அதிகப்படியான டிஸ்கவுன்ட் கொடுத்த வாய்ப்பு உள்ளது. இதனால் சில பில்லியன் டாலர் விலை குறைய வாய்ப்பு உள்ளது.
இணைப்பு
சிங்கப்பூர் ஏர்லையன்ஸ் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தையில் டாடா குழுமம் வெற்றி அடைந்த நிலையில் டாடா குழுமம் தற்போது ஏர் இந்தியா என்னும் ஒரு நிறுவனத்தின் கீழ் விஸ்தாரா, ஏர் ஏசியா இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகிய 3 நிறுவனங்களை இணைத்து நாட்டின் 2வது பெரிய விமானச் சேவை நிறுவனமாக உயர்த்த உள்ளது.
217 விமானங்கள்
இந்த இணைப்பிற்குப் பின்பு விஸ்தாரா, ஏர் ஏசியா இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகிய பிராண்டுகளின் பெயரை நீக்கப்படும். மேலும் தற்போதைய நிலவரப்படி ஏர் இந்தியாவில் 111 விமானங்களும், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பிரிவில் 24 விமானங்களும், விஸ்தாரா நிறுவனத்தில் 54 விமானங்களும், ஏர் ஏசியா இந்தியா நிறுவனத்தில் 28 விமானங்கள் என மொத்தம் 217 விமானங்கள் கொண்டு ஏர் இந்தியா இயங்க உள்ளது.
விமானச் சேவை
ஏர் இந்தியா கட்டுப்பாட்டில் இருக்கும் 217 விமானங்கள் மற்றும் புதிதாக ஆர்டர் செய்யும் 500 விமானங்கள் மூலம் இதன் மூலம் ஏர் இந்தியா மலிவு விலை விமானச் சேவை முதல் வெளிநாட்டு விமானச் சேவை வரையில் ஏர் இந்தியா பிராண்ட் பெயரில் கொடுக்க முடியும். இது மட்டும் அல்லாமல் இந்திய விமானச் சேவையில் பெரும் தாக்கத்தை இந்த ஆர்டர் மூலம் செய்ய முடியும்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications